கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செயல்முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயல்முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2025-2026 - Conducting "Kalai Thiruvizha" competitions - Guidelines



2025-2026 ஆம் ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத்திருவிழா" "Kalai Thiruvizha" போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


2025-2026 - Conducting "Art Festival" competitions in government and government aided schools - Guidelines - SPD, DSE & DEE Joint Proceedings 


பள்ளிக் கல்வி - 2025-26 - கல்வி சாரா செயல்பாடுகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத் திருவிழா" போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்.2220/ ஆ8 / கலைத்திருவிழா/ ஒபக/ 2025, நாள்: 24.07.2025 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 4 முதல் கலை திருவிழா போட்டிகள்


 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது


 


 இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


1) 1,2 ம் வகுப்புகள், 

2) 3, 4, 5-ம் வகுப்புகள், 

3) 6, 7, 8-ம் வகுப்புகள், 

4) 9, 10-ம் வகுப்புகள்,

5) 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.


*தலைப்பு*


 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும்.


*போட்டிகள்*


 கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை,

 உடுக்கை, 

பறை, 

மிருதங்கம், 

டிரம்ஸ், 

வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.


👉 *பள்ளி அளவில் போட்டிகள்*


 ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். 


 👉 *குறுவட்ட அளவில்* 

ஆகஸ்ட்.25 முதல் 29 வரை. 


👉 *வட்டார அளவில்*

 அக்டோபர். 13 முதல் அக்டோபர் 17 வரை

👉 *மாவட்ட அளவில்* 

அக்டோபர்.27 முதல் அக்டோபர் 31 வரை)


👉 *மாநில அளவில்*

 நவம்பர்.24 முதல் நவம்பர் 28 வரை


 போட்டிகள் நடைபெறும்.



தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 4 முதல் கலை திருவிழா போட்டிகள்


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


1,2 ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.


முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். அதை தொடர்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.


மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


👉மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். 


👉 தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். 


நன்றி


இன்று (25.07.2025) நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - SPD Proceedings



இன்று (25.07.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


DEE Proceedings : Relieve the transferred SGTs and allow the newly appointed Teachers to join the service on 25.07.2025



மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யவும், புதிதாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை 25.07.2025 அன்று பணியில் சேர அனுமதிக்குமாறும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24-07-2025 வெளியீடு 


Proceedings of the Director of Elementary Education to immediately relieve the transferred Secondary Grade Teachers and allow the newly appointed Secondary Grade Teachers to join the service on 25.07.2025, Dated: 24-07-2025


2025-2026 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி மாறுதல் பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் உடனடியாக விடுவிக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS 2025 : ஆய்வு அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து DSE & DEE இணைச் செயல்முறைகள்



SLAS 2025 : ஆய்வு அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து DSE & DEE இணைச் செயல்முறைகள்


SLAS : Duties of  Inspecting Officials : Instructions


SLAS 2025: DSE & DEE Joint Proceedings on the Work to be Done by the Inspecting Officers/ Headmasters/Teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணிநிரவல் ஆசிரியர்கள் விவரம் கோரி DEE Proceedings



பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி /அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 01-08-2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - உபரி இடைநிலை ஆசிரியர்களை பிற ஒன்றியம் /பிற கல்வி மாவட்டம் / பிற மாவட்டத்திற்கு பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது - பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் , நாள் : 21-07-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சரியாக பாடம் கற்பிக்காத ஆசிரியர்களின் கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பெறப்பட்ட புகார் - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



சரியாக பாடம்  கற்பிக்காத ஆசிரியர்களின்  கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பெறப்பட்ட புகார் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்


கோயம்புத்தூர் மாவட்டம் - திரு.V. ரவீந்திரன் என்பார் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடம் சரியாக கற்பிப்பது இல்லை என்றும், அவர்களின்  கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அளித்த புகார் மனு சார்ந்து - கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SGT Appointment Order Ceremony - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Appointment Order Ceremony for Secondary Grade Teachers to be held in Chennai on 24.07.2025 - Proceedings of the Director of Elementary Education


TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து DEE செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / ஊராட்சி / நகராட்சி /மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம். 24.07.2025 வியாழன் அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பணிநியமன ஆணை வழங்கும் பணி மாவட்டங்களில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டியாக பணிபுரியம் பணிக்காக - பணி ஒதுக்கீடு வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 | Director Proceedings


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2430 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


 அதுசமயம் இடைநிலை ஆசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படவுள்ளது . இவ்விழாவானது 24.07.2025 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது . அதன்பொருட்டு , பணிநியமனம் பெறுவதற்கு பணிநாடுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தோராயமாக 5,000 - க்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே , பணி நியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்களை அவரவர் மாவட்டத்திலிருந்து விழா நடைபெறும் அரங்கித்திற்கு வரவழைக்கும் வகையில் அவர்களை ஒருங்கினைத்து சென்னை வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 58 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் Nodal Block Education officer கள் அனைவரும் அவர்தம் பணிநாடுநர்களை தொடர்பு கொண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நல்ல முறையில் அழைத்து வரும் பணியினை மேற்கொள்ளுமாறு 58 Nodal Block Education officer கள் உடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்த 58 Nodal Block Education officer களும் 24,07,2025 அன்று காலை 8.00 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , இவ்விழாவில் இதர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 23.07.2025 காலை 11 அளவில் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் .. இப்பணிகள் சிறப்புடன் தொய்வின்றி நடைபெறும் வகையில் அனைவரும் வருகைதந்து , விழாவினை செவ்வனே நடத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



Nodal DEOs & BEOs விவரம்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா  அழைப்பிதழ் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Mutual Transfer : Application Procedure & Conditions - DSE Proceedings



மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் மாறுதல் ஆணைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை மற்றும் மனமொத்த மாறுதல் பெற விண்ணப்பிக்க நிபந்தனைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Procedure for Uploading Mutual Transfer applications on the EMIS website and Conditions for applying Mutual Transfer - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🏫🏫🏫🏫🏫🏫🏫🏫

DSE-  பள்ளிக்கல்வித்துறை

2025-2026 பொது மாறுதல்


மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் -

22-07-2025 முதல் 27-07-2025 வரை


 முதன்மை கல்வி அலுவலர் வழி ஆணைகள் வழங்குதல் 29-07-2025


 பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Dr. Radhakrishnan Award Instructions - DSE Proceedings



டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


Instructions for HeadMasters / Teachers Applying for Dr. Radhakrishnan Award - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings

 



2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings , Dated : 17-07-2025


2025-2026 : தமிழ் இலக்கிய மன்றம், English Literary Club மற்றும் வினாடி வினாப் போட்டிகள் - தலைப்புகள் & வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 17-07-2025


It is to be informed by the BRTEs to their respective schools concerned, to put the information regarding the literary and quiz club competitions  in the school notice board so as to ensure visibility for all students so that we can ensure maximum participation.


Kindly share pictures of the school notice board with the information of the competition in this group.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்



 டிட்டோஜாக் மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்


TETOJAC மறியல் போராட்டம் காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திலிருந்து மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள்


டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இரண்டு நாள் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


எனவே அருகில் உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிக அளவில் பள்ளிக்குச் செல்லக்கூடிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


கிணத்துக்கடவு வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NILP - 80 days Course Timetable - 100% Literacy Certificate Form - Director Proceedings , Dated: 28-06-2025

 

 

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - இரண்டாம் கட்ட திட்ட செயல்பாடுகள் - 80 நாள் பாட கால அட்டவணை - 100% எழுத்தறிவு பெற்றோர் சான்று படிவம் - மாவட்ட வாரியாக சேர்க்கப்பட வேண்டிய கற்போர் இலக்கு எண்ணிக்கை - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 28-06-2025



New India Literacy Policy - Phase II Scheme Activities - 80 days Course Timetable - 100% Literacy Certificate Form - District-wise Target Number of Learners to be Enrolled - Proceedings of the Director of Non-School and Adult Education, Dated: 28-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 

அனைவருக்கும் வணக்கம் 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2025-26 இரண்டாம் கட்ட கற்போர்களுக்கான கற்போர் எழுத்தறிவு  மையங்களை கல்வி வளர்ச்சி நாளான 15.07.2025  செவ்வாய்கிழமை அன்று  அனைத்து வட்டாரங்களிலும்  தொடங்கி வைத்து செயல்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உதவி திட்ட அலுவலர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் எழுத்தறிவு  மையங்களை தொடங்கி வைத்த புகைப்படங்களை இக்குழுவில் மையங்களின் பெயர் , வட்டாரம் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

DNFAE, Chennai


SMC Meeting on 25.07.2025 - Agenda and guidelines - SPD Proceedings

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 25.07.2025 (வெள்ளிக் கிழமை) நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 15-07-2025



School Management Committee Meeting in Government Schools to be held on 25.07.2025 (Friday) - Meeting Agenda and guidelines - Proceedings of the State Project Director, Dated: 15-07-2025



Dear All, 


This is to request you all please do ensure the proceeding for upcoming SMC meeting reaches all schools.


Thanks & Regards,


👇🏻 Upcoming School Management Committee (SMC) meeting scheduled on 25th July 2025.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



5% pay hike for Samagra Shiksha Scheme Employees - SPD Proceedings

 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி Samagra Shiksha திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 11-07-2025


5% pay hike for Consolidated Pay employees working under Samagra Shiksha Scheme - Proceedings of the State Project Director, Dated: 11-07-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு - பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க உத்தரவு


இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.


அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்றபின் பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது எனவும், ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Celebrating Kamarajar's birthday, July 15th, as Education Development Day - DSE & DEE Joint Proceedings

 


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள்


Celebrating Kamarajar's birthday, July 15th, as Education Development Day - DSE & DEE Joint Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Kamarajar Birthday My School, My Pride Competitions - DSE Proceedings



பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான என் பள்ளி, என் பெருமை போட்டிகள் குறித்து - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


My School, My Pride Competitions on the birthday of Perunthalaivar Kamaraj - Kalvi Valarchi Naal July 15th - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SMC Training - SPD Proceedings

 

 

 

SMC : 2025-2026 கல்வியாண்டு - தேர்ந்தெடுக்கப்பட்ட 1878 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?


 பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?


'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.


கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.


அதன்படி, இதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எளிதான அணுகுமுறை உருவாகும். ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும். ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது.


மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த கல்வித்துறையின் அறிவிப்பை குறை கூறினர். 


மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் மாணவர்களுக்கு கழுத்து வலி, பெண் குழந்தைகளுக்கு இடுப்பு வலி, ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.


இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டமானது நிறுத்தி வைக்கப்படு வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்தநிலையில், பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி உத்தரவை நிறுத்தி வைப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பு வருவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமரவைக்க வெளியிடப்பட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


Seat students in "ப" formation in classrooms - DSE Proceedings



பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களை "ப" வடிவில் அமரவைக்க பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


Classroom Seating Arrangement - DSE Proceedings


Director of School Education Proceedings to seat students in "ப" formation in school classrooms



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

 

 34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 


34 Government High / Higher Secondary School Headmasters promoted to District Education Officers - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Asiriyar Kedayam : July 2025 Magazine

  ஆசிரியர் கேடயம் : ஜூலை 2025 இதழ் Asiriyar Kedayam : July 2025 Magazine  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...