கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிருவாக சீரமைப்பு காரணமாக புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education regarding the new District Education Office (Secondary Education, Primary Education and Private Schools) being allowed to function due to administrative restructuring) ந.க.எண். 49138/அ3/இ1/2022, நாள்.26.09.2022...



>>> நிருவாக சீரமைப்பு காரணமாக புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education regarding the new District Education Office (Secondary Education, Primary Education and Private Schools) being allowed to function due to administrative restructuring) ந.க.எண். 49138/அ3/இ1/2022,  நாள்.26.09.2022...


 தமிழ்நாடு  பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை -6

ந.க.எண். 49138/அ3/இ1/2022,  நாள்.26.09.2022

பொருள்: பள்ளிக்கல்வி  - நிருவாக சீரமைப்பு  - புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது – தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல் - சார்பு.


பார்வை: அரசாணை எண்.101,   ப.க.(வ.செ.) பள்ளிக் கல்வித்துறை, நாள்.18.05.2018

அரசாணை எண்.151, பள்ளிக்கல்வி (SE1(1), துறை, நாள்.09.09.2022

----

  பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்யவும் அரசின் நலத்திட்டங்களைச் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை முறையாகக்  கண்காணிக்க ஏதுவாக மாவட்டக் கல்வி அலுவலகங்களை (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) எனப் பிரிக்கப்பட்டும் பணிப்பகிர்மானம் செய்தும் பார்வை (2) இல் கண்டவாறு ஆணை வெளியிடப்பட்டது.  

அவ்வரசாணையில், புதியதாக 32 மாவட்டக் கல்வி அலுவலகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.  

மேலும் 16 மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 86 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்களை முறையான கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்தும் அப்பணியிடங்களை பணிநிரவல் மூலம் பூர்த்தி செய்யவும் அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.  

மேற்கண்ட அடிப்படையில் பட்டியலில் கண்டுள்ளவாறு அனைத்து அலுவலகங்களுக்கும் சீரான எண்ணிக்கையின்  அடிப்படையில் பணியாளர்களை நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுவதுடன் அவற்றின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு:- பணியாளர் நிர்ணய அறிக்கைப் பட்டியல்

ஒம்/-  முனைவர். பூ.ஆ. நரேஷ்,

இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)


பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வழியாக)      

அனைத்து மாவட்டக்கல்விஅலுவலர்கள்   (மின்னஞ்சல் வழியாக)                                   


நகல்:-

 மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,     சென்னை - 6. (தங்கள் அலுவலகப் பணியாளர்கள் சார்பான விவரம் அளிக்கும் பொட்டு  பணிந்தனுப்படுகிறது)

உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 6. 

இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6.

இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை 6.                    

இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை -6

இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை -6.

முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், சென்னை -6

இவ்வியக்கக அ2 பிரிவிற்கு  

தகவல் பலகைக்கு              


>>> நிருவாக சீரமைப்பு காரணமாக புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education regarding the new District Education Office (Secondary Education, Primary Education and Private Schools) being allowed to function due to administrative restructuring) ந.க.எண். 49138/அ3/இ1/2022,  நாள்.26.09.2022...







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...