கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் (Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed)...



>>> பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் (Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed)...





Today's (31-08-2022) Wordle Answer...

                                                      

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (31-08-2022) Wordle Answer: PRIZE









 

இன்றைய (31-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 31, 2022



பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். 


பரணி : மாற்றம் ஏற்படும். 


கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 31, 2022



வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : நன்மை உண்டாகும்.


ரோகிணி : ஒத்துழைப்பு ஏற்படும். 


மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 31, 2022



தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : வரவு கிடைக்கும்.


திருவாதிரை : தடைகள் அகலும். 


புனர்பூசம் : முடிவு கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 31, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். உழைப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : லாபம் கிடைக்கும். 


பூசம் : முன்னேற்றம் உண்டாகும். 


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 31, 2022



உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களால் சுபிட்சம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரம் : சுறுசுறுப்பான நாள்.


உத்திரம் : சுபிட்சம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 31, 2022



அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாட்டால் தீர்வு காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமாக அமையும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.


சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 31, 2022



தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




சித்திரை : தடைகள் குறையும்.


சுவாதி : சோர்வு நீங்கும்.


விசாகம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 31, 2022



செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். எண்ணிய பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்படும். வாழ்க்கை துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.  பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




விசாகம் : சுதந்திரத்தன்மை அதிகரிக்கும்.


அனுஷம் : காலதாமதம் ஏற்படும். 


கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 31, 2022



சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார பணிகளில் புதுவிதமான மாற்றத்தால் லாபம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : லாபம் அதிகரிக்கும்.


பூராடம் : புதுமையான நாள்.


உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 31, 2022



குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாகன பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


திருவோணம் : அனுபவம் உண்டாகும்.


அவிட்டம் : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 31, 2022



முயற்சிக்கு உண்டான பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சொத்துக்களை விற்பது, வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.


சதயம் : ஆதரவான நாள்.


பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 31, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : காலதாமதம் உண்டாகும். 


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





Today's (30-08-2022) Wordle Answer...

                                                     

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (30-08-2022) Wordle Answer: ONSET








 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள் : 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பொருள்:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

பழமொழி :
Necessity is the mother of invention

தேவையே கண்டுபிடிப்பின் தாய்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன்.

2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்


பொன்மொழி :

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்!


பொது அறிவு :

1.ஆழ்கடல் செல்பவர் எடுத்துச் செல்லும் வாயு எது?

ஆக்ஸிஜன் .

2.தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது?

ஆனைமுடி.


English words & meanings :

bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :

பழங்களில் அத்தியை சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்கிறார்கள். அத்திப் பழத்தை ஃபிரஷ்ஷாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிடலாம். அத்திப்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி நிறைய மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன


NMMS Q 50:

ஓர் எண்ணை மூன்று முறை பெருக்கக் கிடைப்பது __________ எனப்படும்.

விடை : கனம்


நீதிக்கதை

இரண்டு மரம்

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா? என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தது. ஒரு நாள் பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் எனக்கு தெரியும் நான் *வலுவிழந்து* விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு என்றது.

நீதி :
உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.



இன்றைய செய்திகள்

30.08.22

🌸 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்வழங்கும் திட்டம் வரும்
செப்., 5 ம் தேதி துவக்கிவைக்கப்படுகிறது துவக்க விழாவில்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

🌸 கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🌸 தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌸திருவண்ணாமலை : சாலையில் கிடந்த மணிபர்சை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

🌸கேரளாவில் ஆண்டுதோறும் 10 நாள் மலையாள அறுவடைத் திருவிழாவான ஓணம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு அந்த திருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை நிகழ்த்தப்பட உள்ளது

🌸 நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. கூறியுள்ளார்

Today's Headlines

🌸 The scheme of giving 1000 rs/month college students will come into effect from September 5th. For the Inauguration of the programme Delhi Chief Minister Arvind Kejriwal will be the special guest.

🌸 The Tamil Nadu government has informed that 800 mobile medical teams have been set up to provide counseling to students who are under stress due to education and exams.

🌸 According to Meteorological Department, 17 districts of Tamil Nadu including Nilgiris and Coimbatore are likely to experience heavy rain today.

🌸 Thiruvannamalai: Many people are praising the youth who handed over the money bag lying on the road to the police.

🌸Onam, a 10-day Malayalam harvest festival, is celebrated annually in Kerala.  This year the festival will be held from August 30 to September 8.

🌸 Chief Minister M.K.STALIN said that under the Nan Muthalvan scheme, the goal of the Tamil Nadu government is not to have jobs for all, but to have appropriate jobs for all.



இன்றைய (30-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 




மேஷம்

ஆகஸ்ட் 30, 2022



மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமும், லாபமும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும்.


பரணி : லாபகரமான நாள்.


கிருத்திகை : உதவி கிடைக்கும். 

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 30, 2022



மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வாழ்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




கிருத்திகை : விமர்சனங்கள் நீங்கும்.


ரோகிணி : ஈடுபாடு ஏற்படும். 


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 30, 2022



குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : ஆதாயம் உண்டாகும். 


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 30, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 30, 2022



அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூரம் : அனுபவம் கிடைக்கும். 


உத்திரம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 30, 2022



வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : அனுபவம் ஏற்படும். 


அஸ்தம் : புதுமையான நாள்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 30, 2022



உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். கால்நடை சார்ந்த விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.


சுவாதி : நன்மை ஏற்படும். 


விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 30, 2022



பிள்ளைகளின் மூலம் மதிப்பு மேம்படும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆசைகள் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




விசாகம் : மதிப்பு மேம்படும். 


அனுஷம் : லாபம் அதிகரிக்கும். 


கேட்டை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 30, 2022



செய்தொழிலில் சில மாற்றத்தை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.  மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : லாபகரமான நாள்.


பூராடம் : உதவி கிடைக்கும்.


உத்திராடம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 30, 2022



தந்தைவழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : ஈடுபாடு அதிகரிக்கும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 30, 2022



எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அவிட்டம் : காலதாமதம் உண்டாகும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 


பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 30, 2022



வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவி காலதாமதமாக கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : லாபகரமான நாள்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2021-2022ஆம் கல்வியாண்டிற்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு (Per Child Expenditure) தொடர்பாக அரசாணை (G.O.Ms.No.139, Dated: 10-08-2022) வெளியீடு...

 


>>> குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2021-2022ஆம் கல்வியாண்டிற்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு (Per Child Expenditure) தொடர்பாக அரசாணை (G.O.Ms.No.139, Dated: 10-08-2022)...





எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஆகஸ்ட் ஐந்தாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - August 5th Week)...

    



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஆகஸ்ட் ஐந்தாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - August 5th Week)...




TNSED schools App (New Update) - UPDATED ON 28-08-2022 - Version: 0.0.41

 


TNSED schools App (New Update) - UPDATED ON 28-08-2022 - Version: 0.0.41


⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️

🔴 *_TNSED schools App_*

*_ What's is new..?_*

*_Bug Fixes & Performance Improvements._*

*_UPDATED ON 28 AUGUST - 2022_*

*_Version: Now 0.0.41_*

👇👇👇👇👇👇



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: பொருட்பால்

அதிகாரம்/Chapter: உழவு / Farming

குறள் 1038:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.


பொருள்; 

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது



பழமொழி :

Many hands make work light


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன். 


2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்


பொன்மொழி :


நல்லதாக நடந்தவைகளை எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே இருக்கும்.


பொது அறிவு :


1.எப்படிப்பட்ட நிலத்தில் தென்னை செழிப்பாக வளரும்? 


 கடற்கரையில் .


 2.சூரிய ஒளியில் எத்தனை நிறங்கள் உள்ளன?


 ஏழு.


English words & meanings :


an·ti·par·a·sit·ic - Destroying or inhibiting the growth and reproduction of parasites. Adjective. ஒட்டுண்ணியை அழிக்கும் எதிர்உயிரி. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு :


அத்திப்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. குறிப்பாக ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டு வரும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்


NMMS Q 49:


a' எனும் எண், அதே எண் ஆல் பெருக்கப்படும் போது அந்த பெருக்கற்பலன் _________ எனப்படும்.


 விடை: வர்க்கம்


ஆகஸ்ட்  29


தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்


தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.


நீதிக்கதை


துன்பம்


பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை ஜன்னல் அருகில். இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!


ஜன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் சொன்னார்.. உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..! கவலைப்படாதே நண்பா.. நான் ஜன்னல் வழியாக என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!


அன்று முதல் ஜன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா....ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி... நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!


எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்... ஜன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்... ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலையில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடி கொண்டிருக்கிறார்கள். மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்... மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்...! 


ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்... ஒருநாள் ஜன்னல் நோயாளி செத்துப்போனார்... மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை ஜன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே செய்யப்பட்டது.


இனி எனக்கு நன்கு பொழுதுபோகும் என்று எண்ணியவாறே... தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே நோக்க... அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை...! அப்படியானால் ஜன்னல் நோயாளி சொன்ன கதைகள்?


மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்... செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்... நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது... புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..! 


நீதி :

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்களை குறைக்கூறாதீர்கள்.


இன்றைய செய்திகள்


29.08.22


* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூருக்கு நீர்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும்.


* பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ சீட் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு.


* அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 187 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  தகர்க்கப்பட்டது.


* சீன எல்லையின் மலைப் பகுதிகளில் இலகு ரக பீரங்கி வாகனம், ட்ரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை.


* இலங்கையில் பட்டினியாக உறங்கும் குழந்தைகள் - யுனிசெப் தெற்காசிய இயக்குநர் வேதனை.


* புறக்கோள் ஒன்றில் CO2 இருப்பதைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.


* உலக ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பாம் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை.


* உலக பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி பதக்கத்தை உறுதி செய்து சாதனை.


Today's Headlines


*Heavy rains in Cauvery catchment areas - Mettur will increase water flow to 1.20 lakh cubic feet.


 * High Court directs allotment of medical seat to Prime Minister's Rashtriya Bala Puraskar awardee.


* Preference for differently-abled persons to run roadside pushcart shops - Ordinance issued.


 * An allocation of Rs.113.74 crore has been made for the rehabilitation of 187 water bodies in Tamil Nadu under the Amruth 2.0 project.


  * A 32-storey modern twin-towered building in Noida near Delhi was demolished following a Supreme Court order.


 * Indian Army moves to use light artillery vehicle, drones in mountainous areas of Chinese border.


 * Children sleeping hungry in Sri Lanka - UNICEF South Asia Director Angam.


 *The James Webb telescope discovered the presence of CO2 in an exoplanet.


* India's Lindhoi Chanambam wins gold medal in World Judo Championship


 *World Badminton Championship: India's Shadwick-Chirag pair secure medal and it was a record.


நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு தருமபுரி மண்டல ஆய்வுக்கூட்டம் செப்டம்பர் 6 & 7 தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Dharmapuri (Namakkal, Krishnagiri, Dharmapuri, Salem District) Zonal Review Meeting to be held on 6th & 7th September - Proceedings of the Commissioner of School Education)...



>>> நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு தருமபுரி மண்டல ஆய்வுக்கூட்டம் செப்டம்பர் 6 & 7 தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Dharmapuri (Namakkal, Krishnagiri, Dharmapuri, Salem District) Zonal Review Meeting to be held on 6th & 7th September - Proceedings of the Commissioner of School Education)...





Today's (29-08-2022) Wordle Answer...

                                                    

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (29-08-2022) Wordle Answer: CHIEF









 

செப்டம்பர் மாத நாள்காட்டி (September Diary)...

 


*🌸செப்டம்பர் மாத நாள்காட்டி (September Diary)...:-*


*03-09-2022 -- குறை தீர்க்கும் நாள்*


*💥RL*


*08 -09-2022 -- வியாழன் --ஓணம் பண்டிகை*


*09- 09-2022 -- வெள்ளி -- சாம உபகர்மா*


*💥அரசு விடுமுறை நாட்கள் இல்லை.*


*💥1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு*


*💥11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை முதல் பருவத் தேர்வு*


*💥அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை விடுமுறை*


*💥அக்டோபர் 6 பள்ளி திறப்பு.*






நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு (21 fake universities in the country – University Grants Commission (UGC) Public Notice reg.: Fake Universities, Dated : 25-08-2022)...



>>> நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு (21 fake universities in the country – University Grants Commission (UGC) Public Notice reg.: Fake Universities, Dated : 25-08-2022)...


நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு


அதிகபட்சமாக டெல்லியில் 8, உ.பி.யில் 4 போலி பல்கலை. இயங்குகின்றன


தமிழ்நாடு இப்பட்டியலில் இல்லை...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...