Hotspot சேவை | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த Airtel நிறுவனம்



வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஏர்டெல் நிறுவனம்


5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது என ஏர்டெல் நிறுவனம் விளக்கம்.


அதேபோல் ஏர்டெல் 5G plus கிடைக்கும் இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் என அறிவிப்பு.


ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் பொழுது தங்களால் 5ஜி பயன்படுத்த முடிவதில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இவ்வளவு நாட்களாக பயனர்களுக்கு தெரியாமல் இருந்த ஏர்டெல் நிறுவனத்தின் விதிகள் இப்போது பேசுபொருளாகியுள்ளது


ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டா என்றே விளம்பரப்படுத்துகிறது. இதனால் பலரும் பிராட்பேண்ட்டிற்கு தனியாக ரீசார்ஜ் செய்வதை தவிர்த்துவிட்டு, செல்போன் ரீசார்ஜ்ஜை வைத்தே இணையத்தை பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், சமீப காலமாக அன்லிமிடெட் 5ஜி கிடைப்பதில்லை என்று பரவலாக புகார் எழுந்தது.


இந்தச் சூழலில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் 5G திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து பயன்படுத்த முடியாதாம். மேலும், சில குறிப்பிட்ட திட்டங்களில் அதிகபட்சமே 300GB வரை மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம். தற்போது தெரியவந்துள்ள இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


உத்சவ் டெக்கி என்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின் ஸ்கிரீன்ஷாட்டை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. 


அதாவது ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுக்குப் பகிர முடியாதாம். இதுவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்த நிபந்தனை முன்பே தெரியாது என்றும் அன்லிமிடெட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இதுபோல போலியாக ஏமாற்றக்கூடாது எனவும் கொந்தளித்து வருகிறார்கள்.


இது மட்டுமின்றி ஏர்டெல், அன்லிமிடெட் 5G டேட்டா என்பது ஏர்டெல் 5G பிளஸ் நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே செயல்படுமாம். 5G கவரேஜ் இல்லாத இடங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது திட்டத்தின் வழக்கமான டேட்டா வரம்பை மட்டுமே பயன்படுத்த முடியும். அது முடிந்துவிட்டால் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது அன்லிமிடெட் 5G டேட்டாக்குள் வராது எனவும் கூறப்படுகிறது.


இது ஒரு பக்கம் இருக்க ரூ.399 ரீசார்ஜ் தொடர்பாகவும் விவாதம் எழுந்துள்ளது. இணையதள பயனாளர் ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையம் அனுப்பியதாக சொல்லி ஒரு மெயிலை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் ரூ.399 திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா என குறிப்பிடப்பட்டு இருந்தாலும்.. 30 நாட்களுக்குள் 300GB வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் பயன்படுத்தப்பட்டால் அது வணிக ரீதியான பயன்பாடாக கருதப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.


இது தொடர்பாகவும் இணையதள பயன்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். 300GB என்று வரம்பு இருந்தால் அதை எப்படி அன்லிமிடெட் திட்டம் என்று கூறலாம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக அதிகளவு டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் வசதி இல்லாமல் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நம்பி வேலை செய்பவர்கள், இந்த விதிகளால் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்..


மேலும் சிலர் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை ஒப்பிட்டு, ஏர்டெல் அதிக கட்டணம் வசூலிப்பதோடு மட்டுமல்லாமல் 300GB வரம்பு மற்றும் ஹாட்ஸ்பாட் கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளையும் விதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஏர்டெல் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.