கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 10 கட்டளைகள்!

 
* எதைப்பற்றியும் தீர்மானமான முடிவெடுத்துக்கொண்டு செயலாற்றாதே.

* உண்மையை மறைத்து காரியங்களை சாதிக்காதே; ஒரு நாள் உண்மை வெளிப்பட்டு கட்டாயம் மாட்டிக்கொள்வாய்.

* உன்னால் ஜெயிக்க முடியும் என்கிற எண்ணத்தில் உறுதியாக இரு; சந்தேகம் என்பதையே மறந்துவிடு.

* யாருடைய அடக்குமுறையை கண்டும் அஞ்சாதே; எல்லா அடக்குமுறைக்கும் மாற்று இருந்தே தீரும். ஆகவே அடக்குமுறைகளை முழுமையாகவே புறக்கணி.

* உன்னை எதிர்ப்பது யாராக... ஏன் உன் குடும்பத்து உறுப்பினராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தைப் பயன்படுத்தாதே, விவாதத்தால்தான் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், அதிகாரத்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வெற்றி ஒரு மாயை, அது பொய்யானதும்கூட.

* நாசகர சிந்தனைகளை அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்த முயலாதே 'அவை அவற்றை மிஞ்சியும் தன் வேலையை காட்டும்.

* கிறுக்குத்தனம் என உன் சிந்தனைகளை பிறர் ஒதுக்கினால் கவலைப்படாதே; இன்றைய தலைசிறந்த சிந்தனைகள் என கொண்டாடப்படுபவையும் ஒரு காலத்தில் அவ்வாறே அழைக்கப்பட்டன.

* அமைதியாக ஒத்துப்போவதைவிட அறிவார்ந்த வாக்குவாதங்களில் மகிழ்ச்சி காண வேண்டும். பிறர் அறிவை நீ சரியாக மதிக்கிறபொழுது ஆழமான புரிதல் உண்டாகும்

* நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு; அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட துன்பகரமானது.

* முட்டாள்கள் சந்தோசம் இங்கே எனக்கொண்டாடும் மலிவான விஷயங்களை பார்த்து பொறாமைப்படாதே. அவர்கள் தான் அவற்றை இன்பம் தருபவை என்பார்கள்.

பழைமையோடு கூடிய தாராள நோக்கைப் பெற ஒரு கல்வியாளராக இந் 10 கட்டளைகள் தந்தவர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

இவர் ஓர் இணையற்ற சிந்தனையாளர், தத்துவஞானி மறைந்த தினம் இது. இவரின் தாத்தா இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்; மனிதர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். தனிமை வாட்டியது. பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்பொழுது அவரை யூக்ளிட் எழுதிய வடிவியல் பற்றிய நூலும், ஷெல்லியின் கவிதைகளும் கட்டிப்போட்டு மரணத்தில் இருந்து காத்தன.

கணிதத்தை தர்க்கத்தின் மூலம் கற்க முடியும் என இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றன. கணித தத்துவவியல் எனும் இவரின் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. போருக்கு எதிராக உலகப்போர் சமயத்தில் குரல் கொடுத்து விரிவுரையாளராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அணு ஆயுத போட்டியை தொடர்ந்து விமர்சித்தார். ஹிட்லர், ஸ்டாலின் இருவரின் சர்வதிகார போக்கையும் விமர்சித்த இவர், அமெரிக்கா வியட்நாம் மீது போர் தொடுத்த பொழுது அதையும் எதிர்த்தார்.

நாத்திகவாதியான இவர் மதத்தின் மீது கூர்மையான விமர்சனங்களை வைத்தார். இவரின் மேற்குலகின் தத்துவ வரலாறு நூல் பலபேரால் விரும்பி படிக்கப்பட்டது. இவரை ஒரு முறை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபொழுது ஏதேனும் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கிறதா எனக்கேட்க, மிக விலையுயர்ந்த அறிவு உள்ளது என்னிடம் !" என்றார் கம்பீரமாக.

* இன்று - பிப்.2: பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நினைவு தினம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...