கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளுக்காக தனிநபர் (Individual) முன்னாள் மாணவர்கள் (Alumini / Alumini Association) வழங்கும் நிதி மற்றும் குறு/ பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (Corporate Social Responsibility) போன்ற எவ்வகை நிதி / ரொக்கம்/ பொருட்கள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட்டாலும் அது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதளம் (https://nammaschool.tnschools.gov.in/#/) வாயிலாக மட்டுமே அளிக்கப்படுவதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திடல் வேண்டும் - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் ந.க. எண்: 002/ ஆ6/ நஊப/ 2023, நாள்: 28-02-2023 (Any type of funds/cash/goods and services provided by individual alumni (Alumini/Alumini Association) and corporate social responsibility (Corporate Social Responsibility) for government schools in the future will be provided through our school's website. All Chief Educational Officers shall ensure that the provision is made only through https://nammaschool.tnschools.gov.in/#/) – Member Secretary's Proceedings No. No: 002/ A6/ NOP/ 2023, Dated: 28-02-2023)...

 


>>> இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளுக்காக தனிநபர் (Individual) முன்னாள் மாணவர்கள் (Alumini / Alumini Association) வழங்கும் நிதி மற்றும் குறு/ பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (Corporate Social Responsibility) போன்ற எவ்வகை நிதி / ரொக்கம்/ பொருட்கள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட்டாலும் அது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதளம் (https://nammaschool.tnschools.gov.in/#/) வாயிலாக மட்டுமே அளிக்கப்படுவதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திடல் வேண்டும் - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் ந.க. எண்: 002/ ஆ6/ நஊப/ 2023, நாள்: 28-02-2023 (Any type of funds/cash/goods and services provided by individual alumni (Alumini/Alumini Association) and corporate social responsibility (Corporate Social Responsibility) for government schools in the future will be provided through our school's website. All Chief Educational Officers shall ensure that the provision is made only through https://nammaschool.tnschools.gov.in/#/) – Member Secretary's Proceedings No. No: 002/ A6/ NOP/ 2023, Dated: 28-02-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

சமூக பங்களிப்பு நிதி (CSR) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி இணையதளம் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என அதன் உறுப்பினர் செயலர் உத்தரவு....

☝️☝️☝️

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...

 


>>> பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


மார்ச் 2023 - பள்ளி நாட்காட்டி (March School Calendar)...



 மார்ச் 2023 - பள்ளி நாட்காட்டி (March Calendar)...

💦☀️💦☀️💦☀️💦☀️💦💦☀️💦


*🌸மார்ச் - 2023 பள்ளி நாட்காட்டி:-*


*04-03-2023 -- சனி --CRC ( மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் தவிர)*


*04-03-2023 --சனி --மண்டல ஆய்வு -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் பள்ளி முழு வேலை நாள்.*


*11-03-2023 -- சனி -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்களுக்கு CRC( மாறுதலுக்கு உட்பட்டது)*


*13-03-2023 -- திங்கள் -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டப் பள்ளிகளுக்கு ஈடு செய்யும்  பொது விடுமுறை.*


*🌸22-03-2023 -- புதன் -- தெலுங்கு வருடப்பிறப்பு -- அரசு விடுமுறை.*


*🌸வரையறுக்கப்பட்ட விடுமுறை. (RL)*


*04.03.2023 - சனி -- அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்.*


*06.03.2023 -- திங்கள்-- மாசிமகம்.*


*07.03.2023 -- செவ்வாய் -- சாபே பரத்.*


*24.03.2023 -- வெள்ளி -- ரம்ஜான் முதல் நாள்.*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


ஊழியர்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுதல் - மாண்புமிகு நிதி மற்றும் மனித வளம் மேலாண்மை துறை அமைச்சரின் அலுவலகத்தால் கோரப்பட்ட விரிவான அறிக்கை - CPS இலிருந்து OPS ஆக மாற்றக் கோரும் ஊழியர்களின் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியல் - நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் கடிதம் (CPS - Conversion of Employees from Contributory Pension Scheme to Old Pension Scheme - Detailed report sought for by the Office of the Hon'ble Minister for Finance and HRM- List of pending cases of employees seeking conversion from CPS to OPS- Particulars called for-Regarding - Finance Department Additional Chief Secretary Letter No: 6127/ Fin(PGC)Dept/ 2023, Dated.19-02-2023)...



>>> ஊழியர்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுதல் - மாண்புமிகு நிதி மற்றும் மனித வளம் மேலாண்மை துறை அமைச்சரின் அலுவலகத்தால் கோரப்பட்ட விரிவான அறிக்கை - CPS இலிருந்து OPS ஆக மாற்றக் கோரும் ஊழியர்களின் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியல் - நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் கடிதம் (CPS - Conversion of Employees from Contributory Pension Scheme to Old Pension Scheme - Detailed report sought for by the Office of the Hon'ble Minister for Finance and HRM- List of pending cases of employees seeking conversion from CPS to OPS- Particulars called for-Regarding - Finance Department Additional Chief Secretary Letter No: 6127/ Fin(PGC)Dept/ 2023, Dated.19-02-2023)...



>>> Public Works Department Joint Secretary Letter...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 










தமிழ்நாடு அரசு பணியில் 2003ஆம் ஆண்டு ஆணை பெற்று 2004இல் சேர்ந்தவர்கள் - பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெறவே சுற்றறிக்கை - பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்...



25-02-2023 அன்று நடைபெற்ற Group 2 - முதன்மை தேர்வில் ஏற்பட்ட இடையூறு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விளக்கம் (Disruption in Group 2 - Mains Examination held on 25-02-2023 - TNPSC Explanation)...



>>> 25-02-2023 அன்று நடைபெற்ற Group 2 - முதன்மை தேர்வில் ஏற்பட்ட இடையூறு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விளக்கம் (Disruption in Group 2 - Mains Examination held on 25-02-2023 - TNPSC Explanation)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


SAMAGRA SHIKSHA - SNA ACCOUNT BANK TRANSACTION - HEAD WISE COMPONENT CODES (PRIMARY / MIDDLE/ HIGH/ HIGHER SECONDARY SCHOOLS)...

   



>>> SAMAGRA SHIKSHA - SNA ACCOUNT BANK TRANSACTION - HEAD WISE COMPONENT CODES (PRIMARY / MIDDLE/ HIGH/ HIGHER SECONDARY SCHOOLS)...



>>> கனரா வங்கி - பள்ளி மானியம் - உரிய நிறுவனங்களுக்கு தொகை விடுவிக்கும் முறை (பட விளக்கங்களுடன்) Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps (With Pictures)...



>>> Canara Bank - SNA Account Login செய்யும் முறை (Flow Chart) - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


SAMAGRA SHIKSHA 

SNA ACCOUNT BANK TRANSACTION- HEAD WISE COMPONENT CODES


PRIMARY SCHOOLS COMPONENT CODES

1. School Composite Grant component code : F.01.18 

2. SMC Component Code Rs 3000/- 

i) Rs 1000 – F. 01.09.01 

ii) Rs 2000 – F. 01.10 

3. Safety and Security Rs 2000/- Component Code : 1.6.1.11.2 

4. PINDICS Component code : 1.6.3.25.5 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

MIDDLE SCHOOL COMPONENT CODES

1. School Composite Grant component code : F.01.18 

2. SMC Component Code Rs 3000/- 

i) Rs 1000 – F 01.09.01 

ii) Rs 2000 – F 01.10 

3. Safety and Security Rs 2000 /- Component Code : 1.6.1.11.2 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

4. PINDICS Component code : 1.6.3.25.5 

5. STEM & SCOPE Amount Rs 1200 /-Component code 

i) Rs 842 – F .03.14.01 

ii) Rs 358 - 1.6.3.25.6 

6. Part Time Instructor Salary component Code : F .01.24.01

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

HIGH SCHOOL COMPONENT CODES

1. Grants Component Code : F.03.12.01 

2. SMC Component Code Rs 3000 /- 

i) Rs 408 – F .01.31 

ii) Rs 1487 – F.03.03.01 

iii) Rs 1105 – F .03.03.03 

3. Safety and Security Rs 2000 /- Component Code : 1.6.3.24.02 

4. PINDICS Component code : 1.6.3.25.5 

5. STEM & SCOPE Amount Rs 1200 /- Component code 

iii) Rs 841 – F .03.14.01 

iv) Rs 359 - 1.6.3.25.6 

6. Part Time Instructor Salary component Code : F .01.24.01 

7. IE Rally Component Code (Rs 2500/-) - F.01.28 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

HIGHER SECONDARY SCHOOL COMPONENT CODES

1. Grants Component Code : F.03.12.01 

2. SMC Component Code Rs 3000 /- 

iv) Rs 408 – F .01.31 

v) Rs 1487 – F.03.03.01 

vi) Rs 1105 – F .03.03.03 

3. Safety and Security Rs 2000 /- Component Code : 1.6.3.24.02 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

4. PINDICS Component code : 1.6.3.25.5 

5. STEM & SCOPE Amount Rs 1200 /- Component code 

v) Rs 841 – F .03.14.01 

vi) Rs 359 - 1.6.3.25.6 

6. Part Time Instructor Salary component Code : F .01.24.01 

7. IE Rally Component Code - F.01.28 

8. Day Care & Giver Salary component code 

i) F.01.08.01 

ii) Day care & Giver Arrear Amount Code : F.01.31


2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச்-20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சட்டப் பேரவைச் செயலாளர் அறிவிப்பு, நாள்: 27-02-2023 (Tamil Nadu Financial Statement (Budget) for the year 2023-2024 will be presented on March 20 - Legislative Assembly Secretary Announcement)...

 


>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச்-20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சட்டப் பேரவைச் செயலாளர் அறிவிப்பு, நாள்: 27-02-2023 (Tamil Nadu Financial Statement (Budget) for the year 2023-2024 will be presented on March 20 - Legislative Assembly Secretary Announcement)...



சட்டமன்ற அலுவல் குழு கூடி தமிழ் நாடு சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என முடிவு செய்யும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (28-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (28-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 28, 2023



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். இழுபறியான தனவரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தொல்லைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : குழப்பம் நீங்கும். 


பரணி : மந்தத்தன்மை குறையும். 


கிருத்திகை : ஆர்வமான நாள்.

---------------------------------------



ரிஷபம்

பிப்ரவரி 28, 2023



உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை ஏற்படும். புதிய நபர்களால் அனுபவம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


ரோகிணி : ஆர்வமின்மையான நாள்.


மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

பிப்ரவரி 28, 2023



இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்கின்ற செயல்பாடுகளில் சுதந்திரம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




மிருகசீரிஷம் : இழுபறிகள் விலகும்.


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 28, 2023



ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மிக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பு ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் 




புனர்பூசம் : சேமிப்பை மேம்படுத்துவீர்கள். 


பூசம் : நிபுணத்துவம் வெளிப்படும். 


ஆயில்யம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 28, 2023



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் உண்டாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான வரவுகள் கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : லாபம் உண்டாகும்.


உத்திரம் : வரவுகள் கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

பிப்ரவரி 28, 2023



குடும்ப உறுப்பினர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கி பணிகளில் விவேகம் வேண்டும். இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அனுபவங்களால் எதையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : இலக்குகள் உண்டாகும்.


சித்திரை : தேடல் பிறக்கும். 

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 28, 2023



கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்கள் பணிகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வேலையில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும். 


சுவாதி : விவேகம் வேண்டும். 


விசாகம் : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------



விருச்சிகம்

பிப்ரவரி 28, 2023



உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியான பொருளாதாரம் மேம்படும். வெளிவட்டார நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




விசாகம் : ஆர்வம் மேம்படும்.


அனுஷம் : புரிதல் ஏற்படும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 28, 2023



நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்னல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




மூலம் : நெருக்கடிகள் மறையும்.


பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திராடம் : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------



மகரம்

பிப்ரவரி 28, 2023



பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

பிப்ரவரி 28, 2023



புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். விவசாய பணிகளில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பத்திரம் தொடர்பான துறைகளில் ஆதாயம் ஏற்படும். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




அவிட்டம் : அனுபவம் ஏற்படும். 


சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.


பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.

---------------------------------------



மீனம்

பிப்ரவரி 28, 2023



நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தனவரவுகளால் மேன்மை ஏற்படும். குடும்ப சூழ்நிலைகளை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள்.


ரேவதி : வாய்ப்புகள் மேம்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் : 135


அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.


பொருள்:

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது


பழமொழி :

It is no use crying over split milk


முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை



இரண்டொழுக்க பண்புகள் :


1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 


2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.


பொன்மொழி :


மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.


பொது அறிவு :


1. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் யார்?


 கலிலியோ. 


 2. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது? 


 பாதரசம்.


English words & meanings :


bland - tasteless food. adjective. Porridge is a bland food. சப்பென்று இருக்கும் ருசியற்ற உணவு . பெயரடை


ஆரோக்ய வாழ்வு :


தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.  பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.


பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்


தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.


தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.


சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


நீதிக்கதை


புலவரை வென்ற தெனாலிராமன்


ஒரு சமயம் விஜயநகரத்திற்கு, சகல சாஸ்திரங்களையும் அறிந்த வித்யாசாகர் என்ற ஒரு புலவர் வந்திருந்தார். தம்மை போல் புலமை வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என ஆணவம் கொண்டிருந்தார். அதனால் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள புலவர்களை எல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். 


அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராததைக் கண்ட வித்யாசாகர் ஆனவமுற்றார். 


தன் அவையில் சிறந்தவர்கள் யாரும் இல்லையா என இராயருக்கோ வருந்தினார். அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார் என்றார். இதை கேட்டதும் அனைவரும் உற்சாகமாக இருந்தனார். 


அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. மறுநாள் இராமன் ஆஸ்தான பண்டிதரைப் போல் விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். 


இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தார். வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? என்று கேட்டார். இராமன் கம்பீரமாக இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல் என்றார். 


இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்! என்றார். வித்யாசாகருக்கு குழப்பம் இதுவரை எத்தனையோ நூல் படித்திருக்கிறார்! கேட்டிருக்கிறார்! ஆனால் இராமன் கூறியது போல் இந்த நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. 


வித்யாசாகர்கு பயம் ஏற்பட்டது. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் வந்தது. அதனால் வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். 


அன்றிரவு வித்யாசாகர் சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. அதனால் அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார். மறுநாள் அனைவரும் வந்து கூடினார்கள். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. 


அப்பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். 


மன்னர் இராமனிடம்! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு! என்றார். இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. 


அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. 


இதன் உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார் அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். 


நீதி :

நமக்கு எல்லாமே தெரியும் என்று ஆணவத்துடன் இருக்கக் கூடாது...


இன்றைய செய்திகள்


28.02. 2023


* 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.


* தோட்டக்கலைத் துறையின் முயற்சியால் உதகையில் பூத்த ஹாலந்து துலிப் மலர்கள்.


* தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.


* தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.


* விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.


* அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


* 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்: துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.


* உலக குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம்.


* உலக டேபிள் டென்னிஸ் போட்டி கோவாவில் நேற்று தொடங்கியது.


Today's Headlines


* Assembly Speaker Appavu said that Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan is going to present the financial report for the year 2023-24 in the Legislative Assembly on March 20.


* Holland tulips bloomed in Utagai thanks to the efforts of the horticulture department.


* The Central Institute of Classical Tamil Studies has released a mobile application that is an audio version of Tolkappiyam.


 * Chance of rain for 3 days in south coastal districts of Tamil Nadu.


*  Prime Minister Narendra Modi has released Rs.16 thousand crores as the 13th tranche of funds under the Prime Minister's Financial Assistance Scheme for Farmers.


* The Delhi High Court has ruled that the Agnibad project will go ahead according to law.


 * 1.60 lakh buildings have been collapsed due to the earth quake: Construction of houses in Turkey begins.


 * World Boxing Series: 3 silver medals for India.


 * The World Table Tennis Tournament started yesterday in Goa.

 


இல்லம் தேடி கல்வி குறும்பட கொண்டாட்டம் குறித்த குறும்படம் (A short film on the celebration of Illam Thedi Kalvi short film)...



>>> இல்லம் தேடி கல்வி குறும்பட கொண்டாட்டம் குறித்த குறும்படம் (A short film on the celebration of Illam Thedi Kalvi short film)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (27-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (27-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 27, 2023



குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 




அஸ்வினி : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். 


பரணி : ஆரோக்கியம் மேம்படும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



ரிஷபம்

பிப்ரவரி 27, 2023



சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அவசரமின்றி எதிலும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.


ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.


மிருகசீரிஷம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

---------------------------------------



மிதுனம்

பிப்ரவரி 27, 2023



பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினரை பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். திடீர் பயணங்களால் விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும். 


திருவாதிரை : விரயங்கள் உண்டாகும். 


புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 27, 2023



மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உதவிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.


பூசம் : ஆதரவு மேம்படும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 27, 2023



மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : இழுபறிகள் மறையும். 


பூரம் : மாற்றங்கள் ஏற்படும். 


உத்திரம் : நெருக்கடிகள் மறையும்.

---------------------------------------



கன்னி

பிப்ரவரி 27, 2023



மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.


அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.


சித்திரை : நன்மை உண்டாகும்.

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 27, 2023



பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் விவேகம் வேண்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிக்கல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : தாமதம் உண்டாகும். 


சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.


விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

பிப்ரவரி 27, 2023



குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : வசதிகள் மேம்படும்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும். 


கேட்டை : தேடல் அதிகரிக்கும்.

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 27, 2023



மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மூலம் : தடைகள் விலகும்.


பூராடம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------



மகரம்

பிப்ரவரி 27, 2023



குடும்பத்தில் ஒத்துழைப்பும், ஆதரவும் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சிந்தனைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




உத்திராடம் : ஆதரவு ஏற்படும்.


திருவோணம் : புதுமையான நாள்.


அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

---------------------------------------



கும்பம்

பிப்ரவரி 27, 2023



முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : அனுபவம் உண்டாகும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------



மீனம்

பிப்ரவரி 27, 2023



குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப மதிப்பு அதிகரிக்கும். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.


உத்திரட்டாதி : வெற்றிகரமான நாள்.


ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் : 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.


பொருள்:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்


பழமொழி :

A wild goose never laid a tame egg


புலிக்குப் பிறந்தது பூனையாகாது



இரண்டொழுக்க பண்புகள் :


1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 


2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.


பொன்மொழி :


ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.


பொது அறிவு :


1. வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?


 பெரியார்.


 2. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன? 


 நரேந்திரர்.


English words & meanings :


balsam - a type of flowering plant. noun. balsam blooms in varieties of colour. காசித் தும்பை. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :


தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.


நீதிக்கதை


டில்லி அரசரை வென்ற கதை


ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவரை நேரில் காண விரும்பினார். அவரது திறமையையும் சோதிக்க விரும்பினார். எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். 


கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனை அழைத்து இதோ பார் ராமா! இங்கே உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் அந்த பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால், நானும் உனக்குப் பரிசு தருவேன். உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்குத் தண்டனை நிச்சயம் தெரிகிறதா! என்று எச்சரித்து அனுப்பினார். 


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றார். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காததைக் கண்டு திகைத்தார்... யாரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்பே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தார். இந்தச் சூழ்ச்சியை எப்படியும் முறியடிப்பேன், என முடிவு செய்து கொண்டார். மறுநாள் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். பாபர் நினைத்தார், ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே, அவனுக்கு சரியான தோல்வி என மகிழ்ந்தார். 


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்றார். பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார். 


நான் நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன். இதை அவர் மிகவும் சிரமப்பட்டுக் கூறினார். ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? என்று சிரித்தார். 


அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன். ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி. உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். அரசே!  எல்லோருக்கும் மரத்தில் பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே! பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. 


ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், அரசே! இந்த மாங்கனிகள் பழுத்தப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது என்றார். 


நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர். என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர். 


சற்று நிற்க முடியுமா அரசே? என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்துவிட்டு தெனாலிராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம், நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும். 


தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம் என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார். 


வெற்றியுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர். 


நீதி :

மன உறுதியுடன் எந்த காரியத்தைச் செய்தாலும் நிச்சயம் அது நமக்கு வெற்றியைத் தரும்.

இன்றைய செய்திகள்


27.02. 2023


* தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், டான்சீட் திட்டத்தின் மூலம் மானிய நிதி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


* சரியும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்: பில்லூர் திட்டத்தில் கூடுதல் குடிநீர் எடுத்து விநியோகிக்கும் கோவை மாநகராட்சி.


* சென்னை: தமிழகத்தில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


* இந்திய கல்வி முறையை வலுப்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.


* தென்சீன கடல் பகுதியில் சர்ச்சை நிலவும் சூழலில் இந்தோனேஷியா சென்றது இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் சிந்துகேசரி.


* உலக வங்கி தலைவராக இந்தியர்  அஜய் பங்கா   நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.


* பிரான்சில் நடந்த நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டி: ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்.


* சர்வதேச ஜூனியர் பெண்கள் ஹாக்கி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் 'டிரா'.


* துபாய் ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா 'சாம்பியன்'.


Today's Headlines


* Government of Tamil Nadu has announced that the startups can apply for grant funds through Tanseed scheme.


* Collapsing Siruvani Dam Water Level: Coimbatore to take and distribute additional drinking water in Pillur project.


* Chennai: Chance of light rain in delta and south coastal districts of Tamil Nadu on 27th and 28th: ​​Chennai Meteorological Department informs.


 * More allocation in budget to strengthen Indian education system - PM Narendra Modi proud.


 * India's submersible ship INS Sindhukesari went to Indonesia amid the ongoing dispute in the South China Sea.


 * Appointment of Indian Ajay Panka as President of World Bank - Announcement by US President Joe Biden.


* National Open Chess Tournament in France: Erode Grand Master Inian Champion.


 * International Junior Women's Hockey: India-South Africa makes Draw.


 * Dubai Open Tennis: Czech Republic's Krejcikova got 'Champion'


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...