அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்
* செல்போனில் பேசியபடியும் ஒற்றைக் கையால் பேருந்தை இயக்கியதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே, மற்றொரு கையால் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
* தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* மேலும், சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தி இருந்தனர்.
்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.