கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

 

NMMS 2024-2025 Final Key Answer Released by DGE



>>> Click Here to Download...


1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை - DEE செயல்முறைகள்

 

1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Revised Term 3 Exam / Annual Examination Timetable for Classes 1 - 5 - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


Supreme Court order in the case of Is TET necessary for promotion?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் 27-03-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,


NCTE நிறுவனம் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு TET இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள், TET யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்து தெளிவான விபரங்களை அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவிட மாண்பமை உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


UPON hearing the counsel the Court made the following

 O R D E R

1. Heard in part.

2. List on 03rd April, 2025 once again, high on board.

3. In the meanwhile, National Council for Teacher Education (NCTE) shall provide to the office of the learned Attorney General for India all data and information that is sought to facilitate advancement of submissions on the point of the Teachers’ Eligibility Test (TET) being a mandatory qualification for teachers in position although, in the past, NCTE has issued orders granting exemption to a specified class.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை & பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை வெளியீடு

 

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை (நிலை) எண் : 77, நாள் : 29-03-2025 வெளியீடு - அரசாணை குறித்த தெளிவுரை தொடர்பாக பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை


G.O. (Ms) No : 77, Dated : 29-03-2025 - Reducing the registration fee by 1% to Houses, plots & agricultural lands worth up to ₹10 lakh registered in the name of women - Government Order & Circular issued by the Head of Registration Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


 அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்


1 ஆம் வகுப்பில் மட்டும் 1,05,286 பேர் சேர்ந்துள்ளனர்


மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல் ஏராளமானோர் ஆர்வமுடன் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்"


 - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்



ஒருங்கிணைந்த பள்ளி மானியம் - பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025


 ஒருங்கிணைந்த பள்ளி மானியம், ஆண்டு விழா தொகை & பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொகை - பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025


Composite School Grant, Annual Day Grant & SMC Reconstitution Grant - Utilization Certificate 2024-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1003

அதிகாரம்:நன்றிஇச் செல்வம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கும் பொறை.

பொருள்:
சேர்த்த பொருளை இறுக்கி வைத்துக் கொண்டு, ஈகை புகழில்லாத ஆடவர் பூமிக்கு பாரமாவர்.


பழமொழி :
செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.


இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால்,  என் நேரத்தை மட்டும் கேட்காதே!---நெப்போலியன்  ஹில்


பொது அறிவு :

1. தண்ணீரில் போட்டால் மிதக்கும் கோள் எது?

விடை : சனி.      

2. மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது?

விடை: சகாரா பாலைவனம்


English words & meanings :

Ointment.      -   களிம்பு மருந்து

Powder.     -       பொடி


வேளாண்மையும் வாழ்வும் :

ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்த முடியும்.


ஏப்ரல் 02

கவிக்குயில் சரோஜினி அவர்களின் நினைவுநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.


நீதிக்கதை

நன்றி மறந்த சிங்கம் |

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி

நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று

நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்?  என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.அனைத்தையும்

கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்.“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள்.  முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

நீதி : ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறக்க கூடாது. மறந்தால் தீமை நமக்கே.


இன்றைய செய்திகள்

02.04.2025

* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.

* இதுவரை அரசு


பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு

* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.

* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


Today's Headlines

* A wooden bridge is  opened in the middle of the forest in Mumbai!


The newly built forest corridor in Malabar Hill, Mumbai, opened yesterday.

* So far
Admission of 1,17,310 students in government schools - Education Minister Anbil Mahesh is proud.

* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code

* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan

* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.

* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy.


Covai women ICT_போதிமரம்


7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு


7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு


Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette


 போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழில் வெளியீடு



ஒரு மாதத்திற்கு முன்பே மியான்மர் நிலநடுக்கத்தை கணித்து சொன்ன ஹைதராபாத் புவியியல் ஆய்வாளர் : குவியும் பாராட்டுகள்

 


ஒரு மாதத்திற்கு முன்பே மியான்மர் நிலநடுக்கத்தை கணித்து சொன்ன ஹைதராபாத் புவியியல் ஆய்வாளர் - குவியும் பாராட்டுகள்


Hyderabad geologist predicts Myanmar earthquake a month in advance - heaps of praise



மியான்மருக்குப் பிறகு ஹைதராபாத் நில அதிர்வு ஆர்வலரின் X பதிவு விவாதத்தைத் தூண்டுகிறது 


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மியான்மரின் மண்டலே அருகே ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த பூகம்ப ஆர்வலர் ஒருவர் பிப்ரவரி 28 அன்று வெளியிட்ட X பதிவு, நில அதிர்வு வல்லுநர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. 


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு. சைனிக்புரியைச் சேர்ந்த ஜிஐஎஸ் பொறியாளரும், இயந்திர பொறியியலில் டிப்ளோமா பெற்ற எலூரைச் சேர்ந்தவருமான சிவா சீதாராம் பகிர்ந்து கொண்ட இந்த கணிப்பு, மண்டலே, நெய்பிடாவ் மற்றும் சிட்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஆயத்தொலைவுகள் 21.54°N 94.34°E க்கு அருகில் ~6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கணிப்பு தேதி பிப்ரவரி 28 ஆகும். 


மார்ச் மாத இறுதியில் மியான்மரின் சாகிங் ஃபால்ட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 


அவர் ஹைதராபாத்தில் சீஸ்மோ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவினார். "நான் பல அளவுருக்களைப் பயன்படுத்தினேன். 100 இல் 18 வழக்குகள் என்பது நல்ல வெற்றி விகிதம். சில நேரங்களில் தேதி ஒன்று முதல் சில மாதங்கள் வரை மாறுபடலாம், ஆனால் உண்மையான மற்றும் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கும், வெற்றிகரமான கணிப்புகளில் இடம் மற்றும் அதிர்வெண்" என்று அவர் மேலும் கூறினார்.


ஜிஐஎஸ் அமைப்புகளுடன் பணிபுரியும் சீதாராம், 2004 முதல் பூகம்பங்களை ஆராய்ந்து வருகிறார், ஆரம்ப எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கு சூரிய கதிர்வீச்சு வடிவங்கள், புவி காந்தப்புல மாற்றங்கள், வளிமண்டல தரவு மற்றும் வானிலை மாதிரிகள் போன்ற முறைகளின் கலவையைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார். 







அவரது வலைத்தளமான seismo.in, 10க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலநடுக்கங்களைக் கண்காணித்து, ஜப்பான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளுக்கான கணிப்புகளையும் உள்ளடக்கியது. அவர் ஆறு ஆண்டுகால பூகம்பத் தரவைப் பராமரித்து வருவதாகவும், 100க்கும் மேற்பட்ட கணிப்புகளைச் செய்துள்ளதாகவும், அவற்றில் சுமார் 18 கணிப்புகள் உண்மையான நிகழ்வுகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறுகிறார். 


அடுத்த சில மாதங்களில் தர்மசாலாவில் 7க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அவர் இப்போது கணித்துள்ளார். தற்செயல் நிகழ்வு இருந்தபோதிலும், நிபுணர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். 


தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NGRI) முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீநாகேஷ், சிவாவின் பணிகளைக் கவனித்து வருவதாக ஒப்புக்கொண்டார். "அவரது கணிப்புகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது, ஆனால் அவை அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். இந்திய மற்றும் மியான்மர் டெக்டோனிக் தட்டுகள் தொடர்பு கொள்ளும் சாகிங் ஃபாயில்ட்டில் சமீபத்திய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 


அங்கு ஏற்பட்ட ஒன்பது பெரிய நிலநடுக்கங்களில், ஏழு ரிக்டர் அளவை விட 7 அதிகமாக இருந்தது. கடைசியாக 2012 இல் ஏற்பட்டது. அரசாங்கங்கள் கணிப்புகளை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீநாகேஷ் வலியுறுத்தினார். 



X post by Hyderabadi Seismology Enthusiast Sparks Debate After Myanmar 


An X post on February 28 by a Hyderabad-based earthquake enthusiast predicting a tremor near Mandalay, Myanmar, has triggered discussion among seismologists and citizens alike, after a 7.7 magnitude quake struck the region nearly a month later.


The prediction, shared by Siva Sitaram, a GIS Engineer from Sainikpuri and a native of Eluru with a diploma in mechanical engineering, mentioned a potential ~6.5 magnitude earthquake near coordinates 21.54°N 94.34°E—covering regions like Mandalay, Naypyidaw, and Sittwe. The prediction date was February 28. A 7.7 magnitude quake eventually occurred along Myanmar’s Sagaing fault in late march.
He founded Seismo research and development center in Hyderabad.


“I used multiple parameters. 18 out of 100 cases is good success rate. Sometimes the date may vary one to few months but location and frequency in predictions that were successful where actuals and predictions are same” he added.


Sitaram, who works with GIS systems and has been researching earthquakes since 2004, claims to use a combination of methods—solar radiation patterns, geomagnetic field changes, atmospheric data, and weather models—to issue early warnings. His website, seismo.in, tracks earthquakes across more than 10 countries and includes predictions for regions like Japan, Ethiopia, the Philippines, and India.
He says he has maintained six years of earthquake data and made over 100 predictions, of which about 18 have matched with actual events. He now predicts quake of more than 7 magnitude in Dharamshala in next few months.
Despite the coincidence, experts remain cautious. Dr. Srinagesh, former Chief Scientist at the National Geophysical Research Institute (NGRI), acknowledged he has been observing Siva’s work. “We can’t dismiss his predictions outright, but they must be scientifically validated,” he said. He pointed out that the recent quake occurred along the Sagaing fault, where both the Indian and Myanmar tectonic plates interact. Of the nine major quakes there, seven exceeded magnitude 7. The last one was in 2012.
Srinagesh emphasized that instead of relying solely on predictions, governments should focus on strengthening infrastructure in high-risk zones. @epic_earthquake

#MyanmarEarthquake #Hyderabad


நகராட்சி / மாநகராட்சி ஆணையர்கள் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விவரம் - இயக்குநரின் கடிதம்

 


நகராட்சி / மாநகராட்சி ஆணையர்கள் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விவரம் - நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம், நாள் : 28-03-2025


Details of posts to be appointed by Municipal / Corporation Commissioners - Letter from the Municipal Administrative Director, Date: 28-03-2025


Filling up of posts in Municipalities and Corporations 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மார்ச் 29 அன்று கிராம சபைக் கூட்டம் - முழு எழுத்தறிவு பெற்ற கிராமம் என தீர்மானம் நிறைவேற்றுதல் - இயக்குநரின் கடிதம்

 


மார்ச் 29 அன்று கிராம சபைக் கூட்டம் - முழு எழுத்தறிவு பெற்ற கிராமம் என தீர்மானம் நிறைவேற்றுதல் - இயக்குநரின் கடிதம் 



Gram Sabha meeting on March 29 - Resolution passed to make the village fully literate - Director's letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...