கருவூலம் மற்றும் கணக்குத் துறை - தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow Chart) அனுப்புதல் தொடர்பாக
01.01.2026ன் படி அனைத்து பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு TAPS திட்டத்தின் படி பணம் வழங்குதல்
பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பாக கருவூல கணக்குக் துறை கூடுதல் வழி காட்டு நெறிமுறைகள் வெளியீடு , நாள் : 22.07.2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருவூலக் கணக்கு துறை
அனுப்புநர்:
இயக்குநர்,
கருவூலக் கணக்கு இயக்குநரகம்,
(ப.ஓ.திபிரிவு), 571, 5-வதுதளம். பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, நந்தனம், சென்னை -35.
பெறுநர்:
அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் /சம்பளக் கணக்கு அலுவலர்கள் /கருவூல அலுவலர்கள்.
ந.க.எண்.11711/ப. ஓ.தி./2026, நாள்:22.07.2026
ஐயா/அம்மையீர்,
பொருள்:
கருவூலம் மற்றும் கணக்குத் துறை இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow chart) அனுப்புதல்-தொடர்பாக.
பார்வை:
1. அரசாணை எண்.7 நிதி (HTC) துறை, நாள்: 09.01.2026.
2. அரசாணை எண் 111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026.
3. அரசுக் கடித எண் 1419011/ நிதித் துறை (TAPS) /2026-3, நாள்: 02.07.2026.
4 இவ்வலுவலக கடித எண்:11711/ ப.ஓ.தி. /2026, நாள்:10.07.2026
01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற /பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்திட ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பான செயல்பாட்டு வழிமுறை (Flow chart) இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
எனவே. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு மேற்குறிப்பிட்ட செயல்பாட்டு வழிமுறையினை (Flow Chart) தெரிவித்து, அவற்றை முறையாக பின்பற்றி இடைக்கால தொகை (Interim payout) வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு இடைக்கால தொகை (Interim payout) வழங்கப்பட்ட விவரம் குறித்த அணைத்து தகவல்களையும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் உள்ளவாறு தனிப்பதிவேடு கொண்டு உரிய முறையில் எவ்வித விடுபாடும் இன்றி பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் மண்டல இணை இயக்குநர்கள் இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் நேரடியாக செயல்பாட்டினை திறனாய்வு செய்திடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இணைப்பு : மேற்கூறியவாறு
ஓம்/-இயக்குநர்,
// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
கருவூலக் கணக்கு இயக்குநரகம்.
முதன்மை கணக்கு அலுவலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.