கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு

 


திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு - நாளிதழ் செய்தி 


9 பள்ளிகளை மூட முடிவு


ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?


திருப்பூர், ஜூலை 7-திருப்பூர் மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாத, 9 அரசு பள்ளி கள் நடப்பு கல்வியாண்டில் மூடும் நிலை உருவாகியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில், 144 அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 10க்கும் குறைவாக உள்ளது. இது தவிர, ஒரு மாணவர் கூட இல்லாமல், 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாமல், 7 பள்ளிகளும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 2 பள்ளிகளும் உள்ளன.


வேலை தேடி பெற்றோர் வெளியூர் செல்வது, இடம்பெயர்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகர்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது. 


ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது


அய்யம்பாளையம், பொங்கலுாரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகிய இரண்டிலும், ஒரு மாணவர் கூட நடப்பு கல்வியாண்டில் சேரவில்லை.


இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. 


பள்ளி வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.




Delhi University மாணவர் சேர்க்கை| இன்று 05.07.2026 கடைசி நாள்



Delhi University மாணவர் சேர்க்கை| இன்று 05.07.2026 கடைசி நாள்


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் +2 முடித்துள்ள 

CUET 2026 தேர்வு எழுதி உள்ள மாணவ மாணவிகள், இந்தியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகமான டெல்லி பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க இன்று 05.07.2026 கடைசி நாள். Great opportunity. Don't miss. 100% Full scholarship.

இன்றே உடனே விண்ணப்பிக்கவும்.

Fees OBC 250 SC ST ரூ 100 மட்டுமே💐💐💐


விண்ணப்பிக்க வலைதள முகவரி :

https://ugadmission.uod.ac.in/index.php/registration/cuet-user/register



LLM படிப்புகளுக்கு விண்ணப்பித்தல் குறித்த அறிவிப்பு



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு LLM படிப்புகளுக்கு ஜூலை 13 வரை விண்ணப்பிக்கலாம்.


THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY

(State University Established by Act No.43 of 1997)

"Poompozhil", 5, Dr. D.G.S. Dhinakaran Salai, Chennai -600 028

Telephone Nos.044-24641919/24957414

NAAC Accredited

Email: thechairmanlawadmissions@gmail.com

ADMISSION NOTIFICATION:2026-2027

Applications are invited from the Eligible Candidates through Online Mode for Admission to the L.L.M PROGRAMME (Under the Choice Based Credit System-Regular Mode) offered in School of Excellence in Law for the Academic Year 2026-2027


Name of Programme : LL.M.Degree Programme


Duration : 2 Years


Specialisation : 

Business Law

Constitutional Law and Legal Order

Intellectual Property Law

International Law and Organization

Environmental Law and Legal Order

Criminal Law and Criminal Justice Administration

Human Rights Law

Labour and Administrative Law

Cyberspace Law and Justice

Maritime Law

Property Law

Crime and Forensic Law


Eligibility

A Pass in B.L./LL.B.Degree Programme(either 5 Years or 3 Years with 45% under New Regulations or 400 under Old Regulations)


NOTE:

(1) Candidates can apply through online mode only, for which applicants have to pay Application processing fee through Online Payment Gateway only. Online Application Forms and Prospectus are available in the University Websitewww.tndalu.ac.in

(2) Mode of Selection: Selection for admission will be conducted only through online. Candidates will be selected purely based on Merit in their performance in the Qualifying Degree Examination and as per the Rules of Reservation prescribed by the Government of Tamil Nadu.

(3) Enquiries relating to Admissions can be contacted through Telephone Nos. 044-24641919/24957414.


Institution

The Tamil Nadu Dr.Ambedkar Law University,

School of Excellence in Law,

Dr. M.G.R. Salai (Near MRTS Tharamani Railway Station), Perungudi, Chennai-113.

Submission of Application through Online Mode only 

Date of opening : 29.06.2026

Date of closing : 13.07.2026


Application Fee

SC/ST Applicants -Rs.500/-

Others -Rs.1000/-


NOTE: Application Fee paid through other modes, by Cash /Demand Draft /Money Order/Cheque /Bank PayOrder/Challan etc.,

will not be accepted. Fee once paid will not be refunded.

For further details please visit http://www.tndalu.ac.in

Date : 29.06.2026

Place: Chennai

REGISTRAR.




அரசு ITIகளில் மாணவர் சேர்க்கை


அரசு ITIகளில் மாணவர் சேர்க்கை 


10th Pass or fail

12th Pass or fail

கவலை வேண்டாம்👍


தமிழ்நாடு முழுவதும் உள்ள


உங்கள் ஊருக்கு அருகில் உள்ள


Government ITIகளில் அட்மிசன் நடைபெற்று வருகிறது.


சேர்க்கை கட்டணம் ரூ 250 மட்டுமே.


மாதாமாதம் ரூ 1750 உதவித் தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம்.


படித்து முடித்த உடன் 100% வேலை வாய்ப்பு நிச்சயம். 100% Placement👍💐👌👏🙏☝️




ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

 


ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


நீலகிரி மாவட்டத்தில் 48 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை


நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி அளவில், 352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 93 நடுநிலைப்பள்ளிகள், 49 உயர்நிலைப் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 5 பகுதி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆதி திராவிடர் பள்ளிகள், ஒரு சமூக நலப்பள்ளி, 32 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், ஒரு பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 554 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இந்த பள்ளிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கடந்த 2025-2026ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 2,183 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 1,689 ஆக குறைந்துள்ளது.


494 மாணவர்கள் அரசு பள்ளியிலிருந்து வெளியேறி உள்ளனர். 2025-26-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 35,446 மாணவர்கள் படித்த நிலையில், நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக்கை 32,437 ஆக குறைந்துள்ளது.


இந்த கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 3,009 மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து வெளியேறி உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி அளிக்க அரசு பல திட்டங்களை தீட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.


நடப்பாண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.


ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அப்புகோடு, குன்னூர் ஊராட்சி ஒன்றியம் காந்திபேட்டை, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் பேரகனி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பள்ளிகளில் மாணவர்களே இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘மலை மாவட்டமான நீலகிரியில் சில பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ளதால், அருகில் உள்ள பள்ளிகளில் அந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் வனத்துறையினர் உதவியுடன் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.


பழங்குடியின மாணவர்கள் மத்தியில் நிலவும் இடை நிற்றலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர் சேர்க்கை குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.


B.Ed., / M.Ed., படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு



பி.எட்., / எம்.எட்., படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு


Admission notification released for B.Ed., and M.Ed., courses.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செய்தி வெளியீடு எண்: 249 , நாள் : 18.06.2026


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் / முது நிலை மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்


 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பி.எட் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று 19.06.2026 முதல் 21.07.2026 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 31.07.2026 அன்று மாணாக்கர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். 04.08.2026 முதல் 10.08.2026-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யலாம். 14.08.2026 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwlase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.


24.08.2026 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.


பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள்




மேலும் 2026-2027 ஆம் கல்வியாண்டில் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கை இடங்கள் 24,334 உள்ளன. இதற்கு மாணாக்கர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இன்று 19.06.2026 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


மேலும், 19.08.2026 முதல் அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 2026-2027 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.


முதுநிலைப் பாடப்பிரிவு 2026-2027 மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள்




மாணாக்கர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


கல்லூரிக் கல்வி ஆணையர்


வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) மாணவர் சேர்க்கை



 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்


மாணவர் சேர்க்கை 2026


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) Diploma in Elemantary Education


2026 2027 மாணவர் சேர்க்கை (ஆன்லைன்/நேரடி)


Online சேர்க்கை https://scert.tnschools.gov.in

என்ற இணையவழி மூலம் 02.06.2026 to 15.06.2026 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

 16.06.2026 முதல் நேரடி சேர்க்கை இந்நிறுவனத்தில் நடைபெறுகிறது (Spot Admission)


வயது வரம்பு


1) பொதுப்பிரிவினர் 30வயது மிகாமல் இருக்க வேண்டும் SC/2) SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்


3) ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் (ம) கைம்பெண்கள் - 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்


விண்ணப்பகட்டணம்


SC/SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ 250.00 OC/BC/BCM/ MBC/DNC 5.500.00


சேர்க்கை கட்டணம்


ரூ.3500.00


கல்விக்கட்டணம்


ரூ 1500.00(ஆண்டு ஒன்றிக்கு)


குறிப்பு


தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:


https://scert.tnschools.gov.in


தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, Cut-off Marks கணக்கிடும் முறை



Method of calculating cut-off marks for admission to higher educational institutions (Engineering, Agriculture, Veterinary Medicine, Fisheries, Paramedical, Law and Arts and Science Colleges) in Tamil Nadu


தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ( பொறியியல்,  வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், துணை மருத்துவம்,  சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ) சேர்க்கை பெற , கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ( TNAU ) இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ( TNAU ) இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கு  விண்ணப்பிக்கும் முறை Online Application Procedure மற்றும் வலைதள முகவரி 


TNAU - TAMIL NADU AGRICULTURE UNIVERSITY COIMBATORE 

UG Degree and Diploma 

ADMISSION COUNSELLING ONLINE APPLICATION IS NOW OPEN 


For Degree and Diploma ADMISSION...

Same website 👇


https://tnau.ucanapply.com/univer/public/registration?app_id=UElZMDAwMDA2NQ==



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 2026-2027 குறித்த தகவல்கள்

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர் சேர்க்கை இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2026-2027


Information about Government Arts and Science College Admission 2026-2027


விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 29.05.2026


அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு (UG Courses) விண்ணப்பம் பதிவு செய்ய 29.05.2026 இறுதி நாள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


செய்தி வெளியீடு எண்: 017 , நாள்: 13.05.2026


கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600 015, 


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர் சேர்க்கை இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை: 2026-2027 விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 29.05.2026


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்து வருகின்றனர். 2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 (Shift I - 101022/ Shift II - 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


இதுவரை (12.05.2026 முடிய) விண்ணப்பித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 89927 ஆகும். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 29.05.2026


விண்ணப்பக் கட்டண விவரம்


விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48/-


பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்



SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.

பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்



விண்ணப்பக் கட்டணம்


விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தும் முறை


Debit Card / Credit Card/Net Banking/UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.


மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.


மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044 24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




EMIS - Students Admission Form 2026-2027 AY குறித்த தகவல்கள்

 

EMIS -  Students Admission Form 2026-2027 Academic Year குறித்த தகவல்கள் 


EMIS -  Fill & Submit Students Admission Form AY 2026-2027


💫 2026-27 ஆம் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் சேர விரும்பும் 


▪️5+ மாணவர்கள்

▪️அங்கன்வாடி மாணவர்கள்

▪️புதிய நேரடி மாணவர்கள்


போன்றவர்களுக்கு


EMIS -யில் Students admission form fill செய்து Submit செய்தல்.


▪️Submit செய்தபின் Admission Receipt download செய்து மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கவும்.


▪️தற்போது Admission form fill செய்த மாணவர்களை வரும் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் தொடர பள்ளி த.ஆ நடவடிக்கை & முயற்சி எடுக்கவும்.


▪️ஒருசில காரணங்களால் தற்போது admission form fill செய்த மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தொடர முடியாமல் வேறு பள்ளிக்கு செல்ல நேர்ந்தால் இந்த admission receipt-யில் உள்ள Application ID எண்ணை கூறினால் போதும், புதிய பள்ளியில் Admit செய்து கொள்ளலாம்.


2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்

 

2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் 


* 31-07-2021 வரை பிறந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து கொள்ளலாம். 

* 01-08-2021 முதல் 31-08-2021 வரை பிறந்த குழந்தைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம். 

* 01-09-2021 முதல் 31-12-2021 வரை பிறந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து விட்டு  வட்டாரக்கல்வி அலுவலர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தளர்வாணை வேண்டி விண்ணப்பம் செய்து தளர்வாணை பெற வேண்டும்.



EMIS வலைதளத்தில் 2026-2027 மாணவர் சேர்க்கை பதிவு செய்யும் முறை


EMIS வலைதளத்தில் 2026-2027 மாணவர் சேர்க்கை பதிவு செய்யும் முறை


Student Admission Campaign -Students Admission Form (AY 2026-27) 


மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 2026-2027 


Now open in EMIS Website






மாணவர் சேர்க்கை 2026-2027 - EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் பொழுது கேட்கப்படும் தகவல்கள்

 

Student Admission Campaign - Students Admission Form (AY 2026-27) 


மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 2026-2027 - EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் பொழுது கேட்கப்படும் தகவல்கள்




அரசுப் பள்ளிகளில் இன்று (02-03-2026) முதல் மாணவா் சோ்க்கை (Admission) தொடக்கம்

 

 

அரசுப் பள்ளிகளில் இன்று (02-03-2026) முதல் மாணவா் சோ்க்கை (Admission) தொடக்கம்


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) முதல் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது.


மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2024-ஆம் ஆண்டுமுதல் மாணவா் சோ்க்கை முன்கூட்டியே மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரவலாக பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன


அதேபோல், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணா்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவா் சோ்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


குழந்தைகள் 1ஆம் வகுப்பில் சேர, குறைந்தபட்சம் 6 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்



 குழந்தைகள் 1ஆம் வகுப்பில் சேர, குறைந்தபட்சம் 6 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் 


2026-27 முதல் டெல்லி குழந்தைகள் 1 ஆம் வகுப்பில் சேர, குறைந்தபட்சம் ஆறு வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.


டெல்லியில் சேர்க்கைக்கு, 2026-27 கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்புக்கு 6+ வயது சீரான வயது வரம்பு அமல்படுத்தப்படும். 

மற்ற வகுப்புகளுக்கு, மேல்நிலை KG-யில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது 5-6 ஆண்டுகள், 

மற்றும் 1 ஆம் வகுப்புக்கு 6+ ஆண்டுகள். 

இந்த புதிய விதி டெல்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். 

1 ஆம் வகுப்புக்கு: 2026-27 கல்வியாண்டு முதல், சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது 6 ஆண்டுகள். 

மேல்நிலை KG-க்கு: வயது வரம்பு 5 முதல் 6 ஆண்டுகள் வரை. 

1 ஆம் வகுப்புக்கு (தற்போதைய முறை): குறைந்தபட்ச வயது 6+ ஆண்டுகள்.



For admission in Delhi, a uniform age of 6+ for Class 1 will be implemented from the 2026-27 academic session. For other classes, the minimum age for admission to Upper KG is 5-6 years, and for Class 1, it is 6+ years. This new rule applies to all government, government-aided, and private schools in Delhi. 

For Class 1: From the 2026-27 academic session, the minimum age for admission is 6 years old.

For Upper KG: The age requirement is between 5 and 6 years.

For Class 1 (current system): The minimum age is 6+ years. 


boAt Aavante Bar Bluetooth Speaker 490 10W Signature Sound, Dual Full-Range Drivers,7 HRS Battery, Built-in Mic,2.0 CH, Free Music Streaming on JioSaavn, Bluetooth Sound Bar, Soundbar Speaker (Classic Black)




Actual Price: Rs. 3490

Offer Price : Rs. 949

Benefit : Rs. 2541


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4nFRTq0

RTE மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் குறைவு




இலவச கட்டாய கல்வி சட்டம் - RTE மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் குறைவு


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 7 ஆயிரத்து 717 தனியார் பள்ளிகளில்  70 ஆயிரத்து 449 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்


கடந்த ஆண்டு 71 ஆயிரத்து 398 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பரிசளிக்க ஏற்றது
My First Learning Library: Boxset of 20 Board Books for Kids | Includes ABC, Numbers, Shapes, Colors, Wild & Baby Animals, Fruits, Vegetables, Transport, Toys, Opposites, Flowers, Sea Animals, People at Work, Food, About Me & More | Early Learning for Babies, Toddlers & Preschoolers | Ages 0-3 Years | Horizontal Design




Actual Price: Rs. 1499

Offer Price : Rs. 699

Benefit : Rs. 800


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5



அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு (AISSEE) 2026 - பொது அறிவிப்பு - 24 அக்டோபர் 2025


 ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAMINATION (AISSEE) 2026 - PUBLIC NOTICE - 24 OCT 2025


அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு (AISSEE) 2026 - பொது அறிவிப்பு - 24 அக்டோபர் 2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Sunfeast Dark Fantasy - Dark Fantasy Choco Fills, 300g




Actual Price: Rs. 150

Offer Price : Rs. 87

Benefit : Rs. 63


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Jnm1sm


Way to Buy Option ல் Amazon Fresh தேர்வு செய்து கொள்ளவும் 


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

RTE மாணவர் சேர்க்கைக்கு உரிய பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்

 


RTE மாணவர் சேர்க்கைக்கு உரிய பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்


பள்ளி வாயிலாக RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


RTE மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்; இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது.


rteadmission@tnschools.gov.in மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் RTE தொடர்பான புகார்கள், தகவல்களை பெறலாம் - பள்ளிக் கல்வித் துறை.


RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



 RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2342 , நாள் : 02-10-2025


மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு


ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025–26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு 


Government of Tamil Nadu Announces Commencement of RTE Admissions for 2025–26 Following Release of Funds by Government of India - Press Release 


The Government of Tamil Nadu announces the commencement of admissions under the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, for the academic year 2025–26 - Tamil Version & English Version 


 Press Release No: 2342 , Dated: 02-10-2025 & 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025-26 ஆம் கல்வியாண்டிற்கான RTE 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


* தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


* W.P. No. 18427 of 2025-V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.


* இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.


2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்


1. சேர்க்கை ஒதுக்கீடு


அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில்

* (LKG/1 std) 25% 

* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.


2. சேர்க்கை முறை


* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.


3. முன்னுரிமை பிரிவுகள்


* ஆதரவற்றோர்

* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

* மாற்றுப் பாலினத்தவர்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத் திறனாளிகள்

* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.


4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்


* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.


5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு


* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.


* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்


* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை

 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 ...