TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC Group 2 Exam Results Released
TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP 2 RESULT 2025
குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மே 15) வெளியிட்டுள்ளது.
TNPSC Group 2 Result வெளியானது
Link: https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி, கொள்குறி வகையிலான முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டதில், 5,83,467 பேர் தேர்வினை எழுதினர்.
முதல் நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 82 மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்த நிலையில் குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (மே 15) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ பதவிகளில் 1,936 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 20,033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஏற்கனவே தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் குருப் 2 நிலையில் 15 பதவிகளில் காலியாக உள்ள 537 இடங்களில் நியமனம் செய்வதற்கான தகுதிப் பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.