TNSED புதிய பெற்றோர் செயலியின் சிறப்பம்சங்கள்
Highlights of TNSED Parents New App
TNSED புதிய பெற்றோர் செயலி
• கடந்த இரண்டு ஆண்டுகளில் SMC கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்தும், பதிவேட்டில் பதிவான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டும் நமக்குக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அரசின் துறைகள் பள்ளியின் தேவைகளான தீர்மானங்களை எடுத்து உடனே வேலையைத் தொடங்க , தகவல்களை தெளிவாகப் பெறும் மேம்பட்ட வசதிகளோடு புதிய செயலி தேவை அறியப்பட்டது.
• தலைவர் , HM மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களை பரவலாக அறிந்தபோது , பள்ளியின் தேவைகளை செயலி வழியாக பதிவு செய்யும்போது செயலியில் மேம்படுத்த வேண்டியவை பற்றிய கருத்துக்கள் சேகரிகக்கப்பட்டது.
• இந்தச் செயலி
o SMC தலைவர் , HM இருவரும் இணைந்து தீர்மானங்களை செயலியில் பதிய வேண்டுமென்பதால், செயலி பெற்றோர், SMC தலைவர், HM ஆகியோருக்கு எளிதில் புரியும் வகையிலும்,
o பள்ளியின் அனைத்து தேவைகளையும் ஒரு தொகுப்பாகக் காணும் வகையிலும்,
o தீர்மானங்கள் மீது துறைகள் நடவடிக்கை எடுக்க ஏதுவான வகையிலும்,
இந்த புதிய பெற்றோர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
TNSED புதிய பெற்றோர் செயலி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்
புதிய செயலியில் பள்ளியின் தீர்மானங்களைப் பதிவிட, பள்ளியின் தேவைகள் 6 தலைப்புகளாக பிரிக்கப்பட்டது.
1. Emergency (அவசரத்தேவை)
2. மாணவர்கள்
3. கற்றல்
4. நலத்திட்டங்கள், உதவித்தொகைகள்
5. பள்ளி வளாகம்
6. ஆசிரியர்கள், பணியாளர்கள்
o Emergency தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ உயர் மின்னழுத்தக் கம்பிகள் (HT Line)
▪ குறைந்த மின்னழுத்தக் கம்பிகள் (LT Line)
▪ டிரான்ஸ்பார்மர்
▪ மின்கம்பம்
▪ மின் இணைப்பு
▪ மின் கசிவு - ஷாக் அடிக்கிறது
▪ எர்த் கம்பி ( Earth wire )
▪ கட்டிடங்கள் - இடிக்க வேண்டியது
▪ அறுவை சிகிச்சையை உறுதிசெய்தல்
▪ பள்ளிச்சூழல் பாதுகாப்பு
▪ கற்பித்தலுக்கு இடையூறு
▪ பள்ளி செயல்பட கட்டிடம் இல்லை.
▪ பள்ளி வளாகத்தை சேதப்படுத்துதல்
▪ கிணறு குழிகள் - ( மூடி போடுதல் )
▪ பாம்புகள் நடமாட்டம்
▪ வனவிலங்கு நடமாட்டம்
▪ திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு அருகில்
▪ திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு உள்ளே
▪ திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு அருகில்
▪ திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு உள்ளே
▪ திறந்தநிலை ஆழ்துளைக் கிணறு - ( மூடி போடுதல் )
▪ மழைத்தண்ணீர் தேங்கியுள்ளது
▪ அருகில் குளம் ,கண்மாய் ( தடுப்பு தேவை )
▪ பள்ளி முன்பு நெடுஞ்சாலை ( வேகத்தடை தேவை )
▪ ஆபத்து உருவாக்கும் மரம் , கிளை அகற்றுதல்
▪ நான்கு வழிச் சாலை - பேருந்து வேண்டும்
▪ மலைப்பகுதி - பேருந்து வேண்டும்
▪ காட்டுப்பகுதி - பேருந்து வேண்டும்
▪ பேருந்து நிறுத்தம் வேண்டும் - பள்ளி அருகே
▪ பேருந்து பயணத்தில் மாணவர்களுக்கு நெருக்கடிகள்
o மாணவர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ குழந்தைகளின் ஆரோக்கியம்
▪ குழந்தைகளின் பாதுகாப்பு
▪ போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல்
o கற்றல் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ கற்பித்தலுக்கு துணை செய்யும் கருவிகள்
▪ வகுப்பறை கற்றலுக் கற்பித்தல் பொருட்கள்
o நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ நலத்திட்டங்கள்
▪ அரசு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள்
▪ அரசு உதவித்தொகைகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் தேர்வுகள்
o பள்ளி வளாகம் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ கட்டிடங்கள்
▪ தண்ணீர்
▪ மின்சாரம்
▪ காலை / மதிய உணவு
▪ வளாகப் பொருட்கள்
▪ பொது வளாகம்
o ஆசிரியர்கள், பணியாளர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்
▪ ஆசிரியர்
▪ ஆசிரியர் பாதுகாப்பு
▪ பணியாளர்கள் தேவை
▪ பயிற்சிகள்
• மேல்கண்ட ஒவ்வொரு தொகுப்பிற்கு உள்ளேயும் அது தொடர்பான தேவைகளின் பட்டியலும் . அதன் தொடர்ச்சியாக உப தேவைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது
• செயலியில் தீர்மானங்களைத் தேட ஏதுவாக Search Option ஆனது தேவைகளைப் பட்டியலிடும் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது
• செயலியில் தீர்மானங்கள் சார்ந்து அனைத்து தகவல்களும் சரியாகவும் முழுமையாகவும் பெறப்படுகிறது
உதாரணத்துக்கு :
புதிய பேருந்து வசதி வேண்டும் ‘ என்ற தேவை ( தீர்மானம்) புதிய செயலியில் எவ்வாறு இருக்கிறது ,அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும் கீழே காணலாம்
அதாவது பேருந்து வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி ஒரே பக்கத்தில் பதிவிட்டு Submit கொடுக்க முடியும்.
இன்னொரு உதாரணமாக பள்ளியில் புதிய மாணவிகள் கழிப்பறை என்ற தேவை (தீர்மானம் ) புதிய செயலியில் எவ்வாறு இருக்கிறது , அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும் கீழே காணலாம்
அதாவது கழிப்பறை வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி பதிவிட்டு Submit கொடுக்க முடியும்
• செயலியில் பெறப்படும் தீர்மானங்கள், அந்தந்த தேவை சார்ந்து முழு விபரங்களைப் பதிவிட ஏதுவாக இடம்பெற்றுள்ளது
• செயலியில் தகவலுக்காக மட்டும் பெற்றுக்கொள்ளப்படும் - என்ற பகுதி இடம் பெற்றுள்ளது . அதாவது ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிய தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் பகுதி இது . அவற்றை பதிவிடும் பதிவிடங்கள் இடம்பெற்றுள்ளன.
• தீர்மானங்கள் சார்ந்தும் பள்ளிக்குழந்தைகள் நலன் சார்ந்தும் தேவையான நேரங்களில் ஆர்வத்துடன் தங்கள் நேரத்தை ஒதுக்கி, பள்ளி மேலாண்மைக் குழு உறுபினர்கள் பள்ளிக்காக செய்யும் வேலைகளைப் பற்றி பதிவிடும் “SMC பங்கேற்று உதவியது “ என்ற option கொடுக்கப்பட்டுள்ளது.
• தேவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று சொல்வதோடு , அதன் தரத்தைப் பற்றி கூறும் – அதாவது மதிப்பீடு செய்ய ஏதுவாக options உருவாக்கப்பட்டுள்ளது
• முக்கியமாக குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி வளாகத்திலும் , அதைச் சுற்றிலும் உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவைகளை தீர்மானங்களாகப் பதிவு செய்ய , ‘Emergency needs – மிக அவசரமாக சரி செய்ய வேண்டிய தேவைகள்’ என்று தொகுத்து , செயலியில் நுழைந்ததுமே நாம் பார்க்கும் படியாக முதல் தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது
• மிக மிக அவசியமான தேவைகள் தீர்மானங்களாக இந்த செயலியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது
இப்படி பல புதிய அம்சங்கள் கொண்ட செயலியை பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் TNSED பெற்றோர் செயலி பற்றிய காணொளித் தொகுப்பு (video manual) மற்றும் வழிகாட்டும் PPT போன்றவை மாநில அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.