கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

   

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால்: பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:808

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.

பொருள்:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும்
உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்."


பழமொழி :
கருணை உள்ளமே கடவுள் வாழும் அமைதி இல்லம்.  

Where mercy lives that mind itself where GOD lives peacefully.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே


பொது அறிவு :

"1. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் என்ன?

விடை: வேலைவாய்ப்பை உருவாக்குவது.      

  2.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது?

விடை:  இந்திராகாந்தி"


English words & meanings :

Clove-கிராம்பு,

Coriander-கொத்துமல்லி


வேளாண்மையும் வாழ்வும் :

உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)


நவம்பர் 08

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்

வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம்.


நீதிக்கதை

இரண்டு மரங்கள்!

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது."மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?"

என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்.

அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு'என்றது.

நீதி :உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை கேளுங்கள்.


இன்றைய செய்திகள்

08.11.2024

* மலைப் பகுதி மக்களுக்காக ரூ.1.60 கோடியில் 25 பைக் ஆம்புலன்ஸ் வாங்க தமிழக அரசு உத்தரவு.

* அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்.

* கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் வணிக போக்குவரத்து வாகனம் இயக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் தகவல்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்றைய ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி சீன வீராங்கனை கின்வென் ஜெங் வெற்றி.

* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்காளதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.


Today's Headlines

* Tamil Nadu government orders to buy 25 bike ambulances for hilly people at Rs 1.60 crore.

* Action on absentee teachers in government schools: School Education Department plans to intensify monitoring.

* Car driving license holders can drive commercial vehicles: Supreme Court judgement.

* Australia's prime minister has announced that a new law will be introduced to ban accessing social media of children under the age of 16  .

* China's Qinwen Zheng wins today's Women's Tennis Championship by beating Jasmine Piolini.

* First ODI: Afghanistan beat Bangladesh

Prepared by

Covai women ICT_போதிமரம்


Vaanavil Madram - Activities and guidelines for the academic year 2024 - 2025 - DSE Proceedings

 

 வானவில்‌ மன்றம்‌ - 2024 - 25ஆம்‌ கல்வியாண்டிற்கான செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்‌ : 073040/எம்‌2/இ2/2022 நாள்‌. 18.09.2024


Vaanavil Madram - Activities and guidelines for the academic year 2024 - 2025 - Proceedings of Director of School Education  



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு - பள்ளிக்‌ கல்வித்‌ துறை

பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌

அனுப்புநர்‌ 
முனைவர்‌.ச.கண்ணப்பன்‌, 
பள்ளிக்கல்வி இயக்குநர்‌, 
பள்ளிக்கல்வி இயக்ககம்‌,
பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌,
சென்னை-6.


பெறுநர்‌

முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌,
அனைத்து மாவட்டங்கள்‌.


ந.க.எண்‌ : 073040/எம்‌2/இ2/2022 நாள்‌. .09.2024

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களில்‌ கற்றலை மேம்படுத்துதல்‌ - வானவில்‌ மன்றம்‌ - 2024 - 25ஆம்‌ கல்வியாண்டிற்கான செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தொடர்பாக.

பார்வை : அரசாணை (நிலை) எண்‌.154 பள்ளிக்கல்வித்‌ (SSA 1) துறை, நாள்‌.03.07.2024


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில்‌ 2022 நவம்பர்‌ 28 அன்று வானவில்‌ மன்றம்‌ - நடமாடும்‌ அறிவியல்‌ ஆய்வகம்‌ தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில்‌ உள்ள 13,236 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2024-25ஆம்‌ கல்வி ஆண்டிற்கான வானவில்‌ மன்ற செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது. 



வானவில்‌ மன்றம்‌ - சிறப்பு நோக்கங்கள்‌

* 

மாணாக்கர்கள்‌ சிந்தனையில்‌ புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க ஆர்வமூட்டுதல்‌ மற்றும்‌ அவர்களால்‌ உருவாக்கப்படும்‌ மாதிரிகளுக்கு உரியகாப்புரிமையை பெற வழிகாட்டுதல்‌.


5 மாணாக்கர்கள்‌ பல்வேறு திறனறித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுடன்‌ பங்கேற்க தேவையான அடிப்படை விவரங்களை வழங்கி ஊக்கமளித்தல்‌. ( International National Science and Math Olympiad, NSTSE, Geogenius, NBO, ASSET, NSEJS, HBBVS, NMMS, TRUST, Inspire Award, etc)

*. ஆய்வு மாதிரிகள்‌ தயாரித்தலில்‌ சிறந்த பங்களிப்பை வழங்கி பரிசு பெறும்‌ மாணாக்கர்களை ISRO, Kudankulam Atomic Power Station, IIT, Kavalur Observatory, CLRI போன்ற மாநில / தேசிய அறிவியல்‌ மையங்கள்‌ மற்றும்‌ ஆய்வுக்‌ கூடங்களுக்கு கல்வி சுற்றுலா / களப்பயணம்‌ அழைத்துச்‌ செல்லுதல்‌.

* புதிய செயல்திட்ட மாதிரிகளை உருவாக்கி பரிசு பெறும்‌ மாணாக்கர்களை அயல்நாடுகளில்‌ உள்ள உயர்கல்வி /அறிவியல்‌ மையங்களுக்கு பார்வையிட வாய்ப்பு அளித்தல்‌.


8 ஆம்‌ வகுப்பில்‌ உள்ள கணிதம்‌ மற்றும்‌ அறிவியலில்‌ மீத்திறன்‌ மிக்க மாணாக்கர்களை இனங்கண்டு மாதிரி பள்ளிகளில்‌ சேர்க்கை செய்து தொடர்ந்து கண்காணித்து IIT, NIT மற்றும்‌ IISC போன்ற உயர்‌ கல்வி நிறுவனங்களில்‌ சேர்க்கை செய்திட உதவுதல்‌.


Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு

 

Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு


Group 4 Exam Results - List of Candidates for Certificate Verification - TNPSC Released



>>> TNPSC செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Combined Civil Services Examination-IV (Group-IV Services) Notification No. 01/2024 dated 30.01.2024

1. The candidates who have been admitted provisionally to the

Onscreen Certificate Verification should upload the scanned copy of original documents in support of the claims made in their online application from 09.11.2024 to 21.11.2024 through their One Time Registration (OTR) Platform available in the Commission’s website. 2. Intimation regarding Onscreen Certificate Verification will be

informed through the Commission’s website, SMS and e-mail through registered mobile number and email ID only. No individual communication shall be sent to the candidates by post. 3. The list of Register Number of candidates who have been

provisionally admitted to Onscreen Certificate Verification based on the results of the written examination conducted by the Commission on 09.06.2024 FN and Marks and Rank published on 28.10.2024 are mentioned below.



>>> சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது


 குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.


குரூப் 4 தேர்வு முடிவின் படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு.


நவம்பர் 9 முதல் 21-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்.


தேர்வு முடிவு வெளியான 6 நாட்களில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது - டிஎன்பிஎஸ்சி.




Impersonation in Govt School - Suspension of Teacher

 

அரசுப் பள்ளியில் அரங்கேறிய ஆள்மாறாட்டம் - ஆசிரியர் பணியிடை நீக்கம்


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.


ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.


எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.


எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.



இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.


அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.



அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுதவிர முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் பட்டியலையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி ஆய்வின்போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  


மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine



புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine


 புது ஊஞ்சல் - புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Pudhu Oonjal - 01-15 November 2024 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 இதழ்

   


தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 இதழ்  - Then Chittu - 01-15 November 2024 Magazine 


தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (ThenChittu - 01-15 November 2024 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 இதழ் (Then Chittu - 01-15 November 2024 Magazine)...


Special buses run to Sabarimala for 60 days - TNSTC



60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம்.


சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.


SETC சார்பில் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிப்பு. 


குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி உண்டு.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

  

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் :பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

பொருள்:உரிமைவாழ்வின் எல்லையில்
நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்."


பழமொழி :
தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.  

Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

"உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்."


பொது அறிவு :

1. கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது?

விடை: சோடியம்     

2. . கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்?

விடை: மஞ்சள்


English words & meanings :

Cinnamon-இலவங்க பட்டை,

Clove-கிராம்பு



வேளாண்மையும் வாழ்வும் :

நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)


நவம்பர் 07

மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்


அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.


நீதிக்கதை

ஒரு மாபெரும் கூட்டம்.புகழ் பெற்ற இரண்டு பேச்சாளர்கள் இடையே போட்டி யாருடைய பேச்சுக்கு அதிக கைத்தட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு.

கூட்டம் துவங்குவதற்கு முன் இரு பேச்சாளர்களும் ஒரு அறையில் அமர்ந்து அந்தக் கூட்டத்தை பற்றி  பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வரவே அவர் எழுந்து பேசிக்கொண்டே வெளியில் சென்றார் ஆனால் அவர் எழுதிய அன்றைய பேச்சுக்கான குறிப்புகளை மேஜை மேலே மறந்து விட்டு சென்றார்.

அப்போது அமர்ந்திருந்த மற்றொரு பேச்சாளர் அந்த குறிப்புகளை எடுத்துப் பார்த்தார். அவர் தயாரித்த குறிப்புகளை விட அந்த குறிப்புகள் மிகவும் அருமையாக இருந்தது.

கூட்டம் துவங்கியது.குறிப்புகளை எடுத்துக் கொண்டவர்க்கே முதலில் பேச வாய்ப்பு அமைந்தது. அவரும் தன்னுடைய  குறிப்புகளை விட்டுவிட்டு   எதிர்ப்பேச்சாளர் பேச வைத்திருந்த குறிப்புகளையே தன்னுடைய குறிப்புகள் போல மிகவும் அற்புதமாக பேசி முடித்தார்.

எதிர் பேச்சாளருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. அடுத்து அவர் பேச வேண்டும். அவர் என்ன பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை. மெதுவாக எழுந்து சென்று, மைக்கை பிடித்து, "முதலில் எனக்கு முன்னால் பேசியவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு தொண்டை கட்டு என்னால் சரியாக பேச முடியாது. எனது உரையை நீங்கள் வாசிக்க முடியுமா? என்று கூட்டம் துவங்குவதற்கு முன் கேட்டேன். அவர் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்" என்று  கூட்டத்தை பார்த்து கூறி அமர்ந்தார்.

நீதி :  சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவன் தான் புத்திசாலி


இன்றைய செய்திகள்

07.11.2024

* தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* மத நல்லிணக்கத்துக்காக தமிழக அரசால் வழங்கப்படும் கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கத்துக்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

* அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய வீரர் ரிஷப் பண்ட் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Government of Tamil Nadu has approved the Artificial Intelligence Initiative report and issued an ordinance allocating Rs.13.93 crore to implement the initiative.

*  Eligible candidates can apply for the Kottai Ameer Reconciliation Medal given by the Tamil Nadu government for religious harmony by November 25.

* Union Minister Kiran Rijiju has said that the winter session of Parliament will begin on November 25.

* Republican candidate and former president Donald Trump won the US presidential election.

* Women's Tennis Championships: American Coco Cobb advances to semifinals

* ICC Test Rankings: Indian batsman Rishabh Pant moves up to 6th place



Prepared by

Covai women ICT_போதிமரம்


Term 2 - 1 To 5th Std - Formative Assessment Time Table 2024-25

 

 எண்ணும் எழுத்தும் - 1 To 5th Standard வளரறி மதிப்பீட்டிற்கான FA கால அட்டவணை 2024-25 - Term II


Dear All, 

Please note that FA(b) Assessment Cycle 1 for 4 & 5 is scheduled tomorrow onwards.  please circulate this poster with teachers. Thank you



>>> கால அட்டவணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






அலைபேசி எண் OTP இல்லாமல் TPF Account Slip Download செய்யும் வசதி


அலைபேசி எண் கடவுச்சொல் இல்லாமல் வருங்கால வைப்பு நிதி கணக்குத்தாள் Teachers Provident Fund Account Slip பதிவிறக்கம் செய்யும் வசதி


Facility to Download TPF Account Slip without Mobile Number OTP



வருங்கால வைப்பு நிதி கணக்கு செல்போன் நம்பர் மாற்றம் செய்ய விரும்புவர்கள் தற்போது எளிதாக மாற்றம் செய்யலாம். ஓடிபி கேட்பதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதால் தொலைந்த செல்போன் நம்பரை பதிவு செய்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வருங்கால வைப்பு நிதி புதிய செல்போன் நம்பரை மாற்றம் செய்து கொள்ள அனைத்து ஆசிரியர்களும் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாற்றம் செய்ய விரும்புவோர் மட்டும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Minister visited the school on the invitation of the Headmaster



தலைமையாசிரியரின் அழைப்பை ஏற்று பள்ளியைப் பார்வையிட்டார் அமைச்சர்


Minister visited the school on the invitation of the Headmaster


அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் முகநூல் பதிவு 

 டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.க.வளர்மதி அவர்களின் அழைப்பினை ஏற்று இன்று அப்பள்ளிக்கு சென்றோம்.


‘எம்மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்’ என அழைப்பு விடுத்தார் தலைமை ஆசிரியர். ‘பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு தடையின்றி வாசிப்பார்களா?’ எனும் எண்ணத்தோடு அப்பள்ளிக்கு சென்றோம். 


உண்மைதான்! அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கின்றார்கள். எழுதுகின்றார்கள். தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


பெருமதிப்பிற்குரிய அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே நீங்களும் அழையுங்கள். தங்களின் அன்பான அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார்கள். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள். நானும் வருவேன்!


இன்றே பயணத்தைத் தொடங்குவோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழியில் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம். 


Tamilnadu_School_Education_Department


💢வளர்மதி டீச்சரைப் போல ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் OPEN CHALLENGE விட வேண்டும்.. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்.."


ஓசூர் அடுத்த டி.புதூர் ஊராட்சியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் அழைப்பை ஏற்று ஆய்வு மேற்கொண்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Local Holiday on 15-11-2024 for Mayiladuthurai District - District Collector

 


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-11-2024 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



Local Holiday on 15-11-2024 for Mayiladuthurai District - District Collector





நவம்பர் 15ல் மயிலாடுதுறைக்கு உள்ளூர் விடுமுறை


காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.


 விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 23ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.

Post Graduate Teacher Promotion - Additional Instructions - DSE Proceedings

 

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்


Post Graduate Teacher Promotion Regarding Commerce Subject - Additional Instructions - DSE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2024

 

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் :பொருட்பால்
அதிகாரம்: பழைமை
குறள் எண்:807
அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
பொருள்:அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்."


பழமொழி :
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.  

  Even water can be held in a seive, if you wait  till it turns to ice.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று வருந்தாதே, நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும்,  நீ முயற்சி செய்தால் ....


பொது அறிவு :

1. ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது?

விடை: ஹீமோகுளோபின்

2. மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக்காரணம் என்ன?

விடை: பரப்பு இழுவிசை


English words & meanings :

Bay Leaf-நறுமண இலை,

Chilli-மிளகாய்


வேளாண்மையும் வாழ்வும் :

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, சில முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.


நவம்பர் 06

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்


நீதிக்கதை

ஒரு வயதான மேஸ்திரி தனது வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அவரது கனவு.

தனது முதலாளியான பொறியாளரிடம் சென்று தான் ஓய்வு பெறும் செய்தியை கூறினார். தனது நீண்ட கால பணியாளர் ஒருவர் ஓய்வு பெறுவதில் முதலாளிக்கு சிறிய வருத்தம்தான்.சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் "எனக்கு  எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், இன்னும் ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டிக் கொடுக்க  முடியுமா?" என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து வேலையை தொடங்கி விட்டாலும் அவரால் அவரால் முழு மனதுடன் அந்த வேலையில் ஈடுபட முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பை கொண்டு அந்த வீட்டை கட்டி முடித்தார். "வேலையில் இருந்து ஓய்வு பெற போகிறோம் இந்த வீட்டை மட்டும் ஒழுங்காக கட்டினால் மட்டும் இனிமேல் என்ன கிடைக்கப் போகிறது" என்று அலட்சியமான போக்கு அவருக்கு.

வேலை எல்லாம் முடிந்த பிறகு வீட்டை  பார்வையிட்டு விட்டு வந்த முதலாளி  அந்த வீட்டின் சாவியை எடுத்து மேஸ்திரியிடம்f கொடுத்தார். " இந்தாருங்கள் இந்த வீடு  தங்களுக்காக நாங்கள் அளிக்கும் அன்பு பரிசு. இத்தனை வருடங்கள் எங்கள் நிறுவனத்திற்காக வேலை செய்தமைக்கான வெகுமதி" என்று மிகவும் சந்தோஷத்துடன் கூறினார்.

மேஸ்திரியின் முகத்தில் 

ஈயாடவில்லை. "அடடா! நமக்கான வீடு என்று தெரிந்திருந்தால் இன்னும் பலப்பல டிசைன்களில் வடிவமைத்திருக்கலாம், மிக உயர்தரமான பொருட்களைக் கொண்டுஅலங்கரித்திருக்கலாம் என்று மனதில் எண்ணினார்.

நீதி : நமக்கான வாழ்க்கையை நாம் தான்  தீர்மானிக்கிறோம். செய்யும் தொழிலே தெய்வம்.


இன்றைய செய்திகள்

06.11.2024

* தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அழைப்பு.

* மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின்இணைப்பு பெயர்மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

* ‘பொது நன்மை’க்காக தனியார் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

* உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்: டெல்லியை விட 6 மடங்கு மோசம் என தகவல்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு தகுதி.

* தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: தமிழ்நாடு அணி வெற்றி.


Today's Headlines

* Apply through website to set up 'Multhalvar Dispensary' in Tamil Nadu: Tamil Nadu Government Invitation

* Electricity Board has exempted 25 services from charging GST including relocation of electrical equipment, meter rental, replacement of burnt meter, renaming of power connection.

* A constitution bench of the Supreme Court has ruled that the government has no power to acquire private property for 'public good'.

* Lahore is the most polluted city in the world: 6 times worse than Delhi.

* Women's Tennis Championships: Belarus Sabalenka advances to semi-finals

* National Senior Hockey Tournament: Tamil Nadu team wins.

Prepared by

Covai women ICT_போதிமரம்


TET is required for promotion – Notification of hearing date in Supreme Court

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET அவசியம் - வழக்கு விசாரணைக்கு வரும் தேதி அறிவிப்பு


TET is compulsory for promotion – Notification of hearing date in Supreme Court 


ஏற்கனவே 19.11.2024க்கு ஒத்திவைக்கப்பட்ட TET வழக்கு தற்போது 22.11.2024ல் `விசாரணைக்கு வரலாம்` என அறிவிப்பு...



>>> Case Status தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"Remaining promises will be fulfilled soon" - Chief Minister Mr. M.K.Stalin

"எஞ்சிய வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம்" - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 



"Remaining promises will be fulfilled soon" - Chief Minister Mr. M.K.Stalin



Apply through Mudhalvar Marunthagam website to set up Chief Minister's Pharmacy - Tamil Nadu Government Announcement

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு



B.pharm graduates can apply through Mudhalvar Marunthagam website to set up Chief Minister's Pharmacy - Tamil Nadu Government Announcement 


தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்கள்.


இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.



முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.



தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.



தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு




12.5 Crore Tamil Nadu Govt Fund Released to Conduct 25 Sports Competitions & Chess Tournament in Schools


பள்ளிகளில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் & சதுரங்கப் போட்டியை நடத்த ரூ.12.5 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு


12.5 Crore Tamil Nadu Govt Fund Released to Conduct 25 Sports Competitions & Chess Tournament in Schools


அனைத்து வகைப் பள்ளிகளிலும் குறுவட்ட அளவு முதல் தேசிய அளவு வரை 38 மாவட்டங்களிலும் 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், மாநில அளவில் சதுரங்கப் போட்டியை நடத்தவும் ரூ.12.5 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு





Fellowship to students who research on tribal people in Tamil Nadu - G.O. (Ms) No: 81, Dated : 03-10-2024

 

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொடர்பான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 81, நாள் : 03-10-2024 & விண்ணப்பப் படிவங்கள் வெளியீடு


Grant of Fellowship scholarships to students undertaking study and research related to tribal people in Tamil Nadu - Ordinance G.O. (Ms) No: 81, Dated : 03-10-2024 & Application Formats 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


District wise Authorized Service Center Name and Address for Tablets provided to Teachers

 


Authorized Service Center Name and Address for Tablets provided to Teachers - District wise 


 THE SUPPLIER/OEM/ OEM RESELLER SHALL HAVE SERVICE CENTRES IN EACH DISTRICT AND SHALL PROVIDE THE NAME, ADDRESS AND CONTACT MOBILE NUMBER OF THE INCHARGE OF SERVICE CENTRE / AUTHORISED PERSON



மாவட்ட வாரியாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கணினி Tabletக்கான Authorised Service Centre Name and Address



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Scholarship Details for SC, BC & MBC Students

 

SC, BC & MBC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் விவரம்


Scholarship Details for SC, BC & MBC Students



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Chief Minister's Review Meeting in school education department On 08-11-2024



08-11-2024 அன்று முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் வருகின்ற 8ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளார்கள்.


அதனை முன்னிட்டு  மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் Tamilnadu School Education Department இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.


 

October 2024 Pay Demand Bill Form for Temporary Teachers appointed by SMC


 பள்ளி மேலாண்மை குழு SMC School Management Committee மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு அக்டோபர் 2024 மாத ஊதிய கேட்பு படிவம்


October 2024 Pay Bill Model Form for Temporary Teachers appointed by SMC



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Headmaster invited Minister to visit for inspection - Minister assured that he would come soon


ஆய்வுக்கு வருகை புரிய அழைப்பு விடுத்த தலைமை ஆசிரியர் - விரைவில் வருவதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் உறுதி


Headmaster invited Minister to visit for inspection - Minister assured that he would come soon





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : பொருட்பால்
அதிகாரம் :நட்பு
குறள் எண்: 818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
பொருள்: தம்மால் முடியக்கூடிய செயலையும், முடிக்க முடியாதபடி கெடுப்பவரின் நட்பை, அவர் அறியும்படி எதுவும் சொல்லாமலே தளரச் செய்து கை விடுதல் வேண்டும்."

பழமொழி :
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.   

A car without a linch-pin will not move even three spans.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

நடக்கும் முன்னே.. நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள், நடந்த பின்னே ... நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.


பொது அறிவு :

"1.கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் எது?

விடை: ஆந்த்ராக்ஸ்.     

2. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

விடை: சுரதா


English words & meanings :

Asafoetida-பெருங்காயம்,

Basil-துளசி


வேளாண்மையும் வாழ்வும் :

வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.


நவம்பர் 05

விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்

விராட் கோலி பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது , 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது . இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஶ்ரீ விருது வழங்கியது.. துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது. மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[]ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.


உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.


நீதிக்கதை

ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நீரால் நிரம்பியது. ஏரியின் குளிர்ச்சியை தாங்க முடியாத தவளை ஒன்று, மழை நின்றவுடன் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்குமே என நினைத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தது.

பல காலமாக அந்த கிணற்றில் வாழ்ந்து வந்த மற்றொரு தவளை இந்த புதிய தவளையை வரவேற்றது. மேலும்,பொந்தில்  சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை எடுத்து புதிய  தவளைக்கு கொடுத்து மகிழ்ந்தது.

கிணற்றில் இருந்த மற்ற தவளைகளுக்கு புதியதாக வந்த தவளையை பிடிக்கவில்லை.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்பொழுது கிணத்து தவளை ஏரி தவளையிடம், "நண்பனே! இத்தனை நாள் நீ எங்கே தங்கி இருந்தாய்?" என்று கேட்டது.

அதற்கு புதிய தவளை,  நான் ஏரியில் தங்கி இருந்தேன் அங்கு  மீன், முதலை,ஆமை போன்றவை வாழ்கின்றன. ஏரி இந்த கிணற்றை விட மிகப்பெரியதாக இருக்கும்" என்று கூறியது.

அதற்கு அந்த கிணற்றுத் தவளை மிகவும் கோபத்துடன் "நண்பா நீ பொய் சொல்கிறாய். இந்த கிணற்றை விட மிகப்பெரிய நீர் நிலை இந்த உலகத்திலேயே இல்லை  என்று கூறியது.ஏரி தவளை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.

எல்லா கிணற்றுத் தவளைகளும் ஏரி தவளையை பார்த்து," நீ பொய்யன். நீ பொய் சொல்கிறாய் கிணற்றை விட பெரிய நீர் நிலை உலகில் எதுவும் இல்லை என்று  ஒரு சேர சத்தமிட்டன.

அப்போது ஒரு பெண்மணி தண்ணீரை எடுப்பதற்காக வாழியை கிணற்றுக்குள் இறக்கினார். அந்த வாளிக்குள் ஏறி  கிணற்றில் இருந்து வெளியே வந்தது ஏரி தவளை,

குளிர்ச்சியான தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏரியை நோக்கி சென்றது.

நீதி: முட்டாள்களுடன் இருப்பதை விட தனியே இருப்பதே சிறந்தது


இன்றைய செய்திகள்

05.11.2024

* டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

* 'டிஜிட்டல் அரெஸ்ட்' விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.

* இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு.

* பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

* தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: முதல் நாளில் கர்நாடகா, மத்திய பிரதேச அணிகள் வெற்றி.


Today's Headlines

* Tamil Nadu Legislative Assembly to meet in first week of December: Official announcement soon.

* Weather forecast: There will be chance of rain in Tamil Nadu for next 6 days.

* Public should be aware of 'Digital Arrest' issue.  The enforcement department has advised that nobody should be got  cheated through cell phones and social media.

* There is  volcano eruption in Indonesia: 9 dead and  10,000 became homeless

* Paris Masters International Tennis Tournament: Alexander Zverev of Germany won the men's singles title.

*  National Senior Hockey Tournament: Karnataka, Madhya Pradesh won on first day.



Prepared by

Covai women ICT_போதிமரம்


HC Madurai Branch Order to pay Retirement Benefit with 5% Interest to Headmaster within 2 Months


 தலைமை ஆசிரியருக்கு 5% வட்டியுடன் ஓய்வூதிய பணப்பலன் - 2 மாதத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


High Court Madurai Branch Order to pay Retirement Benefit with 5% Interest to Headmaster within 2 Months



>>> நாளிதழ் செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2024

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : பொருட்பால்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண்: 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."


பழமொழி :
  அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.   

The fearless goes into the assembly.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

புத்தக கடையில் புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது நல்ல புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்னை முன்னேற்றம் நோக்கி புரட்டி போட வைக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம்.....


பொது அறிவு :

1.நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம்

விடை: ஊதா.    

2. பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது?

விடை: கல்லீரல்


English words & meanings :

Pliers-இடுக்கி,

Sewing Machine-தையல் இயந்திரம்


வேளாண்மையும் வாழ்வும் :

சில சமயங்களில் அரசாங்கம் இயற்கை விவசாயததிற்கு அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இயற்கை விவசாய முறைமைக்கு மாறினர்..


நீதிக்கதை

ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே ஒரு துறவி அமர்ந்திருந்தார்.

அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன் அந்த துறவியை பார்த்து, "ஏய் கிழவா, ஏற்கனவே இந்த வழியாக  யாராவது சென்றார்களா?" என்று சற்று அதிகாரத்துடன்

மரியாதையின்றி கேட்டான்.

அதற்குத் துறவி, "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று கூறினார். சிறிது நேரம் கழித்து வேறொருவர்  வந்து, "ஐயா இந்த வழியாக யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "ஆம்.சற்று முன்பாக இதே கேள்வியை கேட்டுக் கொண்டு ஒருவர் சென்றார்" என்று பதில் கூறினார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து,  இன்னொருவர் வந்து  "வணங்குகிறேன் துறவியாரே! இந்த வழியாக யாரேனும் செல்லும் சப்தம் தங்களுக்கு கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டார். அதற்குத் துறவி, "மன்னரே! வணக்கம் முதலில் ஒரு வீரனும் அதற்குப் பின் ஒரு அமைச்சரும் தாங்கள் கேட்ட கேள்வியையே கேட்டுக்கொண்டு சென்றார்கள்" என்று கூறினார்.

அப்போது மன்னர் மிகவும் ஆச்சரியத்துடன், "ஐயா, தங்களுக்கு கண் பார்வை கிடையாது ஆனால் வந்தவர் வீரன் என்றும் அமைச்சர என்றும் எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்டார்.

அதற்குத் துறவி "இதை கண்டுகொள்ள பார்வை தேவையில்லை அவரவர் பேசும் முறையைக் கொண்டு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம்" என்றார். மேலும் "முதலில் வந்தவர் பேச்சில் கொஞ்சம் மரியாதையின்மையும் அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரமும் தங்களின் பேச்சில் பணிவும் இருக்கிறது"என்று துறவி கூறினார்.

நீதி :  நமது பேச்சே நமது நடத்தையை தீர்மானிக்கிறது.


இன்றைய செய்திகள்

04.11.2024

* வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* செம்பரம்பாக்கம் ஏரி ரூ.22 கோடியில் சீரமைப்பு: டெண்டர் கோரியது நீர்வளத் துறை.

* நோய்களை தடுத்து ஆரோக்கியமான மக்களை உருவாக்க பனிமலை, பாலைவனம், தீவாக இருந்தாலும் தடுப்பூசி சேவை வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல்.

* சீனர்கள் மீதான தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்.

* 31 அணிகள் பங்கேற்கும் தேசிய ஹாக்கி போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்.

* ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டி; இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Health Minister M. Subramanian has said that the medical camps will continue to function until the northeast monsoon ends.

*  Renovation of Chembarambakkam lake at Rs 22 crore: Water resources department calls for tender.

* The central government informed that vaccination services are provided even in mountains, deserts and islands to prevent diseases and create healthy people.

*  Pakistan must curb terror attacks on Chinese: Chinese govt insists

*   National Hockey Tournament in which 31 team participate will Start today in Chennai.

* Hilo Open Badminton Tournament;  Indian player Malavika Bansod advances to final.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...