TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்



 TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:


நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை புதிய செயலியில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் பின்வரும்வாறு வழங்கப்படுகிறது. 


வருகைப்பதிவு:

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெறும் அன்றே நமது பெற்றோர்  செயலியில் “உறுப்பினர் வருகை” என்ற optionஇல் உறுப்பினர்களின் வருகையைப் பதிவிட வேண்டும் . 

எப்போதெல்லாம் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் தவறாமல் உறுப்பினர்களின் வருகையை செயலியில் பதிவிட வேண்டும். 


தீர்மானங்கள் உள்ளீடு செய்தல்:

பழைய செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு அந்த தேவை  நிறைவேறாமல் (Unresolved) இருப்பின், அவ்வாறான தேவை இன்னும் உங்கள் பள்ளியில் இருந்தால் கூட்டத்தில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை புதிய செயலியில் மீண்டும் பதிவிட வேண்டும். 

ஆகஸ்ட்-2025 இல் நடைபெற்ற மறுகட்டமைப்பு முதல் தற்போது வரை பல்வேறு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவ்வாறான தீர்மானங்களை நடைபெற இருக்கும் கூட்டத்தில் பதிய செயலியில் உரிய தலைப்பு மற்றும் உப தலைப்பின் கீழ் சென்று உள்ளீடு செய்ய வேண்டும். 

பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெறும் நாளன்று , உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தைச்  சுற்றி பார்வையிட்டபின், அப்போது கண்டறிந்த தேவைகளை பட்டியலிட்டு  உறுப்பினர்களுடன்  கலந்தாலோசித்து  சேர்ந்து முடிவெடுத்து செயலியில் தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும் . 

தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற குறைந்த பட்சம் 50 சதவிகித உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் 

செயலியில் பதிவிடப்படும் அனைத்து தீர்மானங்களும் பள்ளி மேலாண்மைக்  குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். 

தீர்மானங்களைப் பதிவு செய்யும் போது அதன் விவரங்களை  சரியாக பதிவு செய்ய வேண்டும், 

புகைப்படம் பதிவு செய்ய வேண்டிய தீர்மானங்களுக்கு மிகவும் பொருத்தமான புகைப்படத்தை தேர்வு செய்து  பதிவு  செய்ய வேண்டும். 

சில தீர்மானங்களுக்கு “முன்” மற்றும் “பின்” நிலையைக்  காட்டும் இரண்டு புகைப்படங்களையும், தேவைப்படும் இடங்களில் மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தீர்மானங்களுக்கு  உரிய தகவல்களை உரிய இடத்தில் பதிவு செய்த பின்பு , மேலும்  அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் “விவரிக்கவும் / காரணம்/ விளக்கம்” என்று குறிப்பிட்டு கேட்கப்பட்ட  இடங்களில்  மட்டும் தட்டச்சு செய்து பதிவு செய்ய வேண்டும் .


தீர்மானங்களின் நிலையை பதிவு செய்யும் போது (Status update ) செய்ய வேண்டியவை :

தீர்மானங்களின் நிலையில் முன்னேற்றம் இருக்கும் போதும், முழுமையாக தேவை பூர்த்தியான பின்பும், நிறைவேறும் போதும், தீர்மான முன்னேற்ற நிலையை உடனுக்குடன் செயலியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

தீர்மானங்களாக இயற்றிய தேவைகள் முழுமையாக நிறைவடைந்து , வேலை நடந்து முடிந்தால் மட்டுமே, நிறைவேற்றப்பட்டது என்று செயலியில் பதிவு செய்யவேண்டும்.

தேவை முழுமையாகப் பூர்த்தியாகாமல் “நிறைவடைந்தது” என்று பதிவு செய்யப்பட்டால், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளால், தேவை நிறைவடைய எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போய்விடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.