மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்ணாடி கூரைப் பெட்டி (Vistadome Coach)
இந்தப் பெட்டிகளின் சிறப்பம்சமே அவற்றின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கூரைகள்தான். மலைகள் மற்றும் ஆறுகளின் இயற்கை அழகு நிறைந்த வழித்தடங்களில், இந்தப் பெட்டிகள் ரயில் பயணத்தை மறக்க முடியாததாக மாற்ற உதவுகின்றன.
செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை இருபுறமும் ரசிக்கலாம். பல திரைப்படங்களில் கண்டு களித்த உயரமான 13 கண் பாலத்தையும் இந்த ரயிலில் பயணித்தபடியே ரசிக்கலாம்.
முதல்முறையாகத் தென் இந்தியாவில் மதுரையிலிருந்து தென்காசி, செங்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படுகின்றது.
வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை வியாழன் முதல் திங்கட்கிழமை வரையில் இந்தப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் (எண்: 16327) 22.10.2026 முதல் 15.01.2027 வரை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்தப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மறு மார்க்கத்தில் (எண்: 16328) 23.10.2026 முதல் 16.01.2027 வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்தப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.