கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்ஸ்பயர் - மானக் -(INSPIRE - MANAK) இன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2023, 23:59 மணிநேரம் (சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட்டிப்பு சாத்தியமில்லை (The last date for submissions of nominations under INSPIRE - MANAK has been extended until September 30, 2023, 23:59 hours (Saturday). No further extension shall be possible)...

*🏆Inspire Award students Nomination 2023-24 

*Time extended 30-09-2023

🌀மாணவர்கள் விவரங்களை பதிவு செய்வதற்காக  செப்டம்பர் 30 ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது....

பதிவு செய்யாத பள்ளிகள் இந்த கால நீட்டிப்பை பயன்படுத்திக் கொள்ளவும்....

செப்டம்பர் 30க்கு பிறகு கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்....

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. அவர்கள் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1792, நாள்: 31-08-2023(Chief Secretary Mr. Shiv Das Meena IAS has directed all the District Collectors to take immediate steps to identify and dispose of the damaged buildings across Tamil Nadu - Press Release No: 1792, Dated: 31-08-2023)...

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள் கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. அவர்கள் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1792, நாள்: 31-08-2023(Chief Secretary Mr. Shiv Das Meena IAS has directed all the District Collectors to take immediate steps to identify and dispose of the damaged buildings across Tamil Nadu - Press Release No: 1792, Dated: 31-08-2023)...

>>> Click Here to Download Press Release...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) திட்டம் - தாக்க மதிப்பீடு - மூன்றாம் தரப்பு மதிப்பீடு - பள்ளிக் கல்வித் துறையானது ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியரை (PGT) ஒரு கணக்கெடுப்பாளர் குழுவிற்குப் பணியமர்த்த வேண்டும் - தாக்க மதிப்பீட்டை வழிநடத்த முதுகலை ஆசிரியர்களை ஒதுக்கக் கோரிக்கை - தொடர்பாக - SCERT இயக்குனரின் கடிதம் ந.க.எண்: 2411/எஃப்2/2023, நாள்:31.08.2023 (Impact Assessment - Third Party Evaluation - School Education Department is to depute one Post Graduate Teacher (PGT) per team of enumerators to guide the impact assessment process - request to allocate PG teachers to guide the impact assessment - Regarding - SCERT Director's Letter RC No: 2411/F2/2023, Dated:31.08.2023)...

>>> Click Here to Download SCERT Director's Letter...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Assessment are being conducted by the PG teachers with the help of enumerators - The PG teachers are from government school only.

From 

The Director, 

State Council of Educational Research and Training, 

Prof. Anbazhagan Education campus 

Chennai-6 

To 

The Director, 

School Education Department, 

Prof. Anbazhagan Education Campus 

Chennai - 600 006. 

RC No: 2411/F2/2023, Dated:31.08.2023

********* 

Sir, 

Sub: State Council of Educational Research and Training - Ennum Ezhuthum - request to allocate PG teachers to guide the impact assessment - reg. 

 ********* 

The closure of schools fora period of 19 months due to the COVID-19 pandemic resulted in a learning gap among children in primary classes. To address this learning gap effectively, Ennum Ezhuthum Mission, a flagship programme was launched by Hon'ble Chief Minister of Tamil Nadu in the academic year 2022-2023 for classes 1 -3. The Ennum Ezhuthum Mission has been designed to transform the quality of teaching and learning and the goal of the mission is to ensure that all students by age 8 in Tamil Nadu are able to read with comprehension and possess basic arithmetic skills by the year 2025. This mission has now been extended to classes 4 and 5 across all districts. 

To understand the effectiveness of the mission, SCERT have selected and trained a team of enumerators to conduct impact assessment to understand the learning levels of students studying in classes 1 to 5 in selected Government and Government-aided schools. The enumerators are split in groups. The impact assessment is to be conducted between 07.09.23 to 15.09.23 across 38 districts in Tamil Nadu. 

I am to state that, School Education Department is to depute one Post Graduate Teacher (PGT) per team of enumerators to guide the impact assessment process. The impact assessment will be coordinated by the DIET. The total number of Post Graduate teachers required for the impact assessment per district is annexed.

Annexure: Number of PG teachers required 

DIRECTOR 

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

17-09-2023 ஞாயிறு அன்றைய அரசு விடுமுறை 18-09-2023 திங்கள் கிழமைக்கு மாற்றம் - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அரசாணை (G.O.Ms.No.528, Dated: 31-08-2023) வெளியீடு (Government Holiday on 17-09-2023 Sunday changed to Monday 18-09-2023 - Government Holiday Ordinance (G.O.Ms.No.528, Dated: 31-08-2023) Issued on the occasion of Vinayagar Chaturthi)...

>>> Click Here to Download G.O.Ms.No.528, Dated: 31-08-2023...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

காலை உணவுத் திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் (TamilNadu Chief Minister Mr. M. K. Stalin strongly condemned the news published by Dinamalar newspaper about the Breakfast Scheme)...

 உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். 

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! 

#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.

கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்

- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பழமொழி :

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள் உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை

நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்

– அன்னை தெரசா

பொது அறிவு :

1. நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி

2. தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 Fahrenheit - a scale of temperature

வெப்பத்தை அளக்கும் கருவி, வெப்பமானி

டேனியல் காபிரியல் ஃபாரன்ஹீட் எனும் டச்சு நாட்டின் விஞ்ஞானி பெயரால் அழைக்கப் படுகிறது.

Fake - false one. பொய்யான

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.

ஆகஸ்ட்31

மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

31.08.2023

*ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி. சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பாக ஆதித்யா- எல் இயங்கும். இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சி ஆகும்.

*உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார்.

*தண்டவாள சீரமைப்பு பணியால் அரக்கோணம் - சென்னை ரயில்கள் ரத்து.

*2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்.

*உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு.

*யூ. எஸ். ஓபனில் மோசமான தோல்வியை சந்தித்தார் - வீனஸ் வில்லியம்ஸ்.

Today's Headlines

*Rehearsal over: Aditya L-1 ISRO is in action getting ready to fly.  Aditya-L will operate as an observatory to study the Sun.  This is a new initiative for India.

 *In Uttar Pradesh, a man spent 12 years building a two-storey house with 11 rooms underground.

 *Arakkonam-Chennai trains were canceled due to track maintenance work.

 *Air pollution in Chennai to increase by 27 percent by 2030- study informs.

 * World Cup chess tournament silver medalist

 Pragnananda received a grand welcome at the Chennai airport.

 *U.  S.  Worst loss in Open - Venus Williams.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

விளக்கம்:

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

பழமொழி :

Bitter is patience but sweet is its fruit

பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தயங்குகிறவன் கை தட்டுகிறான் துணிந்தவன்

கை தட்டல் பெறுகிறான்

- ஜான் கென்னடி

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சேலம்

2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: தஞ்சாவூர்

English words & meanings :

 bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

ஆகஸ்ட்30

வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள் 

வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது

நீதிக்கதை

பீர்பாலின் புத்திசாலித்தனம்

 காபூல் அரசருக்கு, பீர்பாலின்

அறிவாற்றலையும்,

புத்திசாலித்தனத்தையும் கேள்விப்பட்ட

அவர், பீர்பாலின் அறிவை ஆராய்ந்து

அறிய ஆவல் ஏற்பட்டது.

 அதனால், காபூல் அரசர், ஒரு கடிதம்

எழுதினார். அதில் மேன்மை தாங்கிய

அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,

ஆண்டவன் தங்களுக்கு நலன்கள்

பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.

தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம்

அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு

எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்

மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல்

அரசர்.

 கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு

குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே

புரியவில்லையேன்னு குழம்பி,

பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு.

அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில்

அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதி

அனுப்புங்கள் என்றார். அக்பரும்

அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.

 பிறகு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம்

அதிசயம் எப்படி அனுப்புவீர்? என்று

கேட்டார்.

 அதற்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து

அந்த அதிசயத்தைப் பாருங்கள் மன்னா

என்றார்.

 பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்து

ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த

பூசணிப்பிஞ்சு ஒன்றைக் கொடியுடன்

மண் குடத்திற்குள் வைத்து

வைக்கோலால் குடத்ததை மூடினார்.

 சிறிது நாட்களான பிறகு பூசணிப் பிஞ்சு

குடம் நிறையுமளவிற்கு

குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து

பெருத்திருந்தது. குடத்துக்குள் இருக்கும்

பூசணிக்காயை மட்டும்

வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி

விட்டார் பீர்பால்.

பிறகு அந்தக் குடத்தை அக்பரிடம்

காட்டினார் பீர்பால். அக்பருக்கு

ஆச்சரியம். குடத்தின் வாய் பகுதி உள்ளே

இருக்கும் பூசணிக்காயைவிட மிக

சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய

பூசணிக்காயை எப்படி நுழைத்தீர்கள்

எனக் கேட்டார். 

 பீர்பால் அதைப்பற்றி மன்னருக்கு

விளக்கிக் கூறினார். அந்தப்

பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல்

அரசருக்கு அதிசயம் என்று அனுப்பி

வைக்குமாறு கூறினார்.

 குடத்திற்குள் இருக்கும் பூசணியைப்

பார்த்த காபூல் அரசர், பீர்பாலோட புத்திக்

கூர்மையை எண்ணி வியப்பில்

ஆழ்ந்தார்.

நீதி :

புத்திசாலியாக இருந்தால் முடியாது என்பது கூட முடியும்.

இன்றைய செய்திகள்

30.08.2023

*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பு- மத்திய அரசு அதிரடி.

*காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

*சிறுநீரக செயல் இழப்பை கண்டுபிடிக்கும் 'ஸ்டிப்'  -சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அறிமுகம்.

* வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம் - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு.

*உலக பேட்மிட்டன் தரவரிசை: ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் எச்.எஸ். பிரனாய்.

*ஆசிய கோப்பை தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத இலங்கை அணி அறிவிப்பு.

Today's Headlines

*Cooking gas cylinder price reduced by Rs 200- central government action.

 * Cauvery Management Authority orders to release water at the rate of 5000 cubic feet per second for 15 days.

 * Chennai Government Hospitals

Introduce 'STIP' to detect kidney failure 

 * A blue full moon can be seen in the sky today - a rare event that only happens once in three years.

 *World Badminton Rankings: H.S.Pranai advances to sixth position.  

 *Sri Lankan team announced  the list without key players for Asia Cup series.

திருச்சி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வழங்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சிக் கையேடு - பணிப் பதிவேடு பராமரிப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் விடுப்பு விதிகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது (Training Manual for Headmasters of Higher Secondary Schools by Anna Administrative Staff College, Trichy - Service Record Maintenance, Pay Fixation and Leave Rules Enclosed)...

திருச்சி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வழங்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சிக் கையேடு - பணிப் பதிவேடு பராமரிப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் விடுப்பு விதிகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது (Training Module for Headmasters of Higher Secondary Schools by Anna Administrative Staff College, Trichy - Service Record Maintenance, Pay Fixation and Leave Rules Enclosed)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்று (29-08-2023) பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களுடனான சந்திப்புக்குப் பின் டிட்டோஜாக் இயக்கப் பொறுப்பாளர்கள் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (Today (29-08-2023) after a meeting with the Directors of School Education and Elementary Education, TETOJAC Bearers gave an interview to the media)...

>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் (Click Here to See the Video)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

விளக்கம்:

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

பழமொழி :

Better later than never

காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

நான் மெதுவாக நடப்பவன் தான்

ஆனால் ஒருபோதும் நடப்பதை நிறுத்தப்போவது இல்லை

– ஆப்ரஹாம் லிங்கன்

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: திருப்பூர்

2. தமிழ்நாட்டின் புனித பூமி என்று அழைக்கப்படுவது எது?

விடை: ராமநாதபுரம்

English words & meanings :

 an·ti·par·a·sit·ic - Destroying or inhibiting the growth and reproduction of parasites. Adjective. ஒட்டுண்ணியை அழிக்கும் எதிர்உயிரி. பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: கொழுப்பின் அளவைப் பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதன் மூலமும் நமது இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

ஆகஸ்ட்29

தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

நீதிக்கதை

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.

நீதி:

கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம.

இன்றைய செய்திகள்

29.08.2023

*இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் -அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ!

*கனமழைக்கு வாய்ப்புள்ள ஐந்து மாவட்டங்களை எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்.

*நான்கு மாநில அதிகாரிகள் இன்று ஆலோசனை. காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்.

*6 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து பொது வினாத்தாள் முறை அமல்.

*நான்கு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது டிராகன் விண்கலம் - நாசா தகவல்.

*19ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

*மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் - தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை - பாரு சவுத்ரி.

Today's Headlines

* This month the moon, next month the sun - Isro ready for the next action!

 *Meteorological Center warns of heavy rains in five districts.

 *Four state officials consult today.  Tamil Nadu once again urged the release of  Cauvery water.

 *For the students of class 6 to +2, common question paper system will be implemented from the current academic year.

 *Dragon spacecraft reaches International Space Station with four astronauts - NASA .

 *In the 19th World Athletics Championships, India's Neeraj Chopra threw the javelin with a maximum distance of 88.17 meters and won the gold medal.

 *Women's Steeplechase - National record holder by Indian athlete - Baru Chaudhary.

வகுப்பு 2 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 2 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

  வகுப்பு 2 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 2 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வகுப்பு 3 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 3 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் TNSED SCHOOLS செயலியில் வெளியிடப்பட்டுள்ளது (1st to 3rd Standard August Monthly Summative Written Exam Question Papers Released on TNSED SCHOOLS App)...

>>> வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> வகுப்பு 2 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 2 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> வகுப்பு 3 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 3 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சூரியனை ஆய்வு செய்ய அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகும் இஸ்ரோ - ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11:50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது (ISRO prepares to launch next spacecraft to explore Sun The Aditya L1 spacecraft is scheduled to launch on September 2 at 11:50 am)...

தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு (The results of the written test for Taluka Police, Special Police Force, Armed Forces SI jobs will be announced within a month - TNUSRB Notification)...

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம் - மாலை நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடல் - சார்பு - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.எ3/18816/2023, நாள்‌: 28.08.2023 (Teaching Staff - Education - Schools - Evening Special Training Program for Students Studying Class 9 to 12 in Adi Dravidar Welfare High and Higher Secondary Schools in the Academic Year 2023-2024 - Appointment of Special Evening Teachers and Allocation of Funds and Ordering - Regarding - Adi Dravidar Director of Welfare's Proceedings Rc.No.A3/18816/2023, Dated: 28.08.2023)...

>>> ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ (SMC) மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...

மின்னஞ்சல்‌:

ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை.5.

முன்னிலை:திரு.த.ஆனந்த்‌, இ.ஆ.ப..

ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌. 28.08.2023

பொருள்‌: ஆசிரியர்‌ பணியமைப்பு - கல்வி - பள்ளிகள்‌ - ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக.

பார்வை: 1. அரசாணை (ப) எண்‌: 198, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌(ஆதிந:7)துறை, நாள்‌:14.08.2023.

2. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அரசு கடிதம்‌ (நிலை) எண்‌. 38/-ஆதிந7/2022, நாள்‌: 10.03.2023.

ஆணை:

பார்வை ஒன்றில்‌ காணும்‌ அரசாணையில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ மேல்நிலை / உயர்நிலை , நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ / பதவி உயர்வு மூலம்‌ நிரப்பிடும்‌ வரை அல்லது இக்கல்வியாண்டில்‌ எது முன்னரோ அது வரையில்‌ மாணாக்கர்களின்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ பொதுத்தேர்வு எழுதும்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார்‌ செய்வதற்கு ஏதுவாகவும்‌, ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ 2016 பிரிவு 19இன்படி முற்றிலும்‌ தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

பார்வையில்‌ காணும்‌ அரசாணையினை பின்பற்றி, ஆதிதிராவிடர்‌ நல நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர்கள்‌, (இணைப்பில்‌ தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்‌) பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தற்காலிகமாக ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/.. மாதத்தொகுப்பூதியத்தில்‌ கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கலை பண்பாட்டுத் திருவிழா (KALA UTSAV) 2023-24 – பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்து - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/159/கலை/ஒபக/2023., நாள்: 23.08.2023 ( Samagra Shiksha (Integrated School Education) - Arts and Culture Festival (Kala Utsav) 2023-24 – Conduct of competitions at school, district, state and national levels – Issue of guidelines – Regarding – ​​Proceedings letter from State Project Director - Rc.No: ACE/159/Art/SS/2023., Dated: 23.08.2023)...

பார்வை: 1.2023-24ஆம் கல்வியாண்டிற்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை பரிந்துரைகள், நாள்: 23.02.2023.

2. மத்திய கல்வி அமைச்சகத்திடமிருந்து கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் (KALA UTSAV) நடத்துதல் சார்ந்து மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்ட வழிகாட்டுதல்கள்...

>>> Click Here to Download SPD Proceedings...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

விளக்கம்:

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

பழமொழி :

Better go to bed sleepless than rise in debt

கடனில்லா சோறு கால் வயிறு போதும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

. 2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்

இன்று கடினமாக உள்ளது

நாளை மோசமாக இருக்கும்

ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.

– ஜாக் மா

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சிவகாசி

2. காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: கோவை

English words & meanings :

 wad(n)- soft fibrous material used for padding, packing etc. தக்கை. 

xebec (n) - a three masted arab ship மூன்று பாய்மரங்களுடைய அரேபிய கப்பல்

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன.

நீதிக்கதை

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த  பட்டத்து

ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது" என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல்

மொத்த நீரையும் குடித்து

முடித்துவிட்டான் மன்னன்.

"பிரமாதம்... உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு,

ராணி"இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி ... நான் மொத்த

நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்"அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடித்தவள், ஒரு வாய் குடித்ததும்.... "சே... சே... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?" என்று கூறி அந்த நீரை துப்பி விடுகிறாள்.

"தேவி... நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது

தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, சிப்பியின் உள்ளிருக்கும் முத்தை அறியாமல்

முத்துக்களை  தவறவிடுவது போன்றதாகும்.  இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். 

இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு 'நன்றி'கூறுங்கள்.

இன்றைய செய்திகள்

28.08.2023

*சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டது-  இஸ்ரோ தலைவர் விளக்கம்.

*நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்.

*தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.

*13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு.

*உலக பேட்மிண்டன் போட்டி : அரையிறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கல பதக்கம் வென்றார்.

Today's Headlines

* Chandrayaan-3 Landing Site Named Shivashakti - ISRO Chief Explains

* Vikram Lander to continuously monitor moon's temperature - ISRO info.

* Chief Minister M K Stalin congratulates the teachers of Tamil Nadu who won the National Good Teacher Award.

* Chance of heavy rain in 13 districts today - Information from Meteorological Department.

*Asian Games Indian Women's Football Team Announcement

*World Badminton Tournament: Pranai loses in semi-final - wins bronze medal.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...