இன்றைய காலத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் போன்றவற்றில் திறமையாக
செயல்பட, ஆங்கிலம் அவசியம். ஆங்கிலத்தில் பேசும் போது தன்னம்பிக்கை
மிளிரும். பிற மொழி பேசும் ஒருவரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் அத்தியாவசியம். பள்ளி, கல்லுõரிகளில் குறைந்த
மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆங்கிலத்தில் பேச, எழுத
தெரிந்திருந்தால், வேலை உங்களை தேடி வரும் என்பதில் ஐயமில்லை. வேலையில்
திறமை இருந்தும், ஆங்கில அறிவு இல்லாததால் குறைந்த சம்பளத்தில் ஏதோ ஒரு
வேலை செய்யும் சூழலும் ஏற்படுகிறது. ஆங்கிலம் பேசுவதற்கு சில டிப்ஸ்களை
தவறாது கடைபிடித்தால் நீங்கள் ஆங்கிலத்தில் அசத்தலாம்.
* எந்த மொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படியுங்கள்.
* ஆங்கிலத்தை நம்மால் படிக்க முடியாது என்ற எதிர்மறையான எண்ணங்களை கைவிடுங்கள்.
* ஆங்கில நாளிதழ், புத்தகங்கள் போன்றவற்றை தினமும் வாசியுங்கள்.
* ஆங்கிலத்தில் சிறிது சிறிதாக எழுத பழகுங்கள்.
* படிக்கும் போது தெரியாத, கடினமான வார்த்தைகளின் அர்த்தத்தை, அகராதியில் பாருங்கள்.
* தவறாக பேசினாலும் பரவாயில்லை, ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்ற நம்பிக்கையுடன் பேசுங்கள்.
* ஆங்கில டி.வி., செய்திகள், படங்கள் போன்றவற்றை தினமும் பாருங்கள்.
* ஆங்கிலத்தில் புலமை பெற்றவரிடம், ஆங்கில உச்சரிப்பை கற்றுக்கொள்ளுங்கள்.