கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25% சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
25% சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2026-2027 : RTE மூலம் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு , தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை  நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை - 600 006.

ந.க. எண் . 2335/E1/2026, நாள். 27.03.2026

பொருள்

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், 2009, பிரிவு 12 (1) (C) இன்படி- 2026 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை (LKG / I Std) வகுப்பில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக. சேர்க்கை

பார்வை :

1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள். 2011.

2. அரசாணை (நிலை) எண்.271 பள்ளிக் கல்வித்துறை (சி2) नं. 25.10.2012.

3. அரசாணை (நிலை) எண் 60. பள்ளிக் கல்வித் (எக்ஸ்2) துறை, श्री 01.04.2013.

4. அரசாணை (நிலை) எண் 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, आनी 12.05.2014.

5.அரசாணை (நிலை) எண் 66, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, फ्रन 07.04.2017.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ໙ 12 (1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2025 2026 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, பார்வை (5) இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி RTE Act 2009 பிரிவு 12 (1) (சி ) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.

2. RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2025 -2026 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25% ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 6.4.2026 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7..4.2026 அன்று 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 15.4.2026 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்

RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

 RTE மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2342 , நாள் : 02-10-2025

மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு

ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025–26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

Government of Tamil Nadu Announces Commencement of RTE Admissions for 2025–26 Following Release of Funds by Government of India - Press Release 

The Government of Tamil Nadu announces the commencement of admissions under the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, for the academic year 2025–26 - Tamil Version & English Version 

 Press Release No: 2342 , Dated: 02-10-2025 & 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான RTE 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

* தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* W.P. No. 18427 of 2025-V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

* இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்

1. சேர்க்கை ஒதுக்கீடு

அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில்

* (LKG/1 std) 25% 

* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.

2. சேர்க்கை முறை

* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

3. முன்னுரிமை பிரிவுகள்

* ஆதரவற்றோர்

* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

* மாற்றுப் பாலினத்தவர்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத் திறனாளிகள்

* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.

4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்

* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு

* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.

* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்

* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.

RTE - கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - மாணவர்கள் சேர்க்கை 2025-26

RTE - இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - மாணவர்கள் சேர்க்கை 2025-26

மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை :

1. RTE சேர்க்கை மீண்டும் தொடங்குதல்: தனியார் பள்ளிகளில் 25% RTE ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை, முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதியை மத்திய அரசு வெளியிட்ட பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

2. தகுதி மற்றும் நன்மைகள்: தமிழ்நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்பு சேரும் குழந்தைகளுக்கு சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன, அவர்கள் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாகப் படிக்கலாம்.

3. பின்னணி மற்றும் சவால்கள்: மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்ததால், 2025-26 கல்வியாண்டிற்கான RTE சேர்க்கையை மாநில அரசு ஆரம்பத்தில் இடைநிறுத்தியது, இதனால் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற கவலைகள் எழுந்தன.

4. உச்ச நீதிமன்ற தலையீடு: RTE-க்கான நிதியில் தனது பங்கை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது, இது தற்போதைய சேர்க்கை மீண்டும் தொடங்க வழிவகுத்தது.

RTE Admission - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 RTE Admission - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ஐ முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதாடியதன் விளைவாக நமக்குரிய #RTE நிதியை பெற்றுள்ளோம்.

எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவச் சேர்க்கை நடைமுறைகள் தொடங்குகின்றன.

கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், நம் #திராவிட_மாடல் அரசு முறியடிக்கும்!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான RTE 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்  கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

* தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* W.P. No. 18427 of 2025-V. Eswaran vs. Government of Tamil Nadu & Others வழக்கில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

* இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்

1. சேர்க்கை ஒதுக்கீடு

அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில்

* (LKG/1 std) 25% 

* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.

2. சேர்க்கை முறை

* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

3. முன்னுரிமை பிரிவுகள்

* ஆதரவற்றோர்

* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

* மாற்றுப் பாலினத்தவர்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத் திறனாளிகள்

* ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.

4. வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்

* RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு

* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.

* புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்

* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது.

* 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் (RTE) சேர்க்கை அட்டவணை

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி - தேவையான சான்றிதழ்கள் - செய்தி வெளியீடு எண்: 018/042023, நாள்: 17-04-2023 (Right to Education Act – 25% Reservation of Seats in Private Schools for Academic Year 2023-2024 Application Date for Admission – Required Certificates – Press Release)...

>>> கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி - தேவையான சான்றிதழ்கள் - செய்தி வெளியீடு எண்: 018/042023, நாள்: 17-04-2023 (Right to Education Act – 25% Reservation of Seats in Private Schools for Academic Year 2023-2024 Application Date for Admission – Required Certificates – Press Release)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு - தேவையான சான்றிதழ்கள், அவற்றைப் பெற வேண்டிய அலுவலர்கள் விவரம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட (RTE) மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகள் (25% reservation for deprived and disadvantaged children in all non-minority private Self-Financed schools under the Right to Education Act (RTE) for the academic year 2022-2023 - Required Certificates, Competent Authorities and Advice Proceedings of the Liaison Officer of Free and Compulsory Right to Education (RTE) Act for children and the Director of Tamil Nadu Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 18-04-2022...

>>> 2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு - தேவையான சான்றிதழ்கள், அவற்றைப் பெற வேண்டிய அலுவலர்கள் விவரம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட (RTE) மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும்  தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகள் (25% reservation for deprived and disadvantaged children in all non-minority private Self-Financed schools under the Right to Education Act (RTE) for the academic year 2022-2023 - Required Certificates, Competent Authorities and Advice Proceedings of the Liaison Officer of Free and Compulsory Right to Education (RTE) Act for children and the Director of Tamil Nadu Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 18-04-2022...

>>> குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 25% சேர்க்கை - 2022-2023ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய சேர்க்கை நடைமுறைகள் சார்ந்த அறிவுரைகள் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் (Right to Free and Compulsory Education for Children Act (RTE) 25% Admission - Advice on Admission Procedures to be followed in the 2022-2023 Academic Year - Proceedings of the Director of Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 06-04-2022...

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 25% சேர்க்கை - 2022-2023ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய சேர்க்கை நடைமுறைகள் சார்ந்த அறிவுரைகள் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் (Right to Free and Compulsory Education for Children Act (RTE) 25% Admission - Advice on Admission Procedures to be followed in the 2022-2023 Academic Year - Proceedings of the Director of Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 06-04-2022...

>>> குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 25% சேர்க்கை - 2022-2023ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய சேர்க்கை நடைமுறைகள் சார்ந்த அறிவுரைகள் - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் (Right to Free and Compulsory Education for Children Act (RTE) 25% Admission - Advice on Admission Procedures to be followed in the 2022-2023 Academic Year - Proceedings of the Director of Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 06-04-2022...

🍁🍁🍁 தனியார் பள்ளியில் RTI சேர்க்கை தேர்வு பெற்ற மாணவர்கள் பட்டியல் பள்ளிகளில் இன்று வெளியீடு...

 தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இரண்டாம் சுற்றில் தேர்வான மாணவர்கள் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன.

இதற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12இல் தொடங்கி நவ.7-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 16,500 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தேர்வான மாணவர்களின் பட்டியல் புதன்கிழமை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படவுள்ளன. ஒருபள்ளியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...