வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் BEOs Transfer Counseling
Information regarding the Block Education Officer transfer counselling
தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
05-04-2025 காலை திருச்சி மாவட்டம் முசிறியில் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் நடத்தினார்.
இக்கூட்டம் தொடங்கும் முன் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பணி ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிக்கொடை பெற இயலாமல் இருப்பது, தணிக்கைத் தடை மற்றும் கலந்தாய்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.
07-02-2019 முதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது சரியானது என்பதை கூறியதோடு, கூட்டம் நடைபெறும் போது கூட்ட மேடையிலும் மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
தணிக்கை நீக்கம் குறித்து நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரிடம் விவரம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
100 days Challenge மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் முடிவுற்றவுடன் கலந்தாய்வு நடத்திடுவதாகவும் கூறினார்.
- இரா. தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்