D.M.K. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை



தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை


2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று (22-12-2025) கூடியது. 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30-க்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், வர்த்தகரணி துணைத்தலைவர் அமைச்சர் கோவி.செழியன், சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 


தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், 


ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம், ‘கனவு தமிழ்நாடு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.