கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Transfer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Transfer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2025-2026 - DEE Transfer Counselling Schedule

 

 

2025-2026ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 26-06-2025


2025-2026 - General Transfer Counselling Schedule - DEE Proceedings, Dated : 26-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*தொடக்கக்கல்வித்துறைகலந்தாய்வு நடைபெறும் நாள் கிழமை*


1. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் | விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் ஒப்புதல் அளித்தல்


26.06.2025 வியாழன் மற்றும் 27.06.2025 வெள்ளிக் கிழமை


2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்


28.06.2025 சனிக் கிழமை காலை 10 மணிக்கு


3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections) அத்துடன் காலிப்பணியிட விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (Vacancy upload)


28.06.2025 சனிக் கிழமை


4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Release of seniority list)  (Release of Vacancy List) விவரங்கள் வெளியிடுதல்


மற்றும் மலை சுழற்சி கலந்தாய்வு மாவட்டங்களில் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் அவ்வாசிரியரின் பெயர் பட்டியல் பதிவேற்றம் செய்தல்


30.06.2025 திங்கள்கிழமை


5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்)


02.07.2025 புதன் கிழமை


6. இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) பணிநிரவல்


03.07.2025 முற்பகல் வியாழக்கிழமை


7. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)


03.07.2025 பிற்பகல் வியாழக் கிழமை


8. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


04.07.2025 வெள்ளிக் கிழமை


9. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)

05.07.2025 முற்பகல் சனிக் கிழமை



10. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


கலந்தாய்வு நடைபெறும் நாள் கிழமை


05.07.2025 பிற்பகல் சனிக் கிழமை


07.07.2025 முதல் 11.07.2025 வரை


11. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


12. இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான நேரடி நியமன கலந்தாய்வு


14.07.2025 18.07.2025 வரை


13. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)


19.07.2025 சனிக்கிழமை


14. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


19.07.2025 சனிக்கிழமை


15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


21.07.2025 திங்கட்கிழமை


16. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்)


| 22.07.2025 முற்பகல் செவ்வாய் கிழமை


17. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


22.07.2025 செவ்வாய் கிழமை


18. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


23.07.2025 புதன் கிழமை


19. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)


24.07.2025 வியாழக் கிழமை


20. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


25.07.2025 வெள்ளிக் கிழமை


21. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


26.07.2025 மற்றும் 28.07.2025 முதல் 30.07.2025 வரை



கணவன் மனைவி பணி முன்னுரிமை (Spouse Priority) பயன்படுத்த 3 ஆண்டுகள் எனும் நிபந்தனை நீக்கம் - அரசாணை வெளியீடு

 

பொது மாறுதல் கலந்தாய்வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணவன் - மனைவி பணி முன்னுரிமை (Spouse Priority) பயன்படுத்த முடியும் எனும் நிபந்தனை நீக்கம் - அரசாணை (நிலை) எண்: 94, நாள் : 24-05-2023 வெளியீடு


Removal of the condition that Spouse Priority can be used only once in 3 years in the General Transfer Counselling - Government Order G.O. (Ms) No. : 94, Dated: 24-05-2023 Released


 இந்த அரசாணை கல்வி ஆண்டு (2023-2024) முதலே நடைமுறைக்கு வந்து விட்டது



>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க ஓராண்டு கால நிர்ணயம் என்பது இல்லை

 

 

அனைவருக்கும் வணக்கம்,

அரசாணை (நிலை) எண் : 180 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 17.10.2022 ன் படி மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க ஓராண்டு கால நிர்ணயம் என்பது இல்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே அதன் அடிப்படையில் ஓராண்டுக்குள் இருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்


மேற்கண்ட தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இன்று 25-06-2025 ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், தங்கள் உயர் அலுவலர்களிடம் இத்தகவலையும் , G.O. (Ms) No : 180 , School Education Department, Dated : 17.10.2022 குறித்தும் உறுதி செய்து கொண்டு விண்ணப்பியுங்கள்.


அரசாணை (நிலை) எண் : 180 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 17-10-2022 அரசாணை நகல் இருப்பின் kalvianjal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நன்றி


55 IAS Officers Transferred including District Collectors

 

 

 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு 



55 IAS Officers Transferred including District Collectors - G.O. No. 2367, Dated : 23.06.2025 Released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2025-2026 Teachers' Transfer Counselling - DSE Proceedings

 

 

2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு - 19.06.2025 முதல் 25.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் - கலந்தாய்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் - DSE செயல்முறைகள்


இந்த ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண் : 037584/ சி3/ இ1/2025, நாள் : 18.06.2025


பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி - 2025-2026ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:17.12.2021.

2. அரசாணை (நிலை) எண்.180, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:17.10.2022.

3. அரசாணை (நிலை) எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:24.05.2023.

4. அரசாணை (நிலை) எண்.26, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:24.01.2024.

5. அரசாணை (நிலை) எண்.164, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள் : 11.07.2024.


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-ல் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

2. அதே போல 2025-26 ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு பணிகள் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், அதனைத் தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

* மேற்படியான மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19.06.2025 முதல் 25.06.2025 அன்று மாலை 6.00 வரை EMIS-ல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.



>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2025-2026 Teachers' Transfer Counselling - DEE Proceedings

 

2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு - 19.06.2025 முதல் 25.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் - கலந்தாய்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் - DEE செயல்முறைகள்


இந்த ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண் : 13466/டி1/2025, நாள் : 18.06.2025


பொருள்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2025-2026ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:17.12.2021.

2. அரசாணை (நிலை) எண்.180, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:17.10.2022.

3. அரசாணை (நிலை) எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:24.05.2023.

4. அரசாணை (நிலை) எண்.26, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:24.01.2024.

5. அரசாணை (நிலை) எண்.164, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள் : 11.07.2024.

6. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண் : 98391/டி1/2024, நாள் : 07.05.2024 முதல் 22.06.2024.


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-ல் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

2. அதே போல 2025-26 ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு பணிகள் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், அதனைத் தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

* மேற்படியான மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19.06.2025 முதல் 25.06.2025 அன்று மாலை 6.00 வரை EMIS-ல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை

 

Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் உங்களது வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை


Kalanjiyam செயலியில் Download செய்யப்படும் உங்களது Pay slip - ல் TOKEN NUMBER / DATE என்ற களத்திற்கு நேராக உள்ள முதல் 8 இலக்க எண்களே உங்கள் அலுவலக DDO code ஆகும். குறித்து வைத்துக் கொள்ளவும்.




ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு

 

Transfer application form enable in EMIS individual login. Proper Director Proceedings Expected to be published soon


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு - விரைவில் இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு



General Transfer Counselling 2025 - ADW School Teachers & Wardens

 

 ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளி ஆசிரியர்கள் & காப்பாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு


General Transfer Counselling 2025 - ADW School Teachers & Wardens 


Transfer Counseling for Adi Dravidar Welfare Department School Teachers - Vacancy Details Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை எண்: 107, நாள் : 19-05-2025 வெளியீடு

 

 பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை (வாலாயம்) எண்: 107, நாள் : 19-05-2025 வெளியீடு

 

Government Order No. 107, Date: 19-05-2025, Transfer of Joint Directors in the School Education Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்


தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 6 பேருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:


1. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக செயல்பட்டு வந்த ச.சுகன்யா, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநகராக மாற்றப்பட்டுள்ளார்.

2. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக செயல்பட்டு வந்த அ.ஞானகௌரி, இடைநிலை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

3. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இடைநிலை இணை இயக்குநர் ஆர்.பூபதி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (சிறப்பு திட்டங்கள்) இணை இயக்குநராக மாற்றம செய்யப்பட்டுள்ளார்.

4. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக (நிர்வாகம்) செயல்பட்டு வந்த ச.கோபிதாஸ், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் (மேல்நிலைக் கல்வி) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (சிறப்புத் திட்டங்கள்) ஆர்.சுவாமிநாதன், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கவர்னரின் ஆணைப்படி இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Transfer Counseling for BEOs held on today

 


வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-ல் மாறுதல் கலந்தாய்வு


Transfer Counseling for Block Education Officers held today, May 16th


வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்தாய்வில்... தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில், 30.04.2025 தேதியில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் 30.06.2025 தேதிவரை ஓய்வு பெறவுள்ள வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்வோா் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னா் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மீண்டும் மாறுதல் கோரக் கூடாது. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக கடைசியாகப் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மாறுதல் கோரக் கூடாது. 


மாறுதல் முன்னுரிமைப் பட்டியல், தகுதி வாய்ந்தோா் பட்டியல் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம் மே 15-ஆம் தேதி வெளியிடப்படும்.


இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் முதலில் மாவட்டத்துக்குள்ளும், பின்னா் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதே முறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


List of 452 BEOs who have completed 3 years of service

 

 இன்று 16.05.2025 நடைபெறவிருக்கும்  பொதுமாறுதல் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய மூன்றாண்டுகள் பணிமுடித்த  452 வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியல்


List of 452 Block Education Officers who have completed three years of service and are required to attend the general transfer counselling to be held today, 16.05.2025



மூன்றாண்டு பணிமுடித்த  இணைப்பில் கண்டுள்ள 452 வட்டாரக்கல்வி அலுவலர்களும்,  இன்று 16.05.2025 -ல்   இணையவழியில்   நடைபெறவிருக்கும்   பொதுமாறுதல் கலந்தாய்வில்  (EMIS) கட்டாயம் கலந்து கொள்ளுவதை  உறுதி செய்யுமாறு   அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Block wise BEOs List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு சுற்றறிக்கை - தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியீடு...



BEOs Transfer Counselling Circular - DEE


வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு சுற்றறிக்கை - தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியீடு


Transfer Counselling Circular for Block Education Officers - Directorate of Elementary Education



>>> இன்று 16.05.2025 நடைபெறவிருக்கும்  பொதுமாறுதல் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய மூன்றாண்டுகள் பணிமுடித்த  452 வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியல்...


2025-2026 - BEOs Transfer Counselling Procedure, Timetable & Application Form - DEE Proceedings

 

 

2025-2026ஆம் கல்வி ஆண்டு - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைமுறை, கால அட்டவணை & விண்ணப்பப் படிவம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004634/ ஐ1/ 2025, நாள்: 05-05-2025 வெளியீடு


2025-2026 - BEOs Transfer Counselling Procedure, Timetable & Application Form - DEE Proceedings


Academic Year 2025-2026 - General Transfer Counselling Procedure, Timetable & Application Form for Block Education Officers - Proceedings of the Director of Elementary Education R.C. No.: 004634/ I1/ 2025, Dated: 05-05-2025



வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


Misuse of power to please a few is unacceptable - High Court reprimands officials


 அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிபவர் நீலநாராயணன். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி நீலநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு : மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது, சில ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில் தவறு இருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மனுதாரர் கூறியது உறுதி செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடியில் தொடர்புடைய ஆசிரியர்கள் மனுதாரருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்றதும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.


இந்தப்புகாரை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் விசாரிக்காமல் மனுதாரரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் எந்த விவரங்களும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில், “மனுதாரருக்கு எதிராகக் குற்றம் சுமத்திய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிர்வாகத்தை சுமூகமாக்கும் நோக்கில் மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், யாரை திருப்திப்படுத்த பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் அவசரமாக பணியிட மாற்ற உத்தரவைப் பிறப்பித்தார் என்பதையும், அதற்கான அவசரத் தேவை என்ன? என்பதையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆசிரியர்களோடு இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை என்பதற்காக பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு மிகவும் விசித்திரமாக உள்ளது.


நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுடன் மனுதாரரால் இணக்கமான உறவைப் பேண இயலவில்லை எனில் திருப்பத்தூர் மாவட்ட ஆசிரியர்களுடன் மட்டும் அது எப்படி சாத்தியமாகும்? உரிய காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தை நேர்மையாக, உண்மையான, உரிய காரணத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் அது ஏற்கத்தக்கது அல்ல.


எந்த ஊழியரையும் நீதியின்றி காயப்படுத்தக் கூடாது. அது அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் காயப்படுத்தும். ஊழல், தவறான நோக்கத்தில் செயல்படும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க எந்த தயக்கமும் தேவையில்லை. சில ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் பணியிட மாறுதல் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது. இந்த வழக்கில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு நீதியற்றது.


ஊழியர்கள் அல்லது சங்கங்களால் அளிக்கப்படும் புகார்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முழு விவரத்தையும் விரிவாக ஆராயாமல் இடமாறுதல் வழங்கியதாக கூறப்படும் காரணங்களை ஏற்க இயலாது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், எந்த அரசு ஊழியரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. எனவே, பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் மனுதாரரை பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்


வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்

 

வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் BEOs Transfer Counseling 


Information regarding the Block Education Officer transfer counselling 



 தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ 


      05-04-2025 காலை திருச்சி மாவட்டம் முசிறியில் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் நடத்தினார்.


  இக்கூட்டம் தொடங்கும் முன் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பணி ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிக்கொடை பெற இயலாமல் இருப்பது, தணிக்கைத் தடை மற்றும் கலந்தாய்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.


 07-02-2019 முதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஊதியம் நிர்ணயம்  செய்துள்ளது சரியானது என்பதை கூறியதோடு, கூட்டம் நடைபெறும் போது கூட்ட மேடையிலும் மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.


 தணிக்கை நீக்கம் குறித்து நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரிடம்  விவரம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


100 days Challenge மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் முடிவுற்றவுடன் கலந்தாய்வு  நடத்திடுவதாகவும் கூறினார்.


- இரா. தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்


Issue of giving sweets in school on Political Leader Birthday - Assistant Headmistress transferred



 பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம் - உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்


Issue of giving sweets in school on Political Leader Birthday - Assistant Headmistress transferred


அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகா் இனிப்பு வழங்கிய விவகாரம்: உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்


மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகா் இனிப்பு வழங்கிய விவகாரம் தொடா்பாக உதவி தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் நேதாஜி என்பவா் இனிப்பு வழங்கியுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடா்பாக சிலா் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்தனா்.


தொடா்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்த நிலையில், பணியிலிருந்த உதவி தலைமை ஆசிரியை அமுதா, பள்ளியில் அரசியல் கட்சியினா் இனிப்பு வழங்க அனுமதியளித்தாராம்.


இது விதிமுறை மீறல் எனவும் துறை ரீதியான நடவடிக்கையாக, உதவி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும், அந்த பள்ளியின் 5 ஆசிரியா்களுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.




Controversial comment on girl sexual abuse - District Collector change



சிறுமி பாலியல் வன்புணர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்


Controversial comment on girl rape - Mayiladuthurai district collector change


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. 


புதிய ஆட்சியராக ஶ்ரீகாந்த் IAS நியமனம். 


சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாற்றம்.


மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பேசும்போது, “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.


சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை கவனமாக கையாள வேண்டும். காவல் துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது, அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல் துறையினர் எடுக்க வேண்டும்.



காவல் துறையினர் இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஒரு குழந்தையை கையகப்படுத்தும் காவல் துறை அலுவலரின் கடமைகள், செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) ரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


சர்ச்சைக் கருத்து: இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பேசுகையில், ''கடந்த வாரம் சீர்காழியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது. சிறுமி குடும்பத்தினருக்கும், அந்த சிறுவனின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.


அன்று காலை அந்த சிறுமி சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுள்ளார். அந்த ஆத்திரத்தில் சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதில் இரண்டு தரப்புகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது எனவே, இதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். எனவே, பெற்றோர்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.


இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.


ஆட்சியர் மாற்றம்: பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். எனினும், மகாபாரதி எங்கு, எந்தத் துறைக்கு மாற்றப்பட்டார் என உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.




Transfer of 38 IAS Officers - G.O.No: 502, Dated : 09-02-2025

 

 பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வாலாயம் எண்: 502, நாள் : 09-02-2025 வெளியீடு 


Transfer of 38 IAS Officers including Principal Secretary School Education - Government of Tamil Nadu Ordinance G.O.No: 502, Dated : 09-02-2025 Issued


38 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக திரு. பி. சந்திரமோகன் அவர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





 தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலராக மணிவாசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலராக ஜெயகாந்தன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்


Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்பமாறுதல் - திருத்திய மாறுதல் முன்னுரிமையில் பணியில் சேர்ந்த நாள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள் : 24-12-2024



Part-time teachers preferring to work in schools where students are proportionately eligible - Date of joining service on revised transfer priority norms - State Project Director's letter, dated : 24-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...