கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் "பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு & கோவிட் 19 விழிப்புணர்வு" ரூ.500 நிதி ஒதுக்கீடு மற்றும் ஒரு நாள் பயிற்சி – இயக்குநரின் செயல்முறைகள்...

 பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை

  பள்ளி திறப்பதற்கு முன்  : 

1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் . 

2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


பள்ளிகள் திறந்த பின் : 

1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் – 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் – 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...