கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி...



2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி - 2024 School Calendar...



குறிப்பு : 25.01.2024 (வியாழன்) தைப்பூசம் - அரசு விடுமுறை விடுபட்டுள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*_2024 ஜனவரி மாத நாட்காட்டி -*


*25.01.2024 (வியாழக்கிழமை) தைப்பூசம் - அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது._*


*01.01.2024 திங்கள்கிழமை ஆங்கில புத்தாண்டு அரசு விடுமுறை.*


*15.01.2024 - திங்கள்கிழமை பொங்கல் அரசு விடுமுறை.*


*16.01.2024 -செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை.*


*17.01.2024 - புதன்கிழமை உழவர் திருநாள்.அரசு விடுமுறை.*


*25.01.2024 - வியாழக்கிழமை தைப்பூசம் அரசு விடுமுறை*


*26.01.2024 - வெள்ளிக்கிழமை குடியரசு தினம் அரசு விடுமுறை*


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - ஜனவரி 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - January 1st Week - Tamil & English Medium Lesson Plan )...

 

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - ஜனவரி 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - January 1st Week - Tamil & English Medium Lesson Plan )...


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - ஜனவரி முதல் வாரம் - தமிழ் வழி...

 

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் -  ஜனவரி முதல் வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - January 1st Week - Tamil and English Medium)...


தீயணைப்புத் துறையில் இருந்து முதன்முறையாக இ.ஆ.ப. அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் அலுவலர்...

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அலுவலர் பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் ஒதுக்கீட்டிலிருந்து IASஆக நியமிக்கப்பட்டுள்ளார்...



மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியாக தற்பொழுது பிரியா ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பிரியா பணியில் சோ்ந்தாா். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராக நிலைக்கு அவர் உயா்ந்தாா்.


மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா்.


இந்த நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோ்வாகியுள்ளாா்.


தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தோ்வாகியிருப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வை எழுதி தனது 26 ஆவது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணியாற்ற துவங்கினார் பிரியா ரவிச்சந்திரன், இவருடைய சொந்த ஊர் சேலம். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீயணைப்புத் துறையில் பயணித்து வருகின்றார். 


தீயணைப்பு துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக இப்பொழுது அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது, மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழக வரலாற்றில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த ஒரு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 



இளமையும் கல்வியும்

பிரியா தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நல்லியப்பன் பட்டய கணக்காளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை தன்னுடைய வெற்றிக்கு உந்துதலாக இருந்ததாகவும், அரசு அதிகாரிக்குச் சேவையாற்ற வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் வாய்ப்பைப் பற்றி பேசுவது தானும் ஒரு அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டியதாகக் கூறுகிறார். தன்னுடைய வீட்டில் பாலின பாகுபாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள குளுனி மெட்ரிக்குலேசன் பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் ஆய்வு நிறைஞர் பட்டமும் பெற்றார். இவர் 1999ஆம் ஆண்டு பொதுச் சேவைகள் தேர்வை எழுதினார். தனது 26ஆவது வயதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முகமையின் (தொகுதி -1) பிரிவு அலுவலராக, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 2003ஆண்டில் பணியினைத் தொடங்கினார். இவர் தனது பணியினைத் துவங்கும் போது இரண்டு மாதக் கைக் குழந்தையின் தாயாக இருந்தார்; இருப்பினும் இத்துறையில் கடுமையான உடல் பயிற்சியினைப் பெற்றார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவைக் கல்லூரியில் தனது பிரிவு அலுவலர் பயிற்சியினைச் சிறப்பான முறையில் முடித்தார். இங்கிலாந்தின் க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள மோர்டன்-இன்-மார்ஷ் தீ சேவை கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.


அரசுப் பணி

பிரியா தனது முதல் பணி நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் பதவியேற்பதற்கு முன்னதாக கோவை மண்டலத்தில் பணியாற்றினார். கோயம்புத்தூர் -நீலகிரி மாவட்டங்களின் கோட்ட அலுவலராகவும் பணியாற்றினார். கோவையில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுச் செயலாற்றியதைக் கண்ட இப்பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டினர். இப்பகுதியின் அனைத்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். பின்னர் அவர் தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். இங்கு இவர் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தீயணைப்பு திறன்களைப் பயிற்றுவித்தார். மாநில பொதுச் சேவை ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட மகளிர் நிலைய அதிகாரிகளின் உடல் சரிபார்ப்பு உட்படப் பல அரசு குழுக்களின் உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு தேர்வானைத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கான குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பிரதிநிதிகளில் பிரியாவும் ஒருவர், தொழில்துறை இடர் மேலாண்மை படிப்பிற்காக ஜெர்மனிக்குச் சென்ற குழுவில் இருந்த ஒரே பெண்மணியும் இவரே ஆவார். 2012 சனவரியில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது, சென்னையில் பாரம்பரிய அரசு கட்டிடமான எழிலகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மத்திய சென்னையின் கோட்ட அதிகாரியான பிரியா அந்த இடத்திற்கு விரைந்தார். இந்த தீயைச் சமாளிக்க அதிக அளவில் தீயணைப்புத் துறை வீரர்களும் நவீன கருவிகளும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. கலாசு மகால் பாரம்பரிய மையத்தில் மீட்பு நடவடிக்கையின் போது பிரியா தனது சக அதிகாரியுடன் பலத்த காயமடைந்தார். இவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தீவிபத்தில் மீட்பு நடவடிக்கையில் பலியானார். பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்து அரசின் ஆதரவினை தெரிவித்தார். இவரது துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு வீரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே ஆவார்.



தமிழ்நாட்டின் வடக்கு மண்டல இணை இயக்குநராகப் பதவி உயர்வு மற்றும் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது மீட்புப் பணியில் இவரது மேற்பார்வை மற்றும் பணியினை கண்ட ஊடகங்கள் இவரது செயலினை வெகுவாக பாராட்டினர். 


விருதுகள்

தன்னலமற்ற துணிச்சலான செயலுக்கான தமிழ்நாடு முதலமைச்சரால் 2012ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம்

2013ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவர் விருது

பெமினா பெண் சக்தி விருது (2013)

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதல்வர் விருது (2014)


அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 வெளியீடு...


G.O.Ms.No.692, Dated: 09-11-2023 - 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை அரசாணை வெளியீடு...



2024ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Leave List 2024 - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 வெளியீடு...


>>> தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> அரசிதழ் எண்: 385, நாள்: 10-11-2023 - Gazette No.385, Dated: 10-11-2023 - Govt Holidays 2024...



2️⃣0️⃣2️⃣4️⃣


*ஜனவரி- 1  (திங்கள்) - ஆங்கிலப் புததாண்டு 


*ஜனவரி -15 ( திங்கள் ) பொங்கல்


*ஜனவரி-16 (செவ்வாய்) திருவள்ளுவர் தினம்


 *ஜனவரி -17 ( புதன்) உழவர் திருநாள்


*ஜனவரி-25 ( வியாழன்) தைப்பூசம்


 *ஜனவரி -26  (வெள்ளி ) குடியரசு தினம்.


-----------------------------

*மார்ச்-29 (வெள்ளி) புனித வெள்ளி

---------------------––-----

*ஏப்ரல் -1 (திங்கள்) நிதி ஆண்டு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)


*ஏப்ரல்-9 (செவ்வாய் ) தெலுங்கு வருட பிறப்பு


*ஏப்ரல் -11 (வியாழன்) ரம்ஜான்


*ஏப்ரல்-14 (ஞாயிறு) தமிழ் புத்தாண்டு & டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்


*ஏப்ரல்-21 (ஞாயிறு) மஹாவீர் ஜெயந்தி


---------------------------


*மே- 1 (புதன் ) மே தினம்

___________________


*ஜூன்-17 (திங்கள்) பக்ரீத்


------------------------------

*ஜூலை -17 (புதன் ) முஹரம்

---------------------------


*ஆகஸ்ட் -15 ( வியாழன் ) சுதந்திர தினம்

___________________


*ஆகஸ்ட் - 26 ( திங்கள் ) கிருஷ்ண ஜெயந்தி.


*செப்டம்பர் -7 (சனி ) விநாயகர் சதுர்த்தி.


*செப்டம்பர்-16 ( திங்கள்)   மீலாதுன் நபி

------------------------------


 *அக்டோபர் -2 (புதன் )காந்தி ஜெயந்தி


 *அக்டோபர்- 11 (வெள்ளி ) ஆயூத பூஜை


*அக்டோபர்- 12 ( சனி ) விஜயதசமி

____________________

*அக்டோபர்-31 (வியாழன் ) தீபாவளி.

------------------------------


*டிசம்பர்- 25  (புதன்) கிறிஸ்துமஸ்.


2024ஆம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...


மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்


திங்கட்கிழமை  - 6

செவ்வாய்கிழமை - 2

புதன்கிழமை - 5

வியாழக்கிழமை - 4

வெள்ளிக்கிழமை - 3

சனிக்கிழமை - 2

ஞாயிற்றுக்கிழமை - 2


அரசாணை எண்: 243, நாள்: 21-12-2023க்கான எதிர்கால நடவடிக்கைகள் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

 

 அரசாணை எண்: 243, நாள்: 21-12-2023க்கான எதிர்கால நடவடிக்கைகள் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (TETOJAC) மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு...



அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மன்றங்களுக்கு "முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்" என பெயர் சூட்ட தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...



அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மன்றங்களுக்கு "முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்" என பெயர் சூட்ட தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - Tamil Nadu Government press release to name the recently established Tamil Forums in Govt High / Secondary Schools as "Muthamizharignar Kalaignar Tamil Mandram"...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா புதிய பேருந்து முனையத்தில் திருநங்கைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கழிப்பறை...

 சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா புதிய பேருந்து முனையத்தில் திருநங்கைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கழிப்பறை...



மாவட்டத்திற்கு 50 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & பணியிடைப் பயிற்சி பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்...

 

 மாவட்டத்திற்கு 50 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி (In-service Training) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & பணியிடைப் பயிற்சி பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - DIRECTOR OF ELEMENTARY EDUCATION - TAMIL NADU STATE COUNCIL FOR SCIENCE AND TECHNOLOGY INSERVICE TRAINING PROGRAMME - 6th to 8th standard Science Subjects Handling Teachers Details...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 029085/ கே2/ 2023, நாள்: 26-12-2023...



>>> பணியிடைப் பயிற்சி பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை...



அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை...


ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதிப்பு. 


வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார்.


காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு.


ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


ஆப்பிள் நிறுவனத்திற்கும் - மசிமோ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் நீண்ட காலமாக காப்புரிமை சிக்கல் இருந்து வருகிறது.


ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு சொல்லும்’ Pulse Oximeter' sensor தொழில்நுட்பம்தான் ஆப்பிள் மற்றும் மசிமோ மருந்து நிறுவனத்தின் இடையே ஏற்பட்டு உள்ள பிரச்னை என கூறப்படுகிறது.


வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு செய்துள்ளது.


இதனால் ஆப்பிள் Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - செய்தி வெளியீடு...

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - செய்தி வெளியீடு...


இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.


தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamilnadu platform based gig workers welfare board) என்ற பெயரில் புதிதாக நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு நல திட்ட உதவிகள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இணையம் சார்ந்த 'கிக்' தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்களில் இணையவழி விற்பனை, வர்த்தக சேவை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையான பணியமைப்பில் மரபான முறையில் அல்லாமல், இணையதள நிறுவனங்கள், தொழிலாளர்களிடையே உடன்படிக்கை அடிப்படையில் வேலை வழங்கப்படுகின்றன.



இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும்’ என சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதன்படி தனி நல வாரியம் உருவாக்குவதற்காக இணையம் சார்ந்த கிக் (Gig) தொழில்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்ட அட்டவணையில் சேர்த்துஅரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாரியத்துக்கான திட்டக் கூறுகள் இயற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு, நலவாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாரியத்தில் 18 வயதுமுதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து பணிச் சான்று பெற்று

www.tnuwwb.tn.gov.in

என்ற இணையதளத்தில் GIGW எனும் குறியீட்டின்கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்றதொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையலாம் என தகவல்...




பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையலாம்: லிட்டருக்கு 4 முதல் 6 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெட்ரோல் விலை குறைப்பு: விலை குறைப்பு லிட்டருக்கு ரூ. 4-ரூ. 6 என்ற வரம்பில் இருக்கும் ஆனால் அது லிட்டருக்கு ரூ.10 ஆகவும் இருக்கலாம் என்று பிசினஸ் டுடே டிவிக்கு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


விலை குறைப்பு லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை இருக்கும்.


பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் ஃபின்மின் ஆகியவை சமீபத்தில் விவாதங்களை நடத்தி, இது தொடர்பான விருப்பங்களை PMO க்கு சமர்ப்பித்தன.


நவம்பரில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.55% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கத்தையும் எரிபொருள் விலை குறைப்பு குறைக்கும்.


பெட்ரோல் விலை குறைப்பு: 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பரிசீலித்து வருவதாக பிசினஸ் டுடே தொலைக்காட்சிக்கு அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.


விலை குறைப்பு லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன, மேலும் விலை குறைப்பின் சமமான சுமையை அரசாங்கமும் OMC களும் ஏற்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 


மேலும், லிட்டருக்கு 10 ரூபாய் வரை அதிக விலை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எரிபொருள் விலைக் குறைப்பு சில்லறை பணவீக்கத்தை நவம்பரில் மூன்று மாதங்களில் அதிகபட்சமாக 5.55% ஆகக் குறைக்கும்.


பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் விருப்பங்களை சமர்ப்பித்தன. இந்த இரண்டு அமைச்சகங்களும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் எரிபொருள் விலை குறித்து விவாதம் நடத்துகின்றன.


கச்சா எண்ணெய் விலை கடந்த 3 மாதங்களாக பேரலுக்கு 70-80 டாலர் என்ற அளவில் இருந்து வருவதால், எரிபொருள் விலை குறைப்புக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


நவம்பர் 2021 மற்றும் மே 2022ல் இரண்டு தவணைகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 என மத்திய அரசு குறைத்துள்ளது. கலால் வரி குறைப்பு முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டது மற்றும் சில்லறை விலை குறைந்தது..


அதன் விளைவாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் (எச்பிசிஎல்) ஆகிய மூன்று அரசாங்கத்தால் நடத்தப்படும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு FY24 இல் குறைந்த கச்சா எண்ணெய் விலை பெரிய லாபத்தை அளித்துள்ளது.


வியாழன் அன்று எண்ணெய் விலை சீரானது, ப்ரெண்ட் ஒரு பீப்பாய்க்கு $80 க்கு அருகில் வர்த்தகம் செய்தது, அதிக சரக்குகள் மற்றும் அமெரிக்காவில் சாதனை வெளியீடு செங்கடலில் உலகளாவிய வர்த்தக இடையூறுகள் பற்றிய பின்னடைவை மறைத்தது. 


பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை?


லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 


கடந்த 2022ம் ஆண்டு மே 22ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63ஆக குறைக்கப்பட்டது. இதுபோல் டெல்லியில் ரூ.96.72, மும்பையில் ரூ.111.35 என குறைக்கப்பட்டது. அதன்பிறகு இன்று வரை பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை.


இதுபோல், கடந்த 2022 மே 22ம் தேதி சென்னையில் டீசல் ரூ.94.24 ஆக குறைக்கப்பட்டது. டெல்லியில் ரூ.89.62, கொல்கத்தாவில் ரூ.92.76 என இருந்தது. இதன்பிறகு இன்றுடன் 588வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 


இந்த நிலையில், மக்களவை தேர்தலலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: 


புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகமும், நிதியமைச்சகமும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. இதில் எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.


பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாதத்துக்கு இரண்டு முறை இந்த இரண்டு அமைச்சகங்களும் ஆலோசனை நடத்தி வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் உள்ளது. இதனால் விலை குறைப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, என்றனர்.


சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, மாத சராசரியாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் 109.34 டாலராக இருந்தது. பின்னர் மே மாதம் 122.84 டாலராக அதிகரித்தது. ஆனால், ஜூன் மாதத்தில் 110.1 டாலர்., எனவும், ஆகஸ்ட்டில் 96.49 டாலர், செப்டம்பரில் 87.96 டாலர் என தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் கூட மார்ச் மாதம் 79.77 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, ஜூலை, செப்டம்பரில் 95.31 டாலராக உயர்ந்தது. இந்த மாத சராசரி ஸ்பாட் விலை 77.35 டாலராக உள்ளது.



செல்வமகள் சேமிப்பு திட்டம் - வட்டி 0.2% உயா்வு: மத்திய அரசு உத்தரவு...

செல்வமகள் சேமிப்பு திட்டம் - வட்டி 0.2% உயா்வு: மத்திய அரசு உத்தரவு...


செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.


இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.



 அதேபோல், மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.


இந்த வட்டி விகித மாற்றம் வரும் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும். மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடனுக்கான வட்டி விகிதத்தை 2.5 முதல் 6.5 சதவீதம் வரை ரிசா்வ் வங்கி அதிகரித்த நிலையில், வைப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களையும் வங்கிகள் உயா்த்தியுள்ளன.


2023-24 நான்காம் காலாண்டுக்கான (அதாவது 01/01/2024 முதல் 31/03/2024 வரை) சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைப்பு - Revision of Interest Rates for Small Saving Schemes (Q4 of 2023-24)...

 

2023-24 நான்காம் காலாண்டுக்கான (அதாவது 01/01/2024 முதல் 31/03/2024 வரை)  சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைப்பு - Revision of Interest Rates for Small Saving Schemes (Q4 of 2023-24)...





வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி...


வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்:  உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி - Fixed Deposit Interest rates Hiked: State Bank of India......


இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.


இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.


கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.


அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.


211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. 


3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட, அரையாண்டுத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு...

 


நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட, அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை (Half Yearly Exam) மாற்று தேதிகள் அறிவிப்பு.


11, 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள்.


 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு...


இறுதி வாக்காளர் பட்டியல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு...

 இறுதி வாக்காளர் பட்டியல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு...



 

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள் - TNPSC அறிவிப்பு...



 Combined Engineering Service Examination for which the OMR Method examination is scheduled to be held on 06.01.2024 F.N. & A.N. and 07.01.2024 FN & AN at 38 district centres.


ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள் - TNPSC அறிவிப்பு...


>>> TNPSC அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்து சமய அறநிலையத் துறை - செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...

 


இந்து சமய அறநிலையத் துறை - செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...


 POST OF EXECUTIVE OFFICER GRADE-I INCLUDED IN GROUP-VII A SERVICES IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) IS SCHEDULED TO BE HELD ON 06.01.2024 FN & AN and 07.01.2024 FN.


>>> Click Here to Download TNPSC Announcement...


SMC கூட்டத்தில் NSS மாணவர்கள் பங்கு பெறுதல் - SPD செயல்முறைகள்...

 

SMC கூட்டத்தில் NSS மாணவர்கள் பங்கு பெறுதல் - SPD செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்...

 குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் - Introduction of electricity bill payment facility through SMS...



தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா தலைமைத்துவ விருதுகள் வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 031660/ ஐ/ இ 1/ 2022, நாள்: 27-12-2023 - இணைப்பு: அரசாணை (1டி) எண்: 45, நாள்: 17-04-2023, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம்...



தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா தலைமைத்துவ விருதுகள் வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 031660/ ஐ/ இ 1/ 2022, நாள்: 27-12-2023 - இணைப்பு: அரசாணை (1டி) எண்: 45, நாள்: 17-04-2023, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம் - Anna Leadership Awards for the academic year 2023-2024 for the best school HeadMasters working in Elementary / Middle / High and Higher Secondary Schools - DSE & DEE Joint Proceedings Rc.No. : 031660/ I/ E 1/ 2022, Dated: 27-12-2023 - Annexure: Ordinance G.O.(1D) No: 45, Dated: 17-04-2023, Assessment Procedures and Form...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - கூட்டப்பொருள் நிரல் - மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள்...

 

2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (SMC Meeting) நடத்துதல் - கூட்டப்பொருள் நிரல் - மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 22-12-2023 - Conduct of School Management Committee Meeting in January 2024 - Agenda - State Project Director's Proceedings Rc.No: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 22-12-2023...



>>> மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 22-12-2023...



Kind attention Supervisors and BRTEs,

Please follow the SMC meeting for January 24 month.

1. Kindly concentrate on the SDP resolution. if it is completed ask the HMS to update in the parent app.

2. Inform the SMC members to follow the resolution.



Go 245

➡️குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி,


1. கல்வியின் தரத்தை கண்காணித்தல்.


2.பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்தல்.


3. அரசு மானியங்கள் பயன்படுத்துவதை கண்காணித்தல்.


4. பள்ளியை திறம்பட செயல்படுவதை கண்காணித்தல்.


➡️ ஏப்ரல் 2022 முதல் TNSED Parent செயலியில் பதிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றுதல். அனைத்து வகையான பள்ளிகளில் மொத்தம் மூன்று லட்சத்து 61 தேவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.


➡️மேற்கண்ட தேவைகளை நிவர்த்தி செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து தேவைகள் அனைத்தையும் முறையாக நிவர்த்தி செய்யவும் தீர்க்கவும் மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைத்தல்.


1. அரசின் தலைமைச் செயலர் - தலைவர்


2. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - செயலர்


3. நிதித்துறை செயலாளர் - உறுப்பினர்


4. பொதுப்பணித்துறை செயலாளர் - உறுப்பினர்


5. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் - உறுப்பினர்


6. நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைச் செயலாளர் - உறுப்பினர்



7. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் - உறுப்பினர்



8. சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் - உறுப்பினர்


9. போக்குவரத்து துறை செயலாளர் - உறுப்பினர்


10. எரிசக்தி துறை செயலாளர் - உறுப்பினர்


11. உள்துறைச் செயலாளர் - உறுப்பினர்


12. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் - உறுப்பினர்


13. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் - உறுப்பினர்


14. தமிழ்நாடு மாதிரி பள்ளி செயலாளர் - உறுப்பினர்




Go 239


➡️ஏப்ரல் 2022 முதல் செப்டம்பர் 2022 வரை tnsed பெற்றோர் செயலியில்  பதிவு செய்யப்பட்ட தீர்மானங்களில் 61% உட்கட்ட அமைப்பு சார்ந்த பதிவுகள் உள்ளது என்பதை கண்டறியப்பட்டுள்ளது.


➡️புதிய கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் மற்றும் கட்டிடங்கள் இடித்தல் போன்ற அரசு திட்டங்கள் உள்ளன. இவற்றில் பள்ளி மேலாண்மை குழுவை ஈடுபடுத்துவதன் மூலமாக உட்கட்டமைப்புகள் தேவைகள் நிவர்த்தி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.



➡️குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி பிரிவு 21-ல் 2 மற்றும் பிரிவு 22 இல் உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் அடங்கிய பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிப்பதன் மூலமாக உட்கட்டமைப்புகள் நிறைவேற்றப்படும் என அறியப்படுகிறது.


➡️உட்கட்டமைப்பு தேவைகள் கண்டறிந்து மாநிலத் திட்ட இயக்குனர் சமக்ரா சிக்ஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.


தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ரூ.10000/- ரூ.7000/- மற்றும் ரூ.5000/- - மாவட்ட ஆட்சியர் தகவல்...

 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித்துறை வாயிலாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ரூ.10000/- ரூ.7000/- மற்றும் ரூ.5000/- ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என கிருட்டினகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்...



பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்  நடைபெற உள்ளது...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் திருத்தம் செய்து அரசாணை (நிலை) எண்: 243, நாள்: 21-12-2023 வெளியீடு...


தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் திருத்தம் செய்து அரசாணை (நிலை) எண்: 243, நாள்: 21-12-2023 வெளியீடு - State Level Seniority Preference for Teachers Working in Elementary Education Department - Tamil Nadu Elementary Education Subordinate Service Amendment Ordinance G.O.(Ms) No: 243, Dated: 21-12-2023...



>>> Click Here to Download G.O.(Ms) No: 243, Dated: 21-12-2023...


1) 01.01.2024 முதல் மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும்.


2) பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே இனிமேல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற இயலும்.


3) பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்  State Seniority என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.


 தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை   தமிழ்நாடு முதலமைச்சர்   கவனத்திற்கு கொண்டு சென்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என   தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.


பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை...



 பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை...


அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  Broadband internet connection பெற்றவுடன் service provider (BSNL, Railtel & etc ) ஐ தொடர்பு கொண்டு


1. Static IP address


2. Gateway IP


3. Network mask


பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால்  இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..


2023-2024ஆம் கல்வியாண்டில், M.Phil., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது - UGC...

 2023-2024ஆம் கல்வியாண்டில், M.Phil., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது - UGC...


M.Phil., அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை, கடந்த ஆண்டு இதற்கான அரசாணை வெளியீடு


சில பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் M.Philக்கு மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து, UGC மானியக் குழு சுற்றறிக்கை...



எண்ணும் எழுத்தும் - வகுப்புகள் 1, 2 & 3 - பருவம் 3 - கணக்கு - பயிற்சி உள்ளடக்கம் PPT & காணொளிகள்...

 

 

எண்ணும் எழுத்தும் - வகுப்புகள் 1, 2 & 3 - பருவம் 3 - கணக்கு - பயிற்சி உள்ளடக்கம் PPT & காணொளிகள் - Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - Maths - Training Content PPT & Videos...


எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகளைப் பார்த்து வகுப்பறைச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்திட கீழே உள்ள Kalvi TV Official YouTube Channel link யை கிளிக் செய்யவும்...



>>> Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - Maths - Training Content PPT...



>>> Maths Model Class - Motivation...



>>> Maths Model Class - Concept Formation...



>>> Maths - Video Scribe...



>>> Maths Song...



>>> Maths Story of Subtraction...



>>> Maths Training PPT - Session 1...



>>> Maths Training PPT - Session 2...


Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - English - Training Content PPT & Videos...

 

எண்ணும் எழுத்தும் - வகுப்புகள் 1, 2 & 3 - பருவம் 3 - ஆங்கிலம் - பயிற்சி உள்ளடக்கம் PPT & காணொளிகள் - Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - English - Training Content PPT & Videos...


எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகளைப் பார்த்து வகுப்பறைச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்திட கீழே உள்ள Kalvi TV Official YouTube Channel link யை கிளிக் செய்யவும்...



>>> Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - English - Training Content PPT...



>>> Welcome Song - Animation Video 1...



>>> Welcome Song - Animation Video 2...



>>> Story Montage...



>>> Video Scribe...



>>> Food We Eat - Reading Time Video...



எண்ணும் எழுத்தும் - வகுப்புகள் 1, 2 & 3 - பருவம் 3 - தமிழ் - பயிற்சி உள்ளடக்கம் PPT & காணொளிகள்...

 

எண்ணும் எழுத்தும் - வகுப்புகள் 1, 2 & 3 - பருவம் 3 - தமிழ் - பயிற்சி உள்ளடக்கம் PPT & காணொளிகள் - Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - Tamil - Training Content PPT & Videos...


எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகளைப் பார்த்து வகுப்பறைச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்திட கீழே உள்ள Kalvi TV Official YouTube Channel link யை கிளிக் செய்யவும்...



>>> Ennum Ezhuthum - Classes 1, 2 & 3 - Term 3 - Tamil - Training Content PPT...



>>> 1. நாங்களே உருவாக்குவோம்...



>>> 2. நாங்களே படிப்போம்...



>>> 3. பத்தியைப் படித்தல்...



>>> 4. பாடப்பொருள் கற்பித்தல்...


தேன்சிட்டு - 16-31 டிசம்பர் 2023 இதழ் (ThenChittu - 16-31 December 2023 Magazine)...



தேன்சிட்டு - 16-31 டிசம்பர் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (ThenChittu - 16-31 December 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 16-31 டிசம்பர் 2023 இதழ் (ThenChittu - 16-31 December 2023 Magazine)...



>>> தேன்சிட்டு - 01-15 டிசம்பர் 2023 இதழ் (Then Chittu - 01-15 December 2023 Magazine)...

BT / BRTE நியமனத் தேர்வு ஒத்தி வைப்பு - TRB அறிவிப்பு...



07.01.2024 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BT / BRTE) நியமனத் தேர்வு மழை பாதிப்பு காரணமாக  04.02.2024 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் TRB அறிவிப்பு...



எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவப் பயிற்சி ரத்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...

 

எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவப் பயிற்சி ரத்து - தொடர்மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில், பள்ளி வேலை நாட்கள் குறைந்து உள்ளதால், மாணவர்கள் நலன்கருதி மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி தவிர்ப்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - Ennum Ezhuthum - Cancellation of training for 3rd term - Avoidance of direct training for third term for welfare of students due to reduced school working days in various districts due to incessant rains - Proceedings of Director of State Council of Educational Research and Training...



>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்...


நடப்பு 2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் புதிய மாற்றங்கள்...

 

நடப்பு 2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return E-filing) படிவத்தில் புதிய மாற்றங்கள்...


வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 1 மற்றும் 4ல் முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தனிநபர்கள், நிறுவனங்கள் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் (ரிட்டர்ன்) செய்வதற்கு பல்வேறு படிவங்கள் உள்ளன. இவற்றில், நடப்பு நிதியாண்டுக்கான அதாவது, கணக்கீட்டு ஆண்டு 2024-25க்கான ஐடிஆர் 1 மற்றும் 4 ஆகிய படிவங்களில் முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.


 தனிநபர்களுக்கான ஐடிஆர் படிவம் – 1ஐ (சகஜ்), ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், சம்பள வருவாய், ஒரு வீட்டு வாடகை வருவாய் மற்றும் வட்டி போன்ற இதர வருவாய் ஈட்டுபவர்கள், ரூ.5,000 வரை விவசாய வருவாய் ஈடுபடுவர்கள் தாக்கல் செய்யலாம்.


 இதுபோல், ஐடிஆர் படிவம் -1ஐ (சுகம்) தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர், ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் எல்எல்பி நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் தாக்கல் செய்யலாம்.


ஐடிஆர் – படிவம் 4 தாக்கல் செய்பவர்கள், பழைய அல்லது புதிய வரி விதிப்பில் விருப்பமானதை தேர்வு செய்தால் போதும். 


ஐடிஆர் 4 தாக்கல் செய்வோர், புதிய வருமான வரி விதிப்பை தேர்வு செய்ய படிவம் 10 – ஐஇஏ வை தாக்கல் செய்ய வேண்டும். படிவம் 1 மற்றும் 4ல், அக்னி வீர் திட்டத்துக்கு நிதி வழங்கியதற்கு 80 சிசிஎச் -ன் கீழ் வருமான வரிச்சலுகையைப் பெற, புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 01-11-2022க்கு பிறகு மேற்கண்ட திட்டத்துக்கு நிதி வழங்கியவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். ஐடிஆர் படிவம் 4ல் ஆண்டு வர்த்தக வரம்பை அதிகரிக்க பணமாக பெறப்பட்டது குறித்து சேர்ப்பதற்கு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என, வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் வழக்கமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்தான் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை டிசம்பரிலேயே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


2024 ஆம் ஆண்டு - கணித மாத நாட்காட்டி...

 


>>> 2024 ஆம் ஆண்டு - கணித மாத நாட்காட்டி (Mathematics Calendar)...


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது...

பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது


ஊழல் புகார் தொடர்பாக ஜெகநாதனை கைது செய்த கருப்பூர் போலீசார்


துணைவேந்தராக பணியாற்றும் போதே வர்த்தக நிறுவனம் தொடங்கியதாக புகார்


போலி ஆவணங்கள் தயாரித்து, பல்கலை. கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் புகார்.


சேலம் பெரியார் பல்கலை., துணை வேந்தர் கைது...


போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார்  பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், மாநகர போலீசாரால் கைது.



பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.245, நாள்: 22-12-2023 - பள்ளி மேலாண்மைக் குழுக்களால் எழுப்பப்படும் தேவைகளைக் கண்காணித்து, ஆய்வு செய்து, முறையாக நிவர்த்தி செய்து தீர்க்க அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (SLMC) அமைக்கப்பட்டது - அரசாணை வெளியீடு...


பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.245, நாள்: 22-12-2023 - அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (SLMC) - பள்ளி மேலாண்மைக் குழுக்களால் (SMC) எழுப்பப்படும் தேவைகளைக் கண்காணித்து, ஆய்வு செய்து, முறையாக நிவர்த்தி செய்து தீர்க்க அமைக்கப்பட்டது - அரசாணை வெளியீடு (School Education Department G.O.Ms.No.245, Dated: 22-12-2023 - State Level Monitoring committee (SLMC) under the Chairmanship of Chief Secretary to Government - To monitor and review and systematically address and resolve the requirements raised by the School Management Committees - constituted - orders - lssued)...



>>> Click Here to Download G.O.Ms.No.245, Dated: 22-12-2023...



அரசு பள்ளிகளின்  பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பள்ளித் தேவைகளை கண்காணிக்கவும் மதிப்பாய்வு செய்து முறையாக நிவர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு அரசுத்  துறை செயலாளர்களைக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு...


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைப்பு.


பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன.


4 விதமாக (உட்கட்டமைப்பு, கற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை) தேவைகள் பிரிக்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்பட உள்ளன.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) ஏற்படுத்துதல் - நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...




அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) ஏற்படுத்துதல் - நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



Instruction to the User

Hi-tech Lab - MIDDLE SCHOOL...

 

  அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் கவனத்திற்கு...

அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி EMIS - ல் Hi-Tech Lab Site Preparation பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது. 


1. ஹைடெக் ஆய்வகத்திற்கான வகுப்பறையை கண்டறியும் போது, தேர்வுக்கு கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


2. HM / ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக அணுகும் வகையில் ஹைடெக் லேப் வகுப்பறையை கண்டறிவதில் கவனமாக திட்டமிட வேண்டும்.


3. மேசைகள்/நாற்காலிகள்   போன்ற தளவாட பொருட்கள் இல்லாமலும் , குப்பைகள்  அகற்றப்பட்டு  தெளிவாக இருக்க வேண்டும்.


4. அறையில் நீர் கசிவு மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் சரியான சுவர்கள் இருக்க வேண்டும்.

                          


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...