"கல்வி அறிவே வன்முறைக்கு மிகச்சிறந்த மாற்று மருந்து,'' என, ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி கூறினார். சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூரில், மாணவர்
விடுதி அடிக்கல் நாட்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு
விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
பேசியதாவது: அமைதி, சகிப்புத் தன்மை மற்றும் மனிதாபிமானம் அதிகரிக்க,
கல்வியே காரணமாக உள்ளது. இந்த சமுதாயத்தில் காணப்படும், வன்முறை, சகிப்புத்
தன்மையின்மை, மக்களிடையே காணப்படும் பிரிவினை போன்றவற்றை தீர்க்க,
மிகச்சிறந்த மாற்று மருந்து கல்வியே. கல்வி கற்பதன் மூலம், இந்தப்
பிரச்னைகளை தீர்க்கலாம். எனவே, இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும்
வாய்ப்புகளை, நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களையும், இந்த நாட்டையும்
முன்னேற்ற வேண்டும். நம் நாட்டில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள்
உள்ளன. கிட்டத்தட்ட மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர், கிராமங்களில்
வசிக்கின்றனர். என்ன தான், மருத்துவமனைகள், கட்டமைப்பு வசதிகள்
இருந்தாலும், அங்கு சென்று பணியாற்ற மருத்துவர்கள் தயாராக இல்லை. இந்த
சமுதாய நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாத வரை,
இப்பிரச்னைக்கு விமோசனமே இல்லை. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை,
இளைஞர்கள் உள்வாங்கிக் கொண்டு அதை, இந்நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த
வேண்டும். நாம் முக்கியமானவராக இருப்பது நல்லதே, அதே நேரத்தில், நல்லவராக
இருப்பது அதை விட நல்லது. இவ்வாறு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...