Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2026 ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்குவதற்காக  17.07.2026 முதல் 03.08.2026 வரை ஆசிரியர்கள் EMIS வாயிலாக விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைவான அளவிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அளவை 06.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பகுதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள (partially completed) விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் அவற்றினை முழுமையான அளவில்(fully completed) பதிவேற்றம் செய்யும் பணியினை துரிதப்படுத்துமாறும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க. எண். 010095/ஐ/இ1/2026, நாள் 31.07.2026


பொருள்:


பள்ளிக் கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2026 - EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யத் தெரிவித்தது விண்ணப்பப் பதிவேற்றத்திற்கு கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் & மாவட்டத் தேர்வுக்குழு அளவில் மதிப்பீடு செய்வதற்கான கால அட்டவணை - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை, 05.08.2022.


2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண். 010095/ஐ/இ1/2026, , 15.07.2026.


பார்வை 1ல் காணும் அரசாணையின் 2026 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்குவதற்காக பார்வை 20 காணும் செயல்முறைகளின்படி 17.07.2026 முதல் 03.08.2026 வரை ஆசிரியர்கள் EMIS வாயிலாக விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைவான அளவிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கால அளவை 06.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 31.07.2026 அன்றைய விண்ணப்பங்களின் முன்னேற்ற நிலையினை கருத்தில் கொண்டு, பகுதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள (partially completed) விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் அவற்றினை முழுமையான அளவில்(fully completed) பதிவேற்றம் செய்யும் பணியினை துரிதப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மேலும் ஆசிரியர்களின் விண்ணப்பப் பதிவேற்றம் 06.08.2026 அன்று நிறைவடைந்தவுடன் அடுத்த நிலையாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க/இடைநிலை/தனியார் பள்ளிகள்) 07.08.2026 முதல் 11.08.2026-க்குள் முதற்கட்டமாக ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்டத் தேர்வுக்குழுவிற்கு இணையவழியில் EMIS login வழியாக சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறது. கால தாமதத்தினை தவிர்ப்பதற்காக இம்முறை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அடுத்த நிலையாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் EMIS login ல் சமர்ப்பிக்கப்படும் (வட்டாரக் கல்வி அலுவலர் நிலை தவிர்த்து).


மாவட்டக் கல்வி அலுவலர்கள் பார்வை 1ல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியுள்ள விண்ணப்பங்களை மாவட்டத் தேர்வுக்குழுவிற்கு இணையவழியில் சமர்ப்பித்திட வேண்டும் (மதிப்பீடு செய்யத் தேவையில்லை).


மாவட்டக் கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அளவு 11.08.2026 அன்று நிறைவடைந்தவுடன், 12.08.2026 முதல் 17.08.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்க்கண்டவாறு மாவட்டத்தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 90 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியானது நிறைவு செய்யப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு இரு மடங்கிலான விண்ணப்பங்களை (1:2) மாநிலத் தேர்வுக்குழுவிற்கு இணையவழியில் சமர்ப்பித்திட வேண்டும். விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பொழுது பார்வை காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொள்ளுமாறும். தங்களால் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டத் தேர்வுக்குழு 


எண்.     பதவி.     குழுவில் பதவி


1 முதன்மைக் கல்வி அலுவலர்

தலைவர்


2 முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

உறுப்பினர்


3 மாவட்டக் கல்வி அலுவலர்கள்

உறுப்பினர்


4 மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


5 உயர்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


6 முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர்

உறுப்பினர்


மேலும் மாவட்டத் தேர்வுக்குழு மதிப்பீடு செய்வதற்கான ஆசிரியர் வகை வாரியான மதிப்பெண் விவரக் கையேடு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


இணைப்பு:-


1. விண்ணப்பங்களின் இன்றைய முன்னேற்ற நிலை


2. மதிப்பெண் விவரக் கையேடு


பெறுநர்


1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

2. முதன்மை தொழில்நுட்ப அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், செ-06 (உரிய நடவடிக்கைக்காக)


நகல்


1. இயக்குநர். தொடக்கக்கல்வி இயக்ககம், செ-06 (உரிய நடவடிக்கைக்காக) 

2. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், செ-06 (உரிய நடவடிக்கைக்காக)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.