ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை



 ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை


விசித்திரமான வரலாறு 


இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின்  மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2026க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹45000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

சூழல் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

 


ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு : தூத்துக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் துணிகரம்


தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, பெண் ஆசிரியையிடம் 16 பவுன் தங்கத் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையனைப் போலீசார்  தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், செவ்வாய் அன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காகப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான்.


சங்கிலியைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட சங்கிலியின் மதிப்பு ரூ. 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய கொள்ளையனைப் பிடிக்க மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Neral To Matheran Toy Train



 🚂 நெரால் டு மாதேரான் : மேகங்களுக்கு நடுவே செல்லும் பொம்மை ரயில் பயணம்! 🌧️🌲 Neral To Matheran Toy Train


சுற்றிலும் அடர்ந்த பச்சைக்காடுகள்... கையில் தொடும் அளவுக்கு மேகக்கூட்டங்கள்... மலைகளின் வளைவு நெளிவுகளில் மெதுவாக ஊர்ந்து செல்லும் சின்னஞ்சிறு பொம்மை ரயில்! 🚂💚


மகாராஷ்டிரா மாநிலத்தின் சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் மாதேரான் (Matheran) மலைப்பிரதேசத்திற்கு, நெரால் (Neral) ரயில் நிலையத்திலிருந்து செல்லக்கூடிய இந்த நூற்றாண்டு கால 'டாய் ட்ரெயின்' பயணம், Matheran Hill Railway இந்திய ரயில்வேயின் ஒரு வரலாற்று மேஜிக்! 🌟


🛑 முக்கிய அறிவிப்பு (Monsoon Closure Info):

கனமழை, நிலச்சரிவு மற்றும் தண்டவாள பாதுகாப்பு கருதி, நெரால் - மாதேரான் இடையேயான முழுமையான டாய் ட்ரெயின் சேவை ஜூன் 15 முதல் அக்டோபர் 15 வரை நிறுத்தப்பட்டுள்ளது! 🛑🌧️


(குறிப்பு: வழக்கம்போல மழைக்காலம் முடிந்ததும் அக்டோபர் 15-க்கு பிறகு இந்த ரயில் சேவை மீண்டும் முழுவீச்சில் தொடங்கும்!)


🔷சரி இப்போது எப்படிச் செல்வது?:

 நெராலிலிருந்து அமன் லாட்ஜ் (Aman Lodge) வரை ஷேர் டாக்சியில் செல்லலாம். அல்லது சொந்த வாகனங்கள் மூலம் கூட செல்லலாம்.


 அங்கிருந்து மாதேரான் வரை இயங்கும் குறுகிய தூர ஷட்டில் ரயில் (Shuttle Train) அல்லது நடைபயணம் மூலம் மாதேரானை அடையலாம்!


🛣️ பயண பாதையில் என்னவெல்லாம் பார்க்கலாம்? 


சுமார் 21 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாதையில் ரயில் 3 மணி நேரம் மெதுவாகச் செல்லும். 


🔷சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதி (Eco-Sensitive Zone):

 மாதேரானுக்குள் மோட்டார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது! அதனால் இங்கு வீசும் காற்று அவ்வளவு தூய்மையாக இருக்கும்.


🔷280-க்கும் மேற்பட்ட வளைவுகள் (Sharp Curves):

 மலைகளைச் சுற்றிச் சுற்றி ரயில் செல்லும்போது கிடைக்கும் இயற்கை பின்னணி காட்சிகள் வேற லெவல்!


🔷ஒன் கிஸ் டன்னல் (One Kiss Tunnel):

 இந்த ரயில் பாதையில் இருக்கும் ஒரே ஒரு குறுகிய அழகான குகைப் பாதை.


வழியில்  சிறிய ரயிலின் ஜன்னல் வழியே பார்த்தால் பாதாள பள்ளத்தாக்குகளும், கொட்டும் சிறிய நீர்வீழ்ச்சிகளும் கண்ணுக்கு விருந்தளிக்கும். 🌊⛰️


💡 பயணிகளுக்கு  டிப்ஸ்:

 அக்டோபர் 15-க்கு பிறகு குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு செல்ல பிளான் பண்ணுங்க!


 நெரால் ரயில் நிலையத்திலேயே நேரடியாக டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

மலைகளின் அழகை ரசிக்க... இதுவே மிகச்சிறந்த பயணம்! ✊🚂🌧️


இல்லை நான் இப்போதே செல்கிறேன் என்றாலும் காரில் அல்லது இருசக்கர வாகனத்தில் சென்று மாதேரான் அழகை மனதார ரசித்து மகிழலாம்.


📍 Route: Neral Junction --> Aman Lodge