கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி


Supreme Court's verdict in the case of Teacher Eligibility Test is mandatory for promotion



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் கால அளவைக் கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கால அளவு பெற்றுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


29/7/2011க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்.


29-07-2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


ஒரு ஆசிரியர் தனது பணியை தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது


 ஆசிரியர் தகுதி தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அவர் அடுத்த நிலை பதவி உயர்வை அடைய முடியும் என்றும் தீர்ப்பு


 பதவி உயர்வைத் தாண்டி பணியில் தொடரவே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமானது


இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள் வருமாறு..


 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்.


 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


 பதவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



தீர்ப்பின் முழுமையான விவரம் விரைவில்...




UDISE+ - முக்கியமான தகவல்கள்

 

UDISE+ - VERY IMPORTANT INFORMATION


Respected All,


The Student Profile ( *EP GP & FP* ) and *Add Student* option for new admissions will be enabled from September 1, 2025.


 *Please note that* Aadhaar is mandatory for all students. Admissions without Aadhaar will not be accepted. This is to ensure that all students obtain their Aadhaar.


 *Important Note:* 

If a student was admitted last year without an Aadhaar and their details are not reflected in the system, kindly instruct the parents to get Aadhaar for their child. Aadhaar enrollment facilities are available through government channels—please encourage parents to utilize them.


 *Admission Process Guidelines:* 


Direct admission is allowed only for Grade 1, LKG and UKG.


For higher classes, students must be imported from the drop box if the student is in Dropbox. 


If the student is active from another school, their details must be pulled using the " *Student Raise Request"* option.


Regarding the Aadhaar MBU verification and Student Raise Request reports, we have requested student-level reports, which will be made available in the coming days.


 *Note* :


 As previously informed, all necessary data should be kept ready for updating. *The two options will be enabled only from monday*.


ஒற்றை மாணவனுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் செலவிடும் பள்ளிக்கல்வித்துறை




கன்னியாகுமரியில் ஒற்றை  மாணவனுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் செலவிடும் பள்ளிக்கல்வித்துறை


கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார்.


அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது.


நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக தமிழ்நாடு அரசின் முயற்சி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இந்தப் பள்ளியில் இந்த ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


அதுமட்டுமல்ல, இந்த மாணவனுக்கு விசாலமான வகுப்பறை, பெரிய கலையரங்கம் என அனைத்து வசதிகளும் உள்ளது.


மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறும் இந்த இரு ஆசிரியர்களும், ஒரு மாணவனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் பள்ளியில் காத்திருக்கின்றனர்.


ஆண்டுக்கு சுமார் 24 லட்ச ரூபாய் செலவில் இந்த மாணவனின் கல்விக்காக பள்ளியைத் திறந்து வைத்திருக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை , இப் பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு மாணவனுக்காக இவ்வளவு செலவு செய்து பள்ளியை நடத்த வேண்டுமா? என்று ஒரு சிலர் கேட்கையில், ஒரு குழந்தை என்றாலும், கல்விக்காக அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது தானே என்கிறார்கள் மற்றொரு சாரார்.


சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஒரு மாணவிக்காக மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டி குறித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல்பாடும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 


கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம்  - தமிழ்நாடு அரசு அரசாணை (ப) எண்: 508, நாள் : 25-08-2025 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டதாக  செய்திகள் பரவி வருகிறது.


இது தவறான செய்தி. கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கல்லூரி பாதைக்கே/சந்து (College Lane) ' ஜெய்சங்கர் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், கல்லூரி சாலையின் பெயரை மாற்றியதாகத் தவறான செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது. 



ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்வதைத் தவிர்த்தல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை எண்: 47 வெளியீடு

 

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை (நிலை( எண்: 47, நாள் : 29-08-2025 வெளியீடு


Rules - Rule 56(1)(c) of the Fundamental Rules Not permitting to retire but retaining in service - Amendments to the Fundamental Rules and the Tamil Nadu Leave Rules - Orders - Issued


விதிகள் - அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) ஓய்வு பெற அனுமதிக்காமல் ஆனால் பணியில் தக்கவைத்துக்கொள்வது - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன


Avoidance of the practice of suspension of government employees on the day of retirement - Amendments to the Basic Rules and Tamil Nadu Leave Rules, Government Order G.O. (Ms) No.: 47, Dated: 29-08-2025 Issued


தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 47 

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கேரளாவில் அதிகரித்து வரும் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு : பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்



 கேரளாவில் அதிகரித்து வரும் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு : பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


கேரளாவில் அதிகரித்து வரும் 

அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பு... 


மூளைக்காய்ச்சலுக்கு  காரணமாக 

இருப்பது

"நிக்லேரியா ஃபவுலேரி" (Naeglaria fowleri)  எனும் ஒரு செல் உயிரி. 


அமீபா என்று உயிரியலில் படித்திருப்போம் தானே..? 

அந்த வகையைச் சேர்ந்த 

பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்ளும் ஒரு செல் உயிரி இது. 


இந்த நிக்லேரியா  -  அசுத்தமான குளம் , குட்டை , முறையாக க்ளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் காணப்படும். 


குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும்  வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. 


இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும். 

நீரை குளிக்கும் போது கலக்கும் போது மேலே எழும்பி நீரில் கலந்திருக்கும். 


இத்தகைய அமீபாக்கள் வாழும்  நீரில் 

குளிக்கும் போது மூக்குக்குள் நீர் புகும் நிலை ஏற்படும் போது 


மூக்கினுள் க்ரிப்ரிஃபார்ம் தகடு என்ற எலும்பு உள்ளது. இந்த எலும்பில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கும். அதன் வழி நம் நுகர்தலுக்குத் தேவையான நரம்பு கிளை பரப்பி நாசியின் சுவர்களுக்குள் படர்ந்திருக்கும். 


இந்த அமீபா இருக்கும் நீரை மூக்குக்குள் உள்ளிளுக்கும் போது

நுகர்தலுக்கான நரம்பில் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச்செல்லும் தன்மை கொண்டது. 


உள்ளே நுழைந்ததில் இருந்து மூன்று முதல்  பத்து நாட்களுக்குள்

நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். 


முதலில் தீவிர காய்ச்சல் 

அடங்காத தலை வலி 

என்று ஆரம்பித்து பிறகு 


மூளைக்காய்ச்சில் அறிகுறிகளான

பின் கழுத்துப் பகுதி இறுக்கம்

குமட்டல் / வாந்தி 

தலை சுற்றல் 

வலிப்பு ஏற்படுதல் 

பேதலிப்பு நிலை 

மூர்ச்சை நிலை 

கோமா 

இறப்பு ஏற்படக்கூடும் 


இந்த அமீபா - நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால் இதற்கு மூளை திண்ணும் அமீபா என்ற பெயரும் உண்டு. 


பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் மரணம் சம்பவிக்கும்


மரணத்திற்கான முக்கிய காரணம் 

இந்த நோயின் அறிகுறிகள் அனைத்தும் 

பாக்டீரியா எனும் மற்றொரு ஒரு செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் போன்றே இருக்கும் என்பதாலும்

இந்த அமீபா தொற்று அரிதிலும் அரிதானது என்பதாலும் 


நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - வேனில் காலங்களில் குளம் குட்டைகளில் நீச்சல் குளங்களில் அதிகமானோர் நீராடும் வழக்கம் உள்ளது. 


எனவே கட்டாயம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருப்பது பல உயிர்களைக் காக்கும். 


இந்தக் கிருமித் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.  


இந்த அமீபா தொற்று - பாக்டீரியா தொற்று போலவே தெரிந்தாலும் 

பாக்டீரியா கொல்லிகள் என்றழைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளுக்கு அடங்காது.


இதற்கென பிரத்யேகமான மருந்தாக 

ஆம்ஃபோடெரிசின் - பி என்பது விளங்குகிறது. 

ஆம்... கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் உப கொள்ளை நோயாக உருவெடுத்த கருப்பு பூஞ்சை ( ம்யூகார் மைகோசிஸ்) தொற்றுக்கு இந்த மருந்து தான் கேட்டது. 


இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை 

சரியான நேரத்தில் கணித்து 

மூளை தண்டு வட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து 

உடனடியாக ஆம்ஃபோடெரிசின்- பி  சிகிச்சை வழங்கிட வேண்டும். 


தமிழ்நாட்டில் நிக்லேரியா தொற்றுக்கு உள்ளான 47 வயது நபர் ஒருவருக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டதில் உயிர்பிழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களை தின்று முடிப்பதற்குள் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. 


அதனாலேயே இந்த நோயின் இறப்பு உண்டாக்கும் சதவிகிதம் கிட்டத்தட்ட 100% 


இதுவரை உலகில் ஐநூறுக்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 


இந்தியாவில் ஐம்பதுக்கும் குறைவான ஆதாரங்களே பதிவாகி உள்ளன. 


எனினும் முறையாகப் ஆவணப்படுத்தப்படாத 

ரிப்போர்ட் செய்யப்படாத

அல்லது தவறுதலாக பாக்டீரியாவினால்/ வைரஸினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் என்று ஆவணப்படுத்தப்பட்ட நோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். 


இந்தியாவில் இறப்பிற்கான காரணங்களை பிரேதக் கூறாய்வு மூலம் அறிவது மருத்துவ- சட்ட ரீதியான வழக்குகளுக்கு மட்டுமே கட்டாயமாக உள்ளது என்பதால் 

இது போன்ற மூளைக்காய்ச்சல் மரணங்களில் இந்த அமீபா தொற்றின் பங்கு குறித்து நம்மால் சரியான எண்களை அறிய முடியாமல் போகிறது. 


இந்த அமீபா தொற்று  ஏற்படாமல் எப்படி காத்துக் கொள்வது? 


- தேங்கி இருக்கும் குளம் குட்டை கண்மாய் போன்றவற்றின் அடிப்பகுதி சகதியை இயன்றவரை கிளறி விடாமல் குளிப்பது நல்லது


- இத்தகைய தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த அமீபா மூக்கு துவாரம் வழியாக மட்டுமே மூளையை அடைய முடியும். 


அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் அந்த நோய் ஏற்படுவதில்லை. 


எனவே மூக்குப் பகுதிக்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


- நீச்சல் குளங்களில் சரியான முறையில் க்ளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 

நீச்சல் பயிற்சி செய்யும் போது நோஸ் க்ளிப் அணிந்து கொள்வது சிறந்தது. 


- சில நேரங்களில் அசுத்தமான நீரில் 

மூக்கு துவாரங்களைக் கழுவுவதாலும் இந்த தொற்று பரவக்கூடும். இஸ்லாமியர்கள் - தொழுகைக்கு முன்பு செய்யும் ஒளு எனும் தூய்மை செய்யும் முறையில் மூக்கு நாசிக்குள் நீரை உறிஞ்சி சுத்தப்படுத்துவர். அத்தகைய நீர் தூய்மையானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 


 - இது போன்ற குளம் குட்டை கண்மாய்களில் குளித்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் / தலைவலி / கழுத்துப் பகுதி இறுக்கம் / வலிப்பு  போன்றவை ஏற்படின் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி 

மருத்துவரிடம் தாங்கள் எப்போது? எங்கு? குளித்தோம் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். 

இது விரைவில் நோயைக் கண்டறிய உதவும். 


குளம், குட்டைகளில் கண்மாய்களில் நீச்சல் குளங்களில் குளிக்கும் அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்படுவதில்லை. 


அரிதிலும் அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது. 


அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும் அமைகிறது. 


எனவே இந்தத் தொற்று குறித்த அதீத அச்சம் தேவையற்றது. 

மாறாக நிறைய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. 


வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்தும் அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். 


காலநிலை மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் 

வெப்ப மண்டல நாடான நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு தேவை என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி Supreme Court's verdict in the case of...