>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - த.நா.ச.பே.எண்: 023, நாள்: 19-04-2023 (Increase in pension and medical benefits for ex-members of Tamil Nadu Legislative Assembly and Legislative Council (Upper House) - Chief Minister Announcement - T.N.L.A.No: 023, Dated: 19-04-2023)...
அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன. இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
இலாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (07-09-2021) 110 விதியின் கீழ் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்(த.நா.ச.பே. எண்: 24, நாள்: 07-09-2021)...
த.நா.ச.பே. எண்: 24, நாள்: 07-09-2021...
முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு...
ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது...
1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்
முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு
அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்
ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்
அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்
புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்
சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்
வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்
அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்
முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்...
பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்படுவர்...
ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்...
- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
2022ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு...
2022ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு...
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் முதல்வர் மு.க ஸ்டாலின்*
*அகவிலைப்படி உயர்வு அமல் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்...
*சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு....
➡️ அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.
➡️ ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
➡️ சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 வயதாக உயர்த்தப்படுகிறது.
➡️ அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து.
- தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
தொழில் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளுடனான கலந்தாய்வுக்குப் பின் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புகள்...
தொழில் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளுடனான கலந்தாய்வுக்குப் பின் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புகள்...
>>> செய்தி வெளியீடு எண்: 036, நாள்: 11-05-2021...
அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...
"உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் கொண்டும், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் - துறைகளின் பெயர் மாற்றம்"
- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
✍️👉தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1. தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.
2. வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.
3. சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.
4. மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.
5. மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.
6. தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.
7. செய்தி - மக்கள் தொடர்புத் துறை ‘செய்தித் துறை’யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கட்தொடர்பும் அடங்கியிருக்கிறது.
8. சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’ என்று வழங்கப்படவுள்ளது.
9. பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.
10. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுச் சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.
உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.
9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு....
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.
இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் - முதல்வர் அறிவிப்பு...
கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் - முதல்வர் அறிவிப்பு...
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விளக்கம்...
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விளக்கம்...
கொரோனா தொற்று நன்கு குறைந்த பின்னர் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு - முதல்வர் அறிவிப்பு...
டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு - முதல்வர் அறிவிப்பு...
கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி.
மருத்துவக் கல்லூரிகள் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி.1ம் தேதி முதல் தொடங்கும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் செயல்படலாம்.
சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி.
கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்.
கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.
டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2000 மினி கிளினிக்குகள் துவங்கப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர்...
ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்த நிலையில்,வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
>>>அனைத்து குறைகளையும் ஒரே தளத்தில் முறையிட "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்" உருவாக்கம்...
பல்வேறு அரசுத் துறைகள் தொடர்பான குறைகளை ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யும் புதிய திட்டம் - முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் விரைவில் செயல்படுத்தப்படும்.
- 110விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.!!
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...