கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (Samagra Shiksha - Advice on the Acquisition of Learning and Teaching Materials in the Districts for Illam Thedi Kalvi Centers - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 29-11-2021...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (Samagra Shiksha - Advice on the Acquisition of Learning and Teaching Materials in the Districts for Illam Thedi Kalvi Centers - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 29-11-2021...

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின், கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி (Tamilnadu Government raising the income limit for scholarships for the Backward, Most Backward and Denotified Community students) அரசாணை (நிலை) எண்: 68, நாள்: 18-11-2021 வெளியீடு...

  பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின், கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி (Tamilnadu Government raising the income limit for scholarships for the Backward, Most Backward and Denotified Community students) அரசாணை (நிலை) எண்: 68, நாள்: 18-11-2021 வெளியீடு...



வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்களை EMIS தளத்தில் 02.12.2021ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலரின் உள்ளீட்டில் பதிவேற்றம் செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Uploading the details of the Block Educational Officers on the EMIS site by 02.12.2021 in CEO Login - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 16932/ஐ1/2021, நாள்: 29-11-2021...



>>> வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்களை EMIS தளத்தில் 02.12.2021ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலரின் உள்ளீட்டில் பதிவேற்றம் செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Uploading the details of the Block Educational Officers on the EMIS site by 02.12.2021 in CEO Login  - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 16932/ஐ1/2021, நாள்: 29-11-2021...

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக (PTA மூலம் நிரப்ப உள்ள) உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் (P.G. Assistant Vacant Places in Thanjavur District)...

 


>>> தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக (PTA மூலம் நிரப்ப உள்ள) உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் (P.G. Assistant Vacant Places in Thanjavur District)...


மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...



 மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு...


பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. 


பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக உயர்வு. 


பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரவும், இடைநிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் உதவும் - தமிழக அரசு.

சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்...

 தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 469 குடும்பங்களுக்கு அரசு சார்பில் பாத்திரம், உடைகள், இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 2015க்கு பிறகு தமிழகத்தில் தற்போது பெரிய அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும் பொதுப்பணித்துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவற்றை இடிக்க நோட்டீஸ் தரப்படும்.  மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Pre Matric Scholarship schemes for Minorities - Apply date extended...

Pre Matric Scholarship schemes for Minorities - Apply date extended...



கனமழை காரணமாக விடுமுறை அளிப்பதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் - கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 


>>> கனமழை காரணமாக விடுமுறை அளிப்பதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் - கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


அந்தியூர் அருகே உடல்நலம் குன்றிய ஆசிரியரை தொட்டில் கட்டி 7 கி.மீ தூக்கிச் சென்ற கிராம மக்கள்...

 அந்தியூர் அருகே உடல்நலம் குன்றிய ஆசிரியரை தொட்டில் கட்டி 7 கி.மீ தூக்கிச் சென்ற கிராம மக்கள்...



மழை விடுமுறைக்கு நன்றி தெரிவித்த மாணவருக்கு விருதுநகர் கலெக்டரின் அறிவுரை - சோஷியல் மீடியாவை மூடு, சோஷியல் சயின்ஸைப் படி...

 மழை விடுமுறைக்கு நன்றி தெரிவித்த மாணவருக்கு விருதுநகர் கலெக்டரின் அறிவுரை - சோஷியல் மீடியாவை மூடு, சோஷியல் சயின்ஸைப் படி...



பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு போனஸ் ஊதிய உயர்வு கிடையாது - தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (No Bonus Increment for those who leave the promotion and work in the same position - CEO Proceedings)...

 


>>> பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு போனஸ் ஊதிய உயர்வு கிடையாது - தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (No Bonus Increment for those who leave the promotion and work in the same position - CEO Proceedings)...


பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு இனி தேர்வு நிலை சிறப்பு நிலை கிடையாது என்ற தூத்துக்குடி CEO உத்தரவு.



இயக்குநரின் செயல்முறைகளின்படி பணித்துறப்பு செய்து விட்டு 30 ஆண்டுகள் ஒரே பதவியில் இருப்பவர்கள் , ஊக்க ஊதிய உயர்வு பெறத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , மேற்கண்ட செயல்முறைகளின்படி , அன்னார் பட்டதாரி ஆசிரியர் ( சமூக அறிவியல் ) பதவி உயர்வினை துறப்பு செய்தமையால் போனஸ் ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட இயலாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய (30-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 30, 2021




ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்ப்புகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். விலகி இருந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



அஸ்வினி : இன்னல்கள் குறையும். 


பரணி : அனுகூலம் உண்டாகும். 


கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 30, 2021




மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பயணங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : காலதாமதம் குறையும். 


ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 30, 2021




குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய சலுகைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் விருப்பம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.


திருவாதிரை : விருப்பம் உண்டாகும்.


புனர்பூசம் : மேன்மையான நாள்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 30, 2021




மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு மற்றும் குறுந்தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.


பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ஆயில்யம் : சாதகமான நாள்

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 30, 2021




வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் சுமூகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் சிலருக்கு ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். மதிப்பு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூரம் : உபாதைகள் நீங்கும்.


உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 30, 2021




எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சிலரது சந்திப்பின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் விழிப்புணர்வு வேண்டும். கனிவான பேச்சுக்கள் பலதரப்பட்ட ஆதரவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : காரியங்கள் நிறைவேறும். 


அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 30, 2021




உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக மாறுவார்கள். பலதரப்பட்ட செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.


சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும். 


விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 30, 2021




குடும்ப பெரியோர்களிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் லாபம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூமி விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.


அனுஷம் : லாபம் மேம்படும்.


கேட்டை : விருத்தி உண்டாகும்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 30, 2021




இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் உறவுகள் மேம்படும். வீண் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் மறைமுகமான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : மந்தத்தன்மை குறையும். 


பூராடம் : உறவுகள் மேம்படும். 


உத்திராடம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 30, 2021




தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களது எண்ணங்களை புரிந்து ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் நட்பு வட்டம் விரிவடையும். புதிய வியாபார பணிகளில் சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மேன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : வெற்றிகரமான நாள். 


அவிட்டம் : தடைகள் நீங்கும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 30, 2021




உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். தாய்மாமன் வழியில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


சதயம் : சிந்தித்து செயல்படவும். 


பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 30, 2021




குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டார நட்புகள் மேம்படும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். நன்மைகள் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : நட்பு வட்டம் விரிவடையும். 


ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-11-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.11.21

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:அமைச்சியல்


அதிகாரம்:அமைச்சு


குறள் எண்:631

குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.


பொருள் :ஒரு செயலைச் செய்ய ஏற்ற கருவி,காலம், செயல்வகை,செலவின் அருமை ஆகியவற்றை ஆராய்ந்து செய்பவனே அமைச்சன் ஆவான்.


பழமொழி :

As the fool thing so, the bell clicks.

பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்


இரண்டொழுக்க பண்புகள் :


1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 


2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.


பொன்மொழி :


எதிலும் அளவுகடந்த பற்றுக் கொள்வதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகும்.இன்ப துன்பங்களைக் கடந்த நிலையில் மட்டுமே உண்மையான ஆனந்ததை உணர முடியும்.______ பரம ஹம்சர்



பொது அறிவு :


1. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் யார்? 


பெரியார் ஈ.வெ. ரா. 


2. இந்தியாவில் இரும்புபப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது? 


லக்னோ.


English words & meanings :


Altar - a high table that is the center of a religious ceremony, சமய வழிபாட்டு பீடம். 


Alter - make some changes in the original plan or plot, ஒரு திட்டம் அல்லது காரியத்தில் மாற்றங்களை செய்தல்


ஆரோக்ய வாழ்வு :


வெங்காயம் தொற்றுகள் உருவாக்கும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். தொண்டை வறட்சி, இருமல் தடுக்கும்


கணினி யுகம் :


Ctrl+Spacebar - It allows you to change the selected text to the default font size and type.


 Ctrl+Home - Its use is to move the cursor to the first slide. For example, if you have 50 slides in your file, and the cursor is on the 45th slide, by pressing Ctrl+Home, you can move the cursor to the first slide.


நவம்பர் 30


சர் ஜகதீஷ் சந்திர போஸ்  அவர்களின் பிறந்தநாள்... 


சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.


நீதிக்கதை

கழுதையின் தந்திரம்

கதை :

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. 


ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது. 


ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது. 


நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. 


காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று. 


ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. 


கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது. 


நீதி :

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள்


30.11.21


★வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


★தமிழக அரசு, எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.


★புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.


★3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


★ஒமைக்ரான் அச்சம்; வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கிடுக்கிப்பிடி: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு.


★ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.


★இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.


★கான்பூர் டெஸ்ட்: போராடி டிரா செய்தது நியூசிலாந்து.



Today's Headlines


🌸 A magnitude of 3.6 Richter earthquakes was recorded in  Vellore and Tirupattur districts yesterday, according to the National Geological Research Centre. 


 🌸 The Government of Tamil Nadu has increased the income limit for scholarships for SC - ST and Adithravita students who have converted to  Christianity from Rs. 2.5 lakhs to Rs.  8 lakhs.


 🌸 New Depression: Chances of heavy rain for 2 more days in Tamil Nadu.


 🌸 The bill to repeal 3 agricultural laws was passed unanimously in the Rajya Sabha following the Lok Sabha.


 🌸 Omicron Fear; New strict restrictions were released for those who come from abroad by Federal Government.


 🌸 The World Health Organization has released 5 important pieces of information regarding the omega-3 virus.


 🌸 Danish player Axelsen wins the Indonesian Open badminton men's singles title.


 🌸 Kanpur Test: Struggling Draw by New Zealand.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) - (2020-2021) - வினாத்தாள் & விடைகள் (Question Paper & Answer Key)...



தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) - (2020-2021) - வினாத்தாள் & விடைகள் (Question Paper & Answer Key)...


>>> தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு வினாத்தாள் - (தமிழ் வழி )...


>>> TRUST Examination Question Paper (English Medium)...


>>> விடைக்குறிப்பு (Answer Key)...

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) ஜனவரி-2022 மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் காலஅவகாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்.018653/NTSE/2021, நாள் : 29.11.2021...



>>> தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) ஜனவரி-2022 மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் காலஅவகாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்.018653/NTSE/2021, நாள் : 29.11.2021...

3 மணிக்குள் பள்ளிகளை மூடி விட்டதாக புகார் – ஆட்சியர் நடவடிக்கை (Govt Schools close early - officials to hold inquiry)...

3 மணிக்குள் பள்ளிகளை மூடி விட்டதாக புகார் – ஆட்சியர் நடவடிக்கை (Govt Schools close early - officials to hold inquiry)...



தளி ஒன்றியத்தில் பள்ளிகள் மதியம் மூன்று மணிக்குள் மூடி விட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டு மாவட்ட  ஆட்சியர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் தேன்கனிக்கோட்டை அவர்களிடம் விரிவான விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயலில் ஈடுபடும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. 
முதன்மைக்கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி

கனமழை காரணமாக இன்று (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



கனமழை காரணமாக இன்று (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


1) காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை


2) திருவள்ளூர் மாவட்டம் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 


3)செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


4) தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


5) நெல்லை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


6) மதுரை மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை  


7) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


8) தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 


9) கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


10) சிவகங்கை மாவட்டம் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை 


11) ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


12) நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை





அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education - Procedures for making systematic and transparent expenditure on school grants provided by the Directorate of Education for All) ந.க.எண்.045436/என்2/இ2/2021, நாள்: 16.11.2021...



>>> அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education - Procedures for making systematic and transparent expenditure on school grants provided by the Directorate of Education for All) ந.க.எண்.045436/என்2/இ2/2021, நாள்: 16.11.2021...


ஆயுஷ்மான் பாரத் - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டம் - பயிற்சிக்கு முந்தைய தேர்வு - வினாக்கள் & உத்தேச விடைகள் (Ayushman Bharat - School Health & Wellness Program - Pre Training Test - Questions & Tentative Answers)...




>>> Ayushman Bharat - School Health & Wellness Program - Pre Training Test - Questions & Tentative Answers...

கனமழை காரணமாக இன்று (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 


கனமழை காரணமாக இன்று (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 26 மாவட்டங்கள்...


1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 


3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 


4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 


5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 


6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )


7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )


8. நாகை ( பள்ளி மட்டும்) 


9. திருவண்ணாமலை ( பள்ளி ,  கல்லூரி )


10. கடலூர்  ( பள்ளி , கல்லூரி ) 


11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)


12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )


13. பெரம்பலூர் ( பள்ளி மட்டும்) 


14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)


15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )


16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)


17. அரியலூர்  (பள்ளி மட்டும் )


18. கள்ளக்குறிச்சி  (பள்ளி, கல்லூரி)


19. விருதுநகர்  (பள்ளி, கல்லூரி)


20. சேலம்  (பள்ளி மட்டும் )


21. வேலூர்  (பள்ளி மட்டும் )


22. திண்டுக்கல்  (பள்ளி, கல்லூரி)


23. தேனி  (பள்ளி, கல்லூரி)


24. தென்காசி   (பள்ளி, கல்லூரி)


25. தருமபுரி (பள்ளி மட்டும் )


26. திருப்பத்தூர்  (பள்ளி, கல்லூரி)


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (29.11.2021) (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு







இன்றைய (29-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 29, 2021




உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : தெளிவு கிடைக்கும்.


கிருத்திகை : நிதானம் வேண்டும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 29, 2021




புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத் திறன் மேம்படும். உத்தியோக பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : சாதகமான நாள். 


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : கற்பனைத் திறன் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 29, 2021




நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதமும், அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சிலரின் உதவியால் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளின் மூலம் செலவுகள் நேரிடலாம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியாக இருந்துவந்த சூழ்நிலைகள் மறையும். வெற்றிகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.


திருவாதிரை : செலவுகள் நேரிடலாம்.


புனர்பூசம் : இழுபறியான நாள். 

---------------------------------------





கடகம்

நவம்பர் 29, 2021




எந்தவொரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பத்திரிக்கை துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.


பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 29, 2021




உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------





கன்னி

நவம்பர் 29, 2021




உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த செயல்களை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் பதற்றமின்றி செயல்படவும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




துலாம்

நவம்பர் 29, 2021




பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களும், போராட்டங்களும் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது நபர்களின் தன்மை அறிந்து செயல்படவும். விவாதங்களின் மூலம் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். விடாமுயற்சி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : அனுகூலமான நாள். 


சுவாதி : குழப்பங்கள் குறையும்.


விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 29, 2021




பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வியாபார சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். முன் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



விசாகம் : மதிப்பு அதிகரிக்கும். 


அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 29, 2021




மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வைத்தியம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



மூலம் : இழுபறிகள் மறையும். 


பூராடம் : மேன்மை ஏற்படும்.


உத்திராடம் : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------





மகரம்

நவம்பர் 29, 2021




நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த பதற்ற நிலை குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மூலம் ஆதரவு மேம்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : தெளிவு கிடைக்கும். 


திருவோணம் : ஆதரவு மேம்படும். 


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 29, 2021




மாணவர்களுக்கு ஞாபகமறதி அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மறைமுகமான தடைகளால் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவு பெறும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவுகளில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சதயம் : காலதாமதம் ஏற்படும்.


பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 29, 2021




கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். காரியம் சித்தமாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும். 


ரேவதி : முடிவு கிடைக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.21

 திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்: அரசியல்


அதிகாரம்:வலி அறிதல்


குறள் எண்: 472


குறள்:

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில்.


பொருள்:

ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.


பழமொழி :

Trust not to a broken staff



மண்குதிரையை நம்பி  ஆற்றில் இறங்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 


2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.


பொன்மொழி :


எப்போதும் வலிமையானவர்கள்

சாதனையாளர்கள் ஆவது

கிடையாது.. தோல்வியிலும்

நம்பிக்கையை இழக்காதவர்களே

சாதனையாளர்கள்..!------


பொது அறிவு :


1.ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது? 


மாலிக் அமிலம். 


2. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு எது? 


நைட்ரஜன்.


English words & meanings :


Pair - the same type of two things worn together. ஜோடி, இணை.


 Pear - a type of fruit. பேரிக்காய்.


ஆரோக்ய வாழ்வு :


வெற்றிலை மறறும் மிளகு இரண்டையும் வாயில் போட்டு மென்றால் அது நார் சத்தாக மாறி உடலில் உள்ள நச்சையும் வெளியேற்றும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் சூடாக்கி மார்பு பகுதியில் போட்டால் சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சு திணறல் குணமாகும்.



கணினி யுகம் :


Holding Shift During Boot up -- Boot safe mode or bypass system files.


நீதிக்கதை


கல்வியே அழியாத செல்வம்



கதை :

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 


இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 


கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 


இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 


ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 


ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார். 


நீதி :

கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.


இன்றைய செய்திகள்


29.11.21


◆சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்: போக்குவரத்து ஆணையரகம் அறிவிப்பு.


◆ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடங்கப்படஉள்ளது.


◆டெல்டாவில் தொடரும் கனமழை; தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 159 வீடுகள் சேதம்: ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.


◆ஓமைக்ரான் அச்சம்: கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணியுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.


◆இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.


◆ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் போலந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது.


◆ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணிக்கு 2-வது வெற்றி.



Today's Headlines


 🌸 Rs 5,000 reward will be awarded to the person who helps the people in road accidents  and admit them in hospital" announced by Transport Commission


 🌸 A seawater adventure sports center will soon be set up at the Prabhanvalasa beach area near Rameswaram.


 🌸Heavy rains continue in Delta;  159 houses damaged in Tanjore district in one day: Thousands of acres of paddy fields submerged


 🌸Omicron Fear: Continue Monitoring should be there in Corona Hotspot Areas: union government gives Warning to the States.


 🌸Russian President Vladimir Putin is scheduled to visit India on December 6 to attend a bilateral summit.


 🌸The Indian team advanced to the quarterfinals after defeating Poland in the Junior World Cup Hockey Tournament and enjoying their 2nd victory.


 🌸 Mohan Bagan team got the second victory in ISL football match

 Prepared by


Covai women ICT_போதிமரம்

ஜியோ - விஐ - ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திடடங்கள் - ஒப்பீடு (Jio - VI - Airtel New Recharge Plans - Comparison)...



>>> ஜியோ - விஐ - ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திடடங்கள் - ஒப்பீடு (Jio - VI - Airtel New Recharge Plans - Comparison)...

ஜியோ ப்ரீபெய்ட் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணம் 21% உயர்வு(Recharge Plan for Jio prepaid service increased by 21%)...



01-12-2021 முதல் ஜியோ ப்ரீபெய்ட் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணம் 21%  உயர்வு(Recharge Plan for Jio prepaid service increased by 21%)...


>>> ஜியோ - புதிய ரீசார்ஜ் கட்டண விவரங்கள்...

தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை பதிலாக சனிக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு(Tamilnadu Health Minister announced that the Corona Vaccination Camp will be held on Saturdays instead of Sundays in the favour of the medical staff)...

தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை பதிலாக சனிக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு...



பள்ளிக் கல்வி - ( NMMSS ) - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை - National Scholarship Portal-ல் அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்தல் - Institute Nodal Officer ஆதார் விவரங்கள் பதிவு செய்தல் - ஆதார் விவரங்களை Validate செய்தல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டுநலப்பணித் திட்டம்) செயல்முறைகள் ந.க.எண்: 059449/எம்/இ4/2021, நாள்: 26-11-2021...



>>> பள்ளிக் கல்வி - ( NMMSS ) - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை - National Scholarship Portal-ல் அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்தல் - Institute Nodal Officer ஆதார் விவரங்கள் பதிவு செய்தல் - ஆதார் விவரங்களை Validate செய்தல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டுநலப்பணித் திட்டம்) செயல்முறைகள் ந.க.எண்: 059449/எம்/இ4/2021, நாள்: 26-11-2021...


மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை - பாடத்திட்டம் குறைப்பு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்...

 


மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க அவசியம் இல்லை; பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்...

பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



 கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 


3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 


4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 


5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 


6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )


7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )


8. நாகை ( பள்ளி மட்டும்) 


9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )


10. கடலூர்  ( பள்ளி மட்டும்) 


11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)


12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )


13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) (  உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சூழ்நிலை தகுந்தவாறு பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்)


14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)


15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )


16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)



புதுச்சேரி - 2 நாட்கள் (29.11.21 & 30.11.21) - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...