கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மனதில் நின்றவை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனதில் நின்றவை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

>>>''பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி... யார்?''

 
''சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால், அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி. சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி.

அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன், புத்திசாலி!''

>>>தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

நன்றி

>>>Have you observed these?

Psychologists Say :
1) If A Person Laughs Too Much, Even At Stupid Things, He Is Lonely Deep Inside.
2) If A Person Sleeps A Lot, He Is Sad.
3) If A Person Speaks Less, He Keeps Secrets.
4) If Some One Can't Cry, He Is Weak.
5) If Some One Eats In An Abnormal Manner, He Is Tensed.
6) If Some One Cries On Little Things, He Is Innocent & Soft-Hearted.
7) If Some One Becomes Angry Over Silly Or Petty (Small) Things, It Means He Needs Love......

>>>இலக்கணம் மீறிய கவிதை..!

''இலக்கணம் மீறிய கவிதை என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?''


''முதன்முதலாக ஒரு மழலை, அம்மாவை அழைக்கும் வார்த்தை 'ங்கா'.

தமிழில் மெல்லினத்தில் முதல் எழுத்து 'ங'. மற்ற எழுத்துக்களைவிடவும் மென்மையாக ஒலிப்பதால்தான் மெல்லினம் என்கிறோம். ஆனால், எந்த ஒரு வார்த்தையும் 'ங்'கை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குவதில்லை. ஏனெனில், தமிழ் இலக்கணப்படி வார்த்தைகளின் முதல் எழுத்தாக மெய்யெழுத்து அமையாது. உயிரெழுத்தோ, உயிர்மெய் எழுத்தோ மட்டும்தான் முதல் எழுத்தாக வரும்.

ம்மா, ப்பா என்றெல்லாம் எழுதுவதற்கு தமிழ் இலக்கணம் இடம் தருவதில்லை. ஆனால், குழந்தையின் 'ங்கா' மட்டும் இந்த இலக்கணங்களை மீறிய மழலைக் கவிதை.''

>>>முக்கியமான மூன்றுகள்...

மதிக்க வேண்டிய மூன்று :
¤ முதுமையானோர்
¤ மார்க்கம்
¤ சட்டம்

நேசிக்க வேண்டிய மூன்று :
¤ நேர்மை
¤ தூய்மை
¤ கடின உழைப்பு

போற்றவேண்டிய மூன்று :
¤ அறிவு
¤ அழகு
¤ பண்பு

பேணி வளர்க்க வேண்டிய மூன்று :
¤ திருப்தி
¤ தைரியம்
¤ மன மகிழ்ச்சி

தவிர்க்க வேண்டிய மூன்று :
¤ புகைத்தல்
¤ மது அருந்தல்
¤ சூதாடல்

அடக்க வேண்டிய மூன்று :
¤ நா
¤ வேதனை
¤ கோபம்

கட்டாயம் கவனிக்க வேண்டிய மூன்று :
¤ பேச்சு
¤ நடைமுறை
¤ செயல்கள்

ஆதரிக்க வேண்டிய மூன்று :
¤ வாக்குறுதி
¤ நட்பு
¤ பண்பு

ஒழிக்க வேண்டிய மூன்று :
¤ திருட்டு
¤ சோம்பல்
¤ பொய்

விரும்ப வேண்டிய மூன்று :
¤ கருணை
¤ நற்குணம்
¤ மன அமைதி

வெறுக்க வேண்டிய மூன்று :
¤ பெருமை
¤ அநீதி
¤ வாக்கு மீறல்

தப்பித்துக்கொள்ள வேண்டிய மூன்று :
¤ தீய எண்ண
¤ பொறாமை
¤ பிடிவாதம்

அஞ்சவேண்டிய மூன்று :
¤ களவு
¤ கோள்
¤ பொய்

எதிர் கொள்ள வேண்டிய மூன்று :
¤ கவலை
¤ மரணம்
¤ பயணம்

போரிட வேண்டிய மூன்று :
¤ தேசம்
¤ கண்ணியம்
¤ நட்பு

>>>குழந்தைகள் குறித்து கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதையில் இருந்து சில வரிகள்...

"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால
வாழ்வின் மகன், மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்;
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் -
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கியோ
நேற்றைக்கோ செல்வதில்லை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும்
வாழும் அம்புகள் அனுப்பபடும்
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"

(ஜன.6 : கலீல் ஜிப்ரான் பிறந்த நாள்.)

>>>கல்வி...!

தலை நிமிர்ந்து சொல்வேன்...

இன்று தமிழகத்தின் விலை உயர்ந்த பொருட்களில் நானும் ஒன்று....

இப்படிக்கு

கல்வி...!

>>>அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!

மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , 
ஆனந்த விகடன் இதழிலிருந்து....

மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி

முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்

அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.

ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?

அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்

இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்

இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!

>>>தந்தைக்கு சமர்ப்பணம்...!


ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம்...!

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்.

என்னை கருவாக்க சில நேரம்
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க இன்று
வரை எல்லாம் துறந்தார்.

இரவெல்லாம் கண்ணீர்
இதழ் எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன் _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்.

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்.

மாலையில் கைபிடித்து
மலையோரம் நடப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல.

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம் அதுவே
நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்.

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது.

உழவாத நிலத்திலே உணவு இல்லை
உருகாத தங்கத்தில் உருவம் இல்லை
ஊதாத குழலுக்கு இசையும் இல்லை
உதை வாங்கா பிள்ளைக்கு உயர்வும் இல்லை.

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது.

நான் படிக்காமல் தூங்கி இருந்த
நேரத்தில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார்.

என் எதிர்கால வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால வாழ்வையே
பணயம் வைத்தார்.

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி அனுப்பினார்.

எனை கல்லூரி சேர்க்க உடமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை வருத்தார்.

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார்.

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய் வாழ்கிறார்கள்.

>>>வீர சிவாஜி கற்ற பாடம்

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார்.

>>>அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

 
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...