பெரியார் அறிவுலகம் விசிட் அனுபவம்
Experience of visiting Periyar Arivulagam
கோவையின் நவீன அடையாளங்களில் ஒன்றாக மாறிய பெரியார் அறிவுலகம்
பசுமை போர்த்திய புல்வெளி பிரம்மாண்ட பார்க்கிங் என்ற இடத்தில் பெரியாரும் நூலகமும் கம்பீரமாய் இருந்தன.
* முதல் தளத்தில் நேராக ஏறியவுடன் கொண்டு சென்ற பையினை கீழே வைத்து வருமாறு அறிவுறுத்தினர். வைப்பு அறையில் இன்னும் ஆட்கள் இல்லாததால நாமே கொண்டு சென்று வைத்து செல்லலாம். லாக்கர் வசதி உள்ளதால் பின்னர் பூட்டி செல்லும் வசதி கொடுக்கப்படலாம்.
அத்ற்கு வெளியே காத்திருக்க இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
* தரை தளத்தில் கலையரங்கமும் கோளரங்கமும் வரவேற்றது. விர்ச்சுவல் தகவலுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது
கோளரங்க நிகழ்வுகள் 11, 12, 2 & 3 மணிக்கு துவங்கும். திங்கள் விடுமுறை. நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர். அறிவியல் தொழில் நுட்ப ஆய்வறை பிரமிப்பாக உள்ளது.
* எஸ்கலேட்டர் வழியாக முதல் தளம் சென்றபோது வலது புறம் STEM (Science Technology Engineering Maths ) செயல்பாட்டு கண்காட்சி அறை உள்ளது.
* அறிவியல் கருத்துகளைச் செயல்வழியாகப் புரிந்துகொள்ள உதவும் நவீனக் கருவிகள், STEM ஆய்வகம், மெய்நிகர் காட்சி (VR), மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் காட்சி (AR) போன்ற வசதிகள் உள்ளன
* இரண்டாம் தளத்தில் குழந்தைகள் பிரிவு சிறார் அரங்கம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது
* மூன்றாவது தளம் போட்டித்தேர்வுக்கு தயார் செய்வோர் அதிகம் பேர் வருகை புரிந்தபடி இருந்தனர்.
TNPSC, UPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான சிறப்புப் படிப்பக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
* நான்காவது தளமான தமிழ் நூல்கள் பிரிவு அமைதியும், வாசிக்கும் மனநிலையும் உண்டாக்கும் விதத்தில் இருந்தது. புத்தகங்கள் அனைத்தும் புதிதாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. படிக்காத பல புத்தகங்கள் இருந்தன. கலை , இலக்கியம், மொழிபெயர்ப்பு சங்க கால நூல்கள் என இத்தளத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. அமர்ந்து படிக்க அழகிய இருக்கைகள் இருந்தன
* ஐந்தாவது தளத்தில் ஆங்கில நூல்கள் அதே போன்று. நான் சென்ற நேரத்தில் யாருமில்லை.
* எல்லா தளங்களிலும் பார்வையாளர் பதிவேட்டில் பெயர் & கையொப்பம் வாங்குகின்றனர்
* புத்தகம் கொடுப்பது குறித்து அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆகவே அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம்
* தினசரி காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை நூலக நேரம் தான்
* காவலர்கள் அனைத்து தளங்களிலும் இருந்தனர்
* பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வருகை புரிந்த வண்ணம் இருந்தனர்
* ஒப்பனை அறை (Rest room) அத்தனை தூயமையாக இருந்தது
* ஒவ்வொரு தளத்திலும் இரு மின்தூக்கிகள் இருந்தன. நுழைவு வாயில் சென்சார் உதவியுடன் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது.
* மாலையில் வெளியே அமர புல்வெளியில் இருக்கை அமைத்துள்ளனர்.
* பெரியார் அறிவுலகத்தை ஒரு நூலகமாக மட்டும் பார்க்க முடியாது. புத்தக வாசிப்பு, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், பகுத்தறிவு ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் முயற்சியாக இதைப் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.