கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>1,150 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில், 1,150 பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டனர். மீதமுள்ள முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில், நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு கவுன்சிலிங் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வரிசையில், பள்ளிக் கல்வித் துறையில், தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
காலை 9:30 மணிக்கு, மாவட்ட வாரியாக இருந்த, 6,000 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டன. இதன்பின், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் உமா (மேல்நிலைக் கல்வி), கண்ணப்பன் (இடைநிலைக் கல்வி), உஷாராணி (என்.எஸ்.எஸ்.,) ஆகியோர், கலந்தாய்வை நடத்தினர்.
பணிமூப்பு வாரியாக ஆசிரியர் அழைக்கப்பட்டு, அவரவர் தேர்வு செய்த இடங்களில், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகள் வழங்கப் பட்டன. அழைக்கப்பட்ட 1,234 பேரில், 1,150 பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...