கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உலகளவில் ஆபத்தான தொழிலில் 11.5 கோடி குழந்தைகள்

"உலக அளவில் ஆபத்தான தொழிலில் ஈடுபட்டுள்ள, 11.5 கோடி குழந்தை தொழிலாளர்களில் ஆண்டு தோறும், 2,200 குழந்தைகள் உயிர் இழக்கின்றனர்" என, சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சூசம்மா வர்கீஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் கும்மிடிப்பூண்டி, "சிப்காட்&' உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில், ஆபத்தான தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை முழுமையாக ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்சாலை பூங்கா வளாகத்தில் நடந்த கூட்டத்தில், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சூசம்மா வர்கீஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: உலகளவில், 21.50 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில், 11.50 கோடி குழந்தை தொழிலாளர்கள், பட்டாசு, ரசாயனம், சாயப்பட்டறை உள்ளிட்ட ஆபத்தான தொழிற்சாலை வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 2,200 குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். படிப்பின்மையும், வறுமையுமே இதற்கு முக்கிய காரணம். இந்த முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் மட்டுமின்றி, அதன் தொடர்புடைய சார்பு நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர்கள் முறை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சமுதாய வளர்ச்சிக்காக, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி வழங்க, அரசுடன் தொழிற்சாலை நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

  கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...