>>>புதிய முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது?

"புதிய முதுகலை ஆசிரியர்கள், ஜன., 10க்குள், பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும்.
இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.