67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி



தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி


பெங்களூரு: Ok Credit என்ற நிறுவனத்தில் |இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு வேறு இடத்தில் வேலை வாங்கிக் கொடுக்கும் அந்நிறுவனத்தின் CEO ஹர்ஷ் போக்கர்னா


இதுவரை பணி நீக்கம் செய்த 70 பேரில், 67 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.


 “இது எங்களின் தவறு. இதற்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்” என ஹர்ஷ் கூறுகிறார்


அவரது பதிவு:


ஹர்ஷ் போகர்னா தலைமை நிர்வாக அதிகாரி @OkCredit | IIT கான்பூர் 


 "நாங்கள் 70 பேரை பணிநீக்கம் செய்தோம். இது எப்படி நடந்தது என்பது இங்கே... 

நாங்கள் அதிகமாக வேலை செய்து கொண்டிருந்தோம். மிக விரைவாக பணியமர்த்தினோம். இது எங்கள் தவறு. நாங்கள் அதை ஒப்புக் கொண்டோம். ஒரு நிறுவனராக நான் செய்த மிகக் கடினமான காரியங்களில் இதுவும் ஒன்று. 


ஆனால் நாங்கள் அதை சரியான வழியில் செய்ய முயற்சித்தோம். 70 பேரில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசினோம். என்ன தவறு நடந்தது, ஏன் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்போம் என்பதை அவர்களிடம் கூறினோம். 


நாங்கள் அவர்களுக்கு 3 மாத அறிவிப்பு கொடுத்தோம். பரிந்துரைகள், அறிமுகங்கள், வேலை வாய்ப்புகள் - உதவக்கூடிய எதையும் வழங்க உதவினோம். அறிவிப்பு காலம் முடிவதற்கு முன்பே 67 பேர் பணியமர்த்தப்பட்டனர். இயலாத 3 பேருக்கு, 2 மாத கூடுதல் சம்பளம் வழங்கினோம். 


ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் - இந்த ஆண்டு 120,000 க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலருக்கு அழைப்பு கூட வரவில்லை. சிலர் தடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இதை அறிந்தனர். சிலர் பகல் நேரத்தில் ஸ்லாக்கிலிருந்து நீக்கப்பட்டனர். அது மனிதாபிமானமற்றது. ஆம், பணிநீக்கங்கள் நடக்கின்றன. ஆனால் நீங்கள் அவற்றை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது உங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அனைத்தையும் கூறுகிறது. 


இந்த உரையாடல்களை நடத்துவது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் ஒரு நிறுவனரானபோது நாம் பதிவுசெய்தது இதுதான். 


நீங்கள் ஒருவரை வேலைக்கு அமர்த்தும்போது "குடும்பம்" என்று அழைத்தால், அவர்களை விடுவிக்கும்போதும் அவர்களை குடும்பமாக நடத்துங்கள்."




01-04-2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


01.04.2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


1. இனி வரும் நாட்களில் மின்சார கட்டணம் நேரடியாக EB account வில் செலுத்துவது போன்று இருக்கும்.


2. Selection grade arrear, increment arrear போன்றவற்றை தயார் செய்யும் பொழுது auto arrear calculation பயன்படுத்த வேண்டும். ( March 2024 முதல் எனேபிள் செய்யப்பட்டுள்ளது).


3. வங்கி கணக்கு எண் மாற்றம் செய்வதற்கு இனிமேல் கருவூலத்திற்கு செல்ல தேவையில்லை எப்பொழுதும் போன்ற DDO approval செய்தாலே போதுமானது.


4. புதிதாக பணியேற்றுள்ள பணியாளர்களுக்கு CPS நம்பர் புதிய IFHRMS number create செய்யும்பொழுது ஆட்டோமேட்டிக்காக generate ஆகும் இதில் basic pay zero என்றும் nominee details empty ஆகவும் இருக்கும் இதனை பின்னர் அப்டேட் செய்து கொள்ளலாம்.


5. Plus minus report சென்ற மாதம் வரை html file ஆக டவுன்லோட் ஆகியது இதில் *show all இன்று கொடுத்தோம் என்றால் மட்டுமே பில் குரூப்பில் உள்ள அனைத்து பணியாளர்களின் பெயரும் enable ஆகும்* இம்மாதத்தில் bill group வாரியாக plus minus report மற்றும் html பதிலாக pdf ஆக டவுன்லோட் ஆகும் என்று நம்புகிறோம்



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை Today's Thought 


Hope is life - a short story today


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


💠அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.


💠அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 


💠ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.


💠பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 


💠அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.


💠அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 


💠ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 


💠திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.


💠அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.


💠ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.


💠உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.


💠அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 


💠அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.


💠கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.


*💠ஆம்,💠*


*💠மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.*


*💠வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.*


*💠ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..*


*💠நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.*


*💠எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.*

*உறுதியாய் நம்புங்கள்..உங்கள் கனவெல்லாம்* *பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.....*


*💠 நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்*



EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு

 

 

EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு


கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்' இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழ்நாடு அரசு



மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவெடுத்த தமிழ்நாடு அரசு 


1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைகின்றன.


40 விழுக்காடு அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தகவல்.


10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களைக் கொண்ட தமிழ் பாடப் புத்தகம்.


மாணவர்கள் முழு பாடத் திட்டங்களையும் படிப்பதற்கு சிரமப்படுவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது.


வரும் ஜூன் மாதம் குறைக்கப்பட்ட புதிய தமிழ் பாடப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல்.


10ஆம் வகுப்பு தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள் - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள்? - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை


முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு - அறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்


வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்

 

வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் BEOs Transfer Counseling 


Information regarding the Block Education Officer transfer counselling 



 தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ 


      05-04-2025 காலை திருச்சி மாவட்டம் முசிறியில் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் நடத்தினார்.


  இக்கூட்டம் தொடங்கும் முன் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பணி ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிக்கொடை பெற இயலாமல் இருப்பது, தணிக்கைத் தடை மற்றும் கலந்தாய்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.


 07-02-2019 முதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஊதியம் நிர்ணயம்  செய்துள்ளது சரியானது என்பதை கூறியதோடு, கூட்டம் நடைபெறும் போது கூட்ட மேடையிலும் மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.


 தணிக்கை நீக்கம் குறித்து நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரிடம்  விவரம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


100 days Challenge மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் முடிவுற்றவுடன் கலந்தாய்வு  நடத்திடுவதாகவும் கூறினார்.


- இரா. தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்


முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்

 

முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்


Annual Exam 2025 - QP & Answer Key Download Schedule


Annual Examination 2025 - Dates to download question papers and answer keys


6 - 8ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் 04-04-2025

 


மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் 04-04-2025


Maruthamalai Murugan Temple Kumbabhishekam 04-04-2025





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


TNSTC - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர்  சுற்றறிக்கை


Tamil Nadu State Transport Corporation - Issuance of tickets through Digital / Card / QR Code Payment - Incentive prize for conductors who carry out more cashless transactions - Managing Director's Circular


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - தொடர்பாக -  சுற்றறிக்கை


TNSTC -  Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி ஆண்டு விழாவில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகள் - DSE Proceedings

 


பள்ளி ஆண்டு விழாவில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகள் - மீறும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 02-04-2025


DSE Proceedings - School Annual Day Instructions


Events to be avoided during the school annual day function - Action under the Civil Services Act against violating HeadMasters and Teachers - Proceedings of the Director of School Education, Date: 02-04-2025



பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவது மற்றும் சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் - இதை மீறும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - DSE Proceedings, Dated : 01-04-2025

 

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கடிதம், நாள் : 01-04-2025


Tasks to be completed by Headmasters and teachers within one week of the completion of the examinations - Letter from the Director of School Education, Date: 01-04-2025


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர் : TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர் : TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தேர்வெழுதும் உதவியாளரை, அவர்களே தேர்வு செய்து அழைத்து செல்ல அனுமதி வழங்க உத்தரவிட கோரிய மனு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 

100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள், நாள் : 03-04-2025


100 Days Challenge - Student Achievement Assessment Task - State Project Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




100 Days Challenge - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்







பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-04-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-04-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1005

அதிகாரம்: நன்றியில் செல்வம்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.

பொருள் :
பிறர்க்கு கொடுக்காதான், தானும் உண்ணாதான் இவனுக்கு பலகோடி இருந்தென்ன பயன்.


பழமொழி :
Set a thief to catch a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒருநாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். -- ஆபிரகாம்  லிங்கன்


பொது அறிவு :

1. நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

விடை:  ஆடுதுறை

2. மனித மூளையானது எத்தனை சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது?

விடை : 65%


English words & meanings :

Tablet.    -          மாத்திரை

Toothache.        -     பல் வலி


வேளாண்மையும் வாழ்வும் :

கைகழுவும் போது மடமடவென தண்ணீரை திறந்து விட்டு வீணாக்காதீர்கள்.


ஏப்ரல் 04

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.  மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்

மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.



நீதிக்கதை

நாயின்  தந்திரம்

ஒரு அரசர் ஓய்வுக்காக காட்டுக்குச் சென்ற போது, தன்னுடைய நாயையும் அழைத்துச் சென்றார். அவர் தனது வேட்டையில் மும்முரமாக இருந்த பொழுது நாய் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப்பூச்சியை பிடித்துக் கொண்டு காட்டில் வெகு தூரம் சென்று விட்டது.

சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதை நாய் கண்டது. அது தன்னைத்தான் வேட்டையாட வருகிறது என்பதை அறிந்து கொண்ட நாய் எப்படி தப்பிப்பது என்று யோசித்தது.

தூரத்தில் சில எலும்பு துண்டுகள் கீழே கிடந்ததை பார்த்தது. சட்டென்று  நாய்க்கு ஒரு யோசனை தோன்ற, புலிக்கு முதுகை காட்டியபடி எலும்பு துண்டுகளுக்கு அருகில் உட்கார்ந்தது.

புலி அருகில் வந்ததும் நாய்,"ஆஹா புலியின் மாமிசம் எவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்றது.

இதனை கேட்ட புலிக்கு பயம் வந்தது. நாயை, புலி வேறு ஏதோ புதிய மிருகம் என எண்ணிக் கொண்டது.நல்ல வேலை இந்த மிருகத்திடம் நாம் அகப்பட்டுக் கொள்ளவில்லை என்று நினைத்தது.

கீழே நடந்ததை மரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது.

நாய், புலியை ஏமாற்றியதை    புலியிடம் சென்று கூறி அதன் மூலம் தனக்கு பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்று எண்ணி புலியிடம், "அது பெரிய மிருகம் ஒன்றும் இல்லை வெறும் நாய் தான்"என்று விளக்கிக் கூறியது

உடனே புலி," அந்த நாய்க்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்கின்றேன்" என்று திரும்பி நாய் இருந்த இடத்தை நோக்கி வந்தது.

குரங்குடன் புலியும் சேர்ந்து வருவதை பார்த்த நாய் ஏதோ தவறாக நடக்கப் போவதை யூகித்தது. எனவே முன்பு அமர்ந்ததைப் போலவே அமர்ந்துகொண்டு, " என்ன இது!அந்த குரங்கு சென்று எவ்வளவு நேரம் ஆனது,புலியை ஏமாற்றி அழைத்துக் கொண்டு வருவதாய் சென்ற குரங்கை இன்னும் காணவில்லையே" என்று கூறியது.

அதனை கேட்ட புலி,  தன்னை ஏமாற்றியது குரங்கு என்று எண்ணி,குரங்கை ஒரே அடி அடித்து விட்டு தன் உயிர் பிழைக்க ஓட்டமாய் காட்டுக்குள் ஓடியது.

நீதி : சமயோசிதமாக  செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்



இன்றைய செய்திகள்

04.04.2025

* ரூ. 45 இலட்சத்தில் சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள் நிறுவப்படும் என தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் தகவல்.

* கோயம்புத்தூர் மாநகராட்சியில் செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

* கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

* அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

* தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றுள்ளார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி.


Today's Headlines

* The Tamil Nadu Fisheries Development Corporation has announced that fish waste recycling plants will be established in Chennai, Ramanathapuram, and Thoothukudi at a cost of ₹4.5 million.


   * The construction of the Classical Tamil Park is undergoing within the Central Prison complex in Coimbatore  Corporation.

   * The Supreme Court has upheld the Calcutta High Court's order canceling the appointments of 25,753 individuals, stating that the West Bengal teacher recruitment in 2016 was illegal.

   * China has urged the United States to immediately withdraw the recently imposed tariffs and has stated that it will retaliate to protect its national interests.

   * Tamil Nadu's S.S. Madhunisha won 2 medals in the National Sub-Junior Archery Competition.

   * Bengaluru FC defeated Goa in the Indian Super League (ISL) football match.


Covai women ICT_போதிமரம்


ஏப்ரல் 4 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


ஏப்ரல் 4 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday declared for Ramanathapuram district on April 4


 ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, ஏப்ரல் 04 அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்

 

Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்


 உயர் தொழில்நுட்ப ஆய்வகம், திறன் வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு


 Respected DEOs,


Kindly disseminate the following instructions to schools immediately.


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 


 Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,


தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 


Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.


 கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 


வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 


 தொழில்நுட்ப குறைபாடுகள் ( server computer not working, smart board not working, UPS Problem, meraki problem) இருப்பின் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 


Network problem இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 


Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 


அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.


 விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம்


 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம், தற்போதைய நிலை - மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடிதம், நாள் : 03-04-2025


Details of differently abled persons working on consolidated pay, current status - Letter from the Director of Welfare of the Differently-abled, Date: 03-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு சார்ந்த அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எவரேனும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியம் அல்லது தற்காலிக பணியில் இணைந்திருப்பின் அதன் விவரத்தை தங்கள் அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 



லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது



 லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது


திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி கைது.


எழுத்தர் சசிகுமாரின் பழைய சம்பள பாக்கியை தர ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றபோது டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் ஜோதியை கையும் களவுமாக கைது செய்தனர்.


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு

 


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு


தங்கத்தின் விலை 38% குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.


டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக தங்கம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.


தங்கம் விலை சுமார் 38 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு


நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.


இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும். இதில் 38% என்பது ரூ.3250 ஆகும்.


இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.


இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.


என்ன சொல்கிறார் நிபுணர்?

தங்கம் விலை குறையும்! - எவ்வளவு?



உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது, இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.


ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை 38% குறையும் என்று கூறியுள்ளார்.


அவர் தற்போதுள்ள தங்கத்தின் விலையில் 38 சதவீதம் வரை குறையலாம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 3,250 வரையில் தங்கத்தின் விலை குறையக்கூடும்


அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்" என்று கணித்துள்ளார்.


இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.


சமீப நாள்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்திருந்தது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே வரி விதித்து அதனை அறிவித்துள்ளார். இதுவும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


உச்சத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இந்திய ரூபாயில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3 கிராம் ஆகும். அந்த வகையில், சர்வதேச சந்தையில் கிராம் ஒன்று சுமார் ரூ.8,330 ஆக உள்ளது என கூறலாம். சென்னையை பொறுத்தவரை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.68,480 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,560 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டும் என பலர் கூறி வருகின்றனர்.



தங்கம் விலை 38% குறையும் - கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக 38% வரை குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. 


அதாவது, யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளாராம். அதாவது, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த நிலையில், இதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.




Gold Price: ஜான் வில்ஸ் கூறும் 3 காரணங்கள்

ஜான் மில்ஸ் இதற்கு 3 காரணங்களை சொல்கிறார். தங்கம் விலை அதிகரிப்பால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும்; தங்கத்தின் மீதிருக்கும் தற்போதைய டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறையாது; உலகில் உச்சம் தொடும் ஒன்று நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடையும் என்பதை வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம் - என இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை 38% குறையும் என்கிறார்.



Gold Price: கணிப்பு மெய்யாகுமா...?

ஆனால், இன்னும் சில பொருளாதார நிபுணர்களோ இவர் கூறும் காரணங்களை ஏற்க மறுக்கின்றனர். தங்கத்தின் டிமாண்ட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அது இந்தளவிற்கு வீழ்ச்சியை காணாது என்றும் சிலர் கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் நிலவரத்தை  ஜான் வில்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். நிச்சயம் தங்கம் விலை 38% வீழ்ச்சி அடையாது என பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.


ஜான் மில்ஸ் என்கிற அமெரிக்க அனலிஸ்ட் தங்கத்தின் விலை தற்போதைக்கு அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் 38% வரை குறையும் என கணித்திருக்கிறார். அதே சமயம், தற்போதைய தங்கத்தின் விலைக்கும், இந்த கணிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


இந்த மூன்று நிகழ்வுகள் நடந்தால், தங்கத்தின் விலை குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.



1. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும் என கணிக்கிறார் மில்ஸ்.


2. தங்கத்தின் மீதிருக்கும் இந்த டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தில் இப்போது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், இந்த முதலீடு மேலும் அதிகரிக்காது என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறையலாம் அல்லது இதே அளவில் இருக்கலாமே ஒழிய, முதலீடு அதிகரிக்காது .


3. பொதுவாகவே உச்சம் தொடும் எந்தவொரு விஷயமும் , கீழ் இறங்கும் என்பதே இத்தனை ஆண்டுகால வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.


ஜான் மில்ஸ் இப்படி கணித்திருந்தாலும், அமெரிக்க வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ் உள்ளிட்ட பிரபல கணிப்பாளர்கள் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயரவே வாய்ப்பதிகம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


 100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 03-04-2025


100 Days Challenge - Proceedings of the Director of Elementary Education to conduct assessment test for students on 04.04.2025 and 16.04.2025, Dated: 03-04-2025








பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்



திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்


திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் என அறிவிப்பு.



தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மகள் கைது



 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மகள் கைது


நாகப்பட்டினத்தில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். 


இதன்படி நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து விட்டு கையெப்பம் பெற்றார். அப்போது அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி, முககவசம் அணிந்து இருந்தார்.


இதில் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியிடம் முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 


அதில், அவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வாம்பிகை என்பதும், இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும், கடந்த 28ம் தேதி நடந்த தமிழ் பாடத் தேர்வை இதே போல் முகக்கவசம் அணிந்து செல்வாம்பிகை தேர்வு எழுதியதும் தெரிய வந்தது. 


இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வந்த போலீசார், செல்வாம்பிகையை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-04-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

குறள் எண்:1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்?

பொருள்:
எவராலும் விரும்பப்படாத கருமி தனக்கு பிறகு என்று எதை கருதுகின்றான்?


பழமொழி :
செய்யத் தக்கதை ,

செயத்தக்க வழியில் செய்வதே அழகு.

Whatever is worth doing, is worth doing well.


இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில் இருக்கிறது. -- மகாத்மா காந்தி


பொது அறிவு :

1. குமரி மாவட்டத்தின் பழைய பெயர் என்ன?

விடை : நாஞ்சில் நாடு.       

2. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் என்ன?

விடை: ஒடிசா


English words & meanings :

Stomach ache.     -    வயிற்று வலி

Surgery.    -    அறுவை சிகிச்சை


வேளாண்மையும் வாழ்வும் :

குற்றால அருவியில் குளிப்பதாய் நினைத்துக் கொண்டு ஷவரில் தண்ணீரை திறந்து விடாமல் குளிப்பதற்குக் குறைந்த அளவு தண்ணீரையே பயன்படுத்துங்கள்.


நீதிக்கதை

பறவையும் ஆமையும்

ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது.

அப்பொழுது பறவையின் கூடு அழகாக இல்லை என்றும், அசிங்கமாக, உடைந்த குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆமை, பறவையை

மட்டம் தட்டிக் கேலி பேசியது. ஆனால், தனது வீடான தன் முதுகின் மீதுள்ள ஓடு,

சரியான வடிவம் கொண்டு பலமாக இருப்பதாகக் கூறியது.

அதைக் கேட்ட பறவை என்னுடைய கூடு உடைந்து அசிங்கமாக இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நானே உருவாக்கியது; இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்தது.

மேலும் ஆமை, தனது கூட்டை விட உனது கூடு சிறந்தது அல்ல என்று பறவையிடம் கூறியது.

அதைக்கேட்ட பறவை தனது கூடு தான் உனது கூட்டினை விட சிறந்தது; ஏனெனில் தனது குடும்பம்

மற்றும் நண்பர்கள் தன்னுடன் இந்த கூட்டில் சேர்ந்து வாழ முடியும்; ஆனால் உனது கூட்டில் உன்னை தவிர வேறு யாரும் நுழையக்கூட முடியாது என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தது.அந்த பதிலைக் கேட்ட ஆமை சற்று சிந்தித்தது.

நீதி: தனியாக பெரிய பங்களாவில் வசிப்பதை விட, உறவு மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய வீட்டில் வசிப்பது சந்தோசம்.


இன்றைய செய்திகள்

03.04.2025

* விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் நேற்று முழு கடையடைப்பு.

* தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* திருநங்கைகளுக்காக நாடு முழுவதும் 18 இல்லங்கள்: மத்திய அரசு தகவல்.

* இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

* சென்னையில் நேற்று முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.


Today's Headlines

*During the 3rd phase of the excavation in Vembakottai at Virudhunagar district many valuable artifacts were found already. Now they found a small golden ball in 2.04 metre depth.

*There is bundh in Nilgiris district yesterday, urging authorities to cancel the e-pass practice.

*Heavy rains are likely to occur for four days in Tamil Nadu. Prediction by India Metrological department

*18 Homes across the country for transgender people: Central Government Information.

*US President Donald Trump is reportedly engaged in a serious consultation on 100% tax on India's agricultural products.

*Tickets for the match between Chennai Super Kings and Delhi Capitals started in the IPL cricket match.

*The first Sabha Club men basketball tournament will be held in Chennai from yesterday to 7th.


Covai women ICT_போதிமரம்


NMMS 2024-2025 Final Answer Key

 

NMMS 2024-2025 Final Key Answer Released by DGE



>>> Click Here to Download...


1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை - DEE செயல்முறைகள்

 

1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Revised Term 3 Exam / Annual Examination Timetable for Classes 1 - 5 - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


Supreme Court order in the case of Is TET necessary for promotion?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் 27-03-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,


NCTE நிறுவனம் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு TET இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள், TET யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்து தெளிவான விபரங்களை அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவிட மாண்பமை உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


UPON hearing the counsel the Court made the following

 O R D E R

1. Heard in part.

2. List on 03rd April, 2025 once again, high on board.

3. In the meanwhile, National Council for Teacher Education (NCTE) shall provide to the office of the learned Attorney General for India all data and information that is sought to facilitate advancement of submissions on the point of the Teachers’ Eligibility Test (TET) being a mandatory qualification for teachers in position although, in the past, NCTE has issued orders granting exemption to a specified class.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை & பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை வெளியீடு

 

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை (நிலை) எண் : 77, நாள் : 29-03-2025 வெளியீடு - அரசாணை குறித்த தெளிவுரை தொடர்பாக பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை


G.O. (Ms) No : 77, Dated : 29-03-2025 - Reducing the registration fee by 1% to Houses, plots & agricultural lands worth up to ₹10 lakh registered in the name of women - Government Order & Circular issued by the Head of Registration Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


 அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்


1 ஆம் வகுப்பில் மட்டும் 1,05,286 பேர் சேர்ந்துள்ளனர்


மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல் ஏராளமானோர் ஆர்வமுடன் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்"


 - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்



ஒருங்கிணைந்த பள்ளி மானியம் - பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025


 ஒருங்கிணைந்த பள்ளி மானியம், ஆண்டு விழா தொகை & பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொகை - பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025


Composite School Grant, Annual Day Grant & SMC Reconstitution Grant - Utilization Certificate 2024-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1003

அதிகாரம்:நன்றிஇச் செல்வம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கும் பொறை.

பொருள்:
சேர்த்த பொருளை இறுக்கி வைத்துக் கொண்டு, ஈகை புகழில்லாத ஆடவர் பூமிக்கு பாரமாவர்.


பழமொழி :
செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.


இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால்,  என் நேரத்தை மட்டும் கேட்காதே!---நெப்போலியன்  ஹில்


பொது அறிவு :

1. தண்ணீரில் போட்டால் மிதக்கும் கோள் எது?

விடை : சனி.      

2. மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது?

விடை: சகாரா பாலைவனம்


English words & meanings :

Ointment.      -   களிம்பு மருந்து

Powder.     -       பொடி


வேளாண்மையும் வாழ்வும் :

ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்த முடியும்.


ஏப்ரல் 02

கவிக்குயில் சரோஜினி அவர்களின் நினைவுநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.


நீதிக்கதை

நன்றி மறந்த சிங்கம் |

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி

நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று

நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்?  என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.அனைத்தையும்

கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்.“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள்.  முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

நீதி : ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறக்க கூடாது. மறந்தால் தீமை நமக்கே.


இன்றைய செய்திகள்

02.04.2025

* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.

* இதுவரை அரசு


பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு

* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.

* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


Today's Headlines

* A wooden bridge is  opened in the middle of the forest in Mumbai!


The newly built forest corridor in Malabar Hill, Mumbai, opened yesterday.

* So far
Admission of 1,17,310 students in government schools - Education Minister Anbil Mahesh is proud.

* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code

* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan

* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.

* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy.


Covai women ICT_போதிமரம்