கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஐன்ஸ்டீன் மெச்சிய போஸ்!

 
சத்யேந்திர நாத் போஸ் ஓர் ஒப்பற்ற அறிவியல் மாமேதை. ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால்தான் உருவானது; இவர், விடுதலைக்கு முந்திய பிளவுபடாத வங்காளத்தில் படித்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்; காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்ததுதான்.

பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார். இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம். தலைசிறந்த பல அறிஞர்கள் இக்காலத்தில் தான் உருவானார்கள். வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர். ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட.

இவர் Max Planck's Law" மற்றும் "Light Quantum Hypothesis" பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். அசந்து போனார் அவர். இருவர் பெயரையும் இணைத்து அதை வெளியிட்டார் அவர். அந்த கட்டுரையே போஸ் ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது. அப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஐன்ஸ்டீன் கடிதம் கொடுத்து "அதில் போஸைவிட தலைசிறந்த விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா?"என அடிக்குறிப்பிட்டு அனுப்பினார்; உடனே டாக்கா பல்கலைகழக பேராசிரியர் ஆகினார் போஸ் என்றால் அவரின் மேதமையை உணர்ந்து கொள்ளலாம்.

இன்னும் எண்ணற்ற பிரிவுகளில் அவர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டே இருந்தார். இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன் பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

இவரின் நினைவாக போசான் என துகளுக்கு பெயரிடப்பட்டது. போர் எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது தடுமாறினார்; கண்மூடிய படியே போஸ் அமர்ந்திருந்தார் / ஒரு இடத்தில போருக்கு தடுமாற்றம் வரவே இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார் மனிதர். அது தான் போஸ். தாய்மொழி வழிக்கல்வி தான் அவசியம் என்றார். வங்காள மொழியில் அறிவியலை பயிற்றுவித்தார் அவர். அவரது நினைவுதிம் இன்று (பிப்.4). அவரை நினைவு கூர்வோம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...