"இளைஞர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், நாட்டின்
கல்வி இருக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி கூறினார். நாட்டின்
முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம்ஆசாத், பிறந்த நாளான, நவம்பர்
11, தேசிய கல்வி நாளாக அனுசரிக்கப்படுகிறது. டில்லியில் நேற்று நடந்த,
தேசிய கல்வி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி
கூறியதாவது: குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2009,
அபுல் கலாம் ஆசாத் விரும்பிய கல்வி மாற்றங்களில் ஒன்று. அனைவருக்கும்
துவக்க கல்வி கட்டாயம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 12வது
திட்ட காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளைஞர்களின் திறனை
மேம்படுத்தும் வகையில், நாட்டின் கல்வி இருக்க வேண்டும் என்பதில், மத்திய
அரசு முனைப்பாக உள்ளது. அதன் மூலம் நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வர
முடியும். இவ்வாறு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி கூறினார்.