அரையாண்டுத் தேர்வு அட்டவணையில், தேர்வின் இடையில் 10 நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாமலும்,
தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியாத தர்மசங்கடமான சூழ்நிலை
மாணவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆண்டுதோறும், 10 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில்
துவங்கி, 10 நாட்கள் நடைபெறும். பின், 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
இந்த ஆண்டு, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள தேர்வு
அட்டவணையின் படி, 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர் 19ம் தேதி துவங்கி,
ஜனவரி 7ம் தேதியிலும், பிளஸ் 2 தேர்வு, டிசம்பர் 19ம் தேதி துவங்கி,
ஜனவரி 10ம் தேதியும் நிறைவடைகின்றன. இதில், மொழித் தாள்கள் மட்டும் தொடர்ச்சியாக, டிசம்பர் 19ம் தேதி முதல்,
22ம் தேதி வரை நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தேர்வு, 10 நாட்களுக்குப்
பின், ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. பொதுவாக, தேர்வுகள் தொடர்ச்சியாகவோ, ஓரிரு
நாட்கள் இடைவெளியிலோ நடக்கும். இம்முறை, 10 நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட்டு உள்ளதால், விடுமுறையையும் நிம்மதியாக அனுபவிக்க முடியாமல்,
தேர்வுக்கும் முழு மனதுடன் தயாராக முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலாண்டு,
அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுவதன் முக்கிய நோக்கமே, கல்வியாண்டின்
துவக்கத்தில் இருந்து படித்த பாடங்களை, ஆண்டு இறுதித் தேர்வுக்கு முன்,
மீண்டும் ஒருமுறை மனப்பாடம் செய்து, எழுதி பார்ப்பதற்காக தான். ஒரு தேர்வு
முடிந்து, அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு முன், மாணவர்கள் உடல், மன ரீதியாக
தயார்படுத்திக் கொள்வதற்காக, விடுமுறை அளிக்கப் படுகிறது. இந்த ஆண்டு
தேர்வு முடிந்த பிறகு, விடுமுறை விடுவதற்கு பதிலாக, இடையிலேயே 10 நாட்கள்
விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாத நிலை ஏற்பட்டு
உள்ளதோடு, 10 நாட்களும் அவர்கள் தேர்வுக்கு பயனுள்ள முறையில் தயார்
ஆவார்களா என்பதும் சந்தேகமே. இது போன்ற செயல்களால் மாணவர்களுக்கு
தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த
ஆண்டு முதல், முப்பருவ கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பாடச்
சுமை அதிகரித்து உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பாடத்தை நடத்தி முடிக்க
வேண்டி உள்ளதால், விடுமுறை நாட்களை குறைக்கும் விதமாக, இம்முடிவு
மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றார்.