>>>விரைவில் புதிய அறிவியல் கொள்கை: மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

அறிவியல் துறையில் பெண்களின் பங்கு மற்றும் வரும் 2020-ம் ஆண்டில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக உருவாவது குறித்த கொள்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு: வரும் ஜனவரி 3-ம் தேதி மேற்குவங்க மாநில தலைநகர் ‌கோல்கட்டாவில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேச உள்ளார். அப்‌போது அறிவியல்,தகவல் மற்றும் அறிவியல் துறையில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்துவது போன்ற கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவை அதிகரிப்பது குறித்த அறிவிப்பும் கொள்கை முடிவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஓப்புதல்: கடந்த 2003-ம் வகுக்கப்பட்ட அறிவியல் கொள்கை தற்போது பல்வேறு மாறுதல்களுடன் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்று பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 2020-ம் ஆண்டிற்குள் அறிவியல்துறையில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தி்யா நிலைநிறுத்திக்கொள்ள புதிய கொள்கை பயன்படும் என இத்துறை அதிகாரிகள் நம்‌பிக்கை தெரிவித்துள்ளனர்.