ஆதி திராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ஸ்காலர்ஷிப் தொகை விரைவில்
வழங்கப்படும் என புதுச்சேரி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு
கூறினார்.
புதுச்சேரியில், ஆதி திராவிட நல மாநில அளவிலான குழு கூட்டம், ஓட்டல்
அண்ணாமலையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
நலத்துறை அமைச்சர் ராஜவேலு முன்னிலை வகித்தார்.
ஆதி திராவிடர் தேசிய கமிஷன் துணை இயக்குனர் ராமசாமி, அரசு தெரிவு
உறுப்பினர்கள் 18 பேர், அரசு சாரா உறுப்பினர்கள் 26 பேர், அரசின் சிறப்பு
அழைப்பாளர்கள் 18 பேர், அரசு சாரா சிறப்பு அழைப்பாளர்கள் 30 பேர் கலந்து
கொண்டனர்.
ஆதி திராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள்
குறித்தும், ஆதி திராவிட துணைத் திட்டத்தின் செயல்பாடு, ஆதி திராவிட
மக்களுக்கு அரசுப் பணி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான
வன்கொடுமை சட்டம் தொடர்பாகவும், ஆதி திராவிட மக்களின் நலன் மற்றும்
உரிமைகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கலந்தாய்வு
செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க, அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், கார்த்திகேயன், பாட்கோ சேர்மன்
பிரசாந்த்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாரிமுத்து, நீல கங்காதரன்,
தெய்வநாயகம், நலத் துறை செயலர் விவேக் பாண்டே, கலெக்டர்கள் தீபக்குமார்,
அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்துறை அமைச்சர் ராஜவேலு பேசுகையில், "ஆதி திராவிட மக்களுக்கான
சிறப்புக் கூறு நிதி, சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதைக்
கண்காணிக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு
நிலுவையில் உள்ள ரூ.18 கோடி ஸ்காலர்ஷிப் தொகை ஓரிரு தினங்களில்
வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் ஆதி திராவிட மக்களின் சேதமமைடந்த வீடுகளை இந்த
ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில், ஹட்கோ உதவியுடன் ரூ.4 லட்சத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில், ஹட்கோ உதவியுடன் ரூ.4 லட்சத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டார்.