>>>ரூ.15 ஆயிரம் கோடி கல்வி துறைக்கு நிதி - அமைச்சர்

முசிறியில்  நடந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் பாப்பாசுந்தரம், துறையூர் இந்திராகாந்தி, மண்ணச்சநல்லூர் பூனாட்சி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன், எம்.பி., இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சிவபதி தலைமை வகித்து பேசியதாவது: அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவும், அனைத்து துறைகளும் முதன்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். கல்வி துறைக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை, மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ""100 ஆண்டு சாதனையை, ஓராண்டில் முடித்து, தமிழகத்தை, முதன்மை மாநிலமாக உயர்த்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,'' என்றார். மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ""மின் உற்பத்தியை பெருக்க, தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். பணிகள் புயல் வேகத்தில் நடந்து வருகிறது,''என்று பேசினார். வீட்டு வசதி அமைச்சர் வைத்திலிங்கம், உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட பலர், தமிழக முதல்வரின் சாதனைகளை விளக்கி பேசினர்.