கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Examination Results லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Examination Results லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special TET 2026 Exam Results Released

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு

Special TET 2026 Exam Results Released

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TRB Press Release 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) முடிவுகள் இன்று (அக்டோபர் 12) இரவு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in-ல் வெளியீடு

https://www.trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-1045

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல். 

இன்று அல்லது நாளை தேர்வு முடிவு வெளியிடப்படும்.

Special TET Results வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் 2nd September 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Special TET Results வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் 02-09-2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

B.Ed., M.Ed., தேர்வு முடிவுகள் வெளியீடு

பி.எட்., எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற  B.Ed., மற்றும் M.Ed.,  தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் லாக்-இன்-ஐ பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் தனியே கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படாது. தேர்வு முடிவில் ஏதேனும் விளக்கம் கோர வேண்டுமானால் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் (திங்கள்) ஆன்லைனில் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) எம்.கண்மணி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

SSLC மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் 06.07.2026 இன்று பிற்பகல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு

SSLC re-totaling and re-evaluation results to be released today, 06.07.2026, in the afternoon - DGE Press Release 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

10th Public Exam Results Analysis

10-ஆம் வகுப்பு SSLC தேர்வு முடிவுகள் வெளியீடு

மொத்தம் 94.31% பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2026 - பகுப்பாய்வு அறிக்கை

10th Public Exam Results Analysis 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

10th Result - முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் :

👇👇👇👇👇👇

மாவட்ட வாரியான தேர்ச்சி விழுக்காடு

1. புதுக்கோட்டை - 97.57%

2. சிவகங்கை - 97.54%

3. தஞ்சாவூர் - 97.41%

4. திருச்சி - 97.31%

5. கன்னியாகுமரி - 97.30%

நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.

மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

பத்தாம் வகுப்பு SSLC பொதுத் தேர்வு முடிவுகள்

20.05.2026 , காலை 9.30 வெளியிடப்படும்.

இணையதள முகவரிகள் 

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in

results.digilocker.gov.in

வெளியாகிறது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

வெளியாகிறது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

* 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். SSLC பொதுத்தேர்வு ரிசல்ட் வரும் புதன்கிழமை மே 20ஆம் தேதி வெளியாகும்"

-  அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு

* Tamil Nadu Class 10 public exam results will be released on May 20. Students can check their results on tnresults.nic.in and dge.tn.gov.in.

TNCMTSE தேர்வு முடிவுகள் வெளியீடு

TNCMTSE 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு

Tamil Nadu Chief Minister's Talent Search Examination - JAN-2026 

Results.. 

👇👇👇 

https://apply1.tndge.org/nts-result-change-2022

TNCMTSE 2026 Results - DGE Press Release

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு- ஜனவரி 2026

TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION (TNCMTSE)

செய்திக் குறிப்பு

அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு, 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,50,265 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.

இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக உரிய தகுதிகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000/- வழங்கப்பட்டு வருகிறது.

13.05.2026 அன்று பிற்பகல் இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படவுள்ளது.

+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் - பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் - தேர்ச்சி விகிதம் 93.58%

ஒட்டு மொத்த பள்ளிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள் 

* ஈரோடு

* சிவகங்கை

 * கன்னியாகுமரி

அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள்

👉 ஈரோடு

👉 சிவகங்கை 

👉 திருச்சி

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026 பகுப்பாய்வு அறிக்கை

+2 Exam Result Analysis 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் - தேர்ச்சி விகிதம் 95.20%

மாணவர்கள் 93.19% மாணவிகள் 97% தேர்ச்சி.

வரும் 13ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

 +2 தேர்ச்சியில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் :

*ஈரோடு - 98.87%

*சிவகங்கை - 98.05%

*கன்னியாகுமரி- 97.63%

*நெல்லை - 97.54%

*திருச்சி - 97.5%

+2 அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

இன்று (08.05.2026) காலை 11.00 மணி முதல் +2 அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

+2 Results ஐ Whatsapp ல் அறியும் முறை

  +2 தேர்வு முடிவுகளை வாட்ஸ்அப்பில் அறியும் முறை

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2026

தேர்வு முடிவுகள் வெளியீடு

செய்திக்குறிப்பு

மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு SIEMAT Hall, SCERT, DPI வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பு

மேல்நிலைப் பொதுத் தேர்வு

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு

இணையதள முகவரி

www.thresults.nic.in

www.dge.tn.gov.in

results.digllocker.gov.in

தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை. திறமை அல்லது தன்மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவிக்கவோ அல்லது எவ்வித தீவிரமான முடிவுகளையும் எடுக்கவோ கூடாது.

ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள்; மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.

இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையுடனும் அக்கறையுடனும் புரிதலுடனும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள் 

 : 14417 / 104 / 14416.

அரசுத் தேர்வுகள் இயக்குநர்

இடம்: சென்னை-6

நாள்: .05.2026.

இன்று (08-05-2026) காலை 9.30 மணிக்கு +2 Result வெளியீடு

இன்று (08-05-2026) காலை 9.30 மணிக்கு +2 ரிசல்ட் வெளியீடு

திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு: - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்; 8 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு (Class 12) முடிவுகள் குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:

* முடிவுகள் வெளியாகும் நாள் மற்றும் நேரம்:

 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.

 * தேர்வு முடிவுகளைப் பார்க்கும் இணையதள முகவரிகள்:

   * https://www.tnresults.nic.in

   * https://www.dge.tn.gov.in

   * https://results.digilocker.gov.in

 * வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறியும் முறை:

இந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியைப் பயன்படுத்த, **7845252525** என்ற எண்ணைச் சேமித்து "Hi" என்று பதிவிட வேண்டும். பின்னர் கேட்கப்படும் விவரங்களான தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளைப் பெறலாம்.

 * குறுஞ்செய்தி (SMS) வசதி: 

மாணவர்கள் பள்ளியில் வழங்கிய உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

 * பள்ளிகள் மூலம்:

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை நேரில் அறிந்து கொள்ளலாம்.

 * உதவி மையம் (Helpline):

தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் ஐயங்கள் இருந்தாலோ அல்லது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் தேவைப்பட்டாலோ 14417 , 104 , 14416 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 * துணைத்தேர்வு: 

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பும், அதற்கான சிறப்புப் பயிற்சியும் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

 * முக்கியக் குறிப்பு: மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை அல்லது திறமையை நிர்ணயிப்பவை அல்ல என்பதால், மாணவர்கள் முடிவுகளைத் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2026

தேர்வு முடிவுகள் வெளியீடு

செய்திக்குறிப்பு

மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு SIEMAT Hall, SCERT, DPI வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பு

மேல்நிலைப் பொதுத் தேர்வு

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு

இணையதள முகவரி

www.thresults.nic.in

www.dge.tn.gov.in

results.digllocker.gov.in

தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை. திறமை அல்லது தன்மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவிக்கவோ அல்லது எவ்வித தீவிரமான முடிவுகளையும் எடுக்கவோ கூடாது.

ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள்; மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.

இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையுடனும் அக்கறையுடனும் புரிதலுடனும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள் 

 : 14417 / 104 / 14416.

அரசுத் தேர்வுகள் இயக்குநர்

இடம்: சென்னை-6

நாள்: .05.2026.

NMMS 2026 Results - DGE Press Release

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு

NMMS 2026 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு

NMMS 2026 Results - DGE Press Release 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

NMMS 2026 Results - Website Link

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு

வலைதள இணைப்பு 

NMMS 2026 Results - Website L

👇 👇 👇 

https://apply1.tndge.org/nts-result-change-2022

User Name: 9 Digit Roll number 

Password: Date of Birth (YYYY-MM-DD)

JEE Mains January 2026 Paper 1 Results Published

JEE MAINS JANUARY 2026 PAPER 1 RESULTS PUBLISHED TODAY 16.02.2026 BY 6 PM

தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவ மாணவிகளில் 12 பேர் 100 Percantile பெற்று தேர்ச்சி

டெல்லி மாணவி ஸ்ரேயா மிஸ்ரா முதலிடம்.

மாணவர் P. AJAIY 99.999 Percentile பெற்று தமிழ்நாட்டில் முதலிடம்.

👇👇👇👇👇

https://jeemain.nta.nic.in/results-for-jeemain-2026-session-i-paper-i-b-e-b-tech/

JEE Mains January 2026 Results Update 8.30 PM

👉 JEE Mains தேர்வு எழுதியுள்ள 13 லட்சத்து 4 ஆயிரம் பேரும் தங்கள் Result ஐ பார்க்க முயற்சி செய்து வருவதால்... Net - Traffic Jam ஏற்பட்டு  NTA - JEE Website open ஆகவில்லை. 

👉 இரவு 10 மணிக்கு open ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

👉 கவலை வேண்டாம். உங்கள் Phone SMS ஐ பார்க்கவும். உங்கள் Percentile அனுப்பப்பட்டுள்ளது.

>>> Click Here to Download NTA Press Release 

TET 2025 Paper 2 (Social Science) Results

  TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025

ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - சமூக அறிவியல் - தேர்வு முடிவுகள் வெளியீடு

TN TET PAPER 2 RESULTS 2025

TET PAPER – II SOCIAL SCIENCE

TAMIL MEDIUM 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Click Here to Download 

TNTET 2025 Paper II - சமூக அறிவியல்

 TET paper 2 -

 Social Science

தேர்வு எழுதியோர் =142861

தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)

தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )

TET Paper II – Social Science

Number of candidates appeared: 142,861

Number of candidates passed: 32,554 (22.8%)

Number of candidates not passed: 110,307 (77.2%)

TET 2025 Paper 1 Results

  TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025

ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 1 - தேர்வு முடிவுகள் வெளியீடு

TN TET PAPER 1 RESULT 2025

TET PAPER – I

TAMIL MEDIUM 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Click Here to Download 

TET paper 1

தேர்வு எழுதியோர் = 91072

தேர்ச்சி பெற்றோர் = 44770 (49.16%)

தேர்ச்சி பெறாதோர் = 46032 (50.84%)

TET Paper I

Number of candidates appeared: 91,072

Number of candidates passed: 44,770 (49.16%)

Number of candidates not passed: 46,032 (50.54%)

Note: The total of passed and not passed candidates comes to 90,802. There is a difference of 270

candidates, which may be due to absentees, withheld results, or data discrepancy.

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியானது

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியானது

ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. 

கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 

3,935 பணியிடங்களுக்கு சுமார் 11 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியிருந்தனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

ஜூன் 12-ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு TNPSC நடத்திய தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியிருந்தனர்.

 https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்

TNPSC - Exam  GROUP 4 Results

https://tnpscresults.tn.gov.in/ 

TNPSC GROUP 4 results released 

Car Tyre Jack ஐ எளிமையாக உயர்த்த / இறக்க பயன்படும் Two Way Jack Wrench குறித்த தகவல். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விலை ரூ.299

Universal Car Jack Ratchet Wrench | 360 Forward and Reverse knob Labor-Saving Design | Scissor Jack Lift Speed Handle Tool | Jack Lug Handle Tool | Tire Wheel Jack Wrench

Amazon வலைதள இணைப்பு : 

https://amzn.to/4qrlPJd

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...