தமிழ்நாடு நாள் விழா - கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் பரிசுகள் விவரம்
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் திருவள்ளுவராண்டு 2057 / பராபவ ஆண்டு / ஆனி மாதம்
ந.க.எண்.2647/ஆ3/ 2026 நாள்: 13.07.2026
பொருள்
தமிழ் வளர்ச்சித் துறை - காஞ்சிபுரம் மாவட்டம் - தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் - தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுதல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14.07.2026 அன்று பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துதல் தொடர்பாக
பார்வை : காஞ்சிபுரம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரின் கடித ந.க.எண்.312/2026 நாள்:10.07.2026
பார்வையில் காணும் கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வறிவிப்பிற்கிணங்க 2026-2027-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 14.072026 அன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் 09.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / நிதியுதவி பெறும் / நலத்துறை மற்றும் மெட்ரிக் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மேற்படி போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டும் கலந்து கொள்ளச் செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
போட்டிக்கான தலைப்புகள்
கட்டுரை
தமிழ்நாடு கருவானது முதல் உருவானது வரை
பேச்சு
1. நான் விரும்பும் தமிழ்நாடு
2 அன்றைய மெட்ராஸ் மாகாணம்
இன்றைய நவீன தமிழ்நாடு
3. இளைஞர்களின் தமிழ்நடு பார்வையில்
4. கல்வியில் சிறந்த தமிழ்நாடு
5. வீரம் செறித்த தமிழ்நாடு
பரிசு விவரம்
கட்டுரைப் போட்டி
முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசு ரூ.7,000/-
மூன்றாம் பரிசு ரூ.5,000/-
பேச்சுப் போட்டி
முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசு ரூ.7,000/-
மூன்றாம் பரிசு ரூ.5,000/-
இணைப்பு:-பார்வையில் காணும் கடித நகல்
முதன்மைக் கல்வி அலுவலருக்காக
காஞ்சிபுரம்.
பெறுநர்
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்டம்.
நகல்
1 மாவட்டக் கல்வி அலுவலர்
(இடைநிலை/தொடக்கக் கல்வி தனியார் பள்ளிகள்)
காஞ்சிபுரம்
2 உதவி இயக்குநர்.
தமிழ்வளர்ச்சித் துறை காஞ்சிபுரம்.
3. தலைமை ஆசிரியர்,பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.(உரிய ஏற்பாடுகள் செய்யும்பொருட்டு)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.