இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ?

 


இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ?


தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்கள் 5,67,07,380.


இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.


https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம்.


அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம்.


மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.


பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.