கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 21.11.2020 (சனி)...

 🌹நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை

ஏன் என்றால் 

நிஜம் என்பது சில நிமிடம் தான்                             ஆனால் நினைவுகள் என்றும் நிரந்தரம்.!

🌹🌹தகுதி பார்த்து யாரிடமும் பழகாதீர்கள்

என்றாவது ஒருநாள் நீங்கள் இறந்தபிறகு உங்கள் இறுதி சடங்கில் 

தகுதி உள்ளவன் ஆன்ராய்டு போனை பார்த்துக் கொண்டு இருப்பான் 

தகுதி இல்லாதவன் உங்களை சுமந்து செல்வான் 

நன்றாக யோசித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘சிபிஎஸ்இ 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்குக்கான பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும்  அதற்க்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

📕📘தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், ஆன்லைன் ரம்மி போன் இணையவழி விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது                                             

 📕📘அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நிறைவுப் பெற்றுள்ளது.

7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 80 பி.டி.எஸ். படிப்பு இடங்களில் 6 இடங்கள் நிரம்பவில்லை.  7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும்  நிரம்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

📕📘தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதிலளிப்பதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக MP-க்கள், ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதிலளிக்கும் மத்திய அமைச்சகங்கள்; கண்டனத்திற்குப் பிறகே ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர். அலுவல் மொழிச் சட்டத்தையே மீறுவதா? பாஜக அரசின் இந்தி ஆதிக்க - மொழிவெறி உணர்வைக் கண்டிக்கிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

📕📘மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு 7.5%ஆக குறைத்தற்கான காரணம் என்ன? என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

👉10% உள்ஒதுக்கீடு தர ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் பரிந்துரைக்கும் அதனை 7.5%ஆக குறைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். பதவி சுகத்துக்காக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை முதல்வர் பழனிச்சாமி காவு கொடுத்துவிட்டார். தமிழகத்திற்குள் நீட்டை அனுமதித்துவிட்டு இனி செட் தேர்வு பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காக்கிறார் முதல்வர் என குற்றம்சாட்டியுள்ளார்.

📕📘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

👉இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நவம்பர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவம்பர் 30ம் தேதியும் டிசம்பர் 1ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📕📘தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

👉தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE)  அறிவிப்பு.இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

📕📘MBBS 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம், கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது ,தமிழக அரசு உத்தரவு

📕📘MBBS படிப்பில் சேரும் ஏழை மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ   முன்வர வேண்டும் : நீதிபதிகள் அறிவுரை

📕📘அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்.

📕📘குளிர்காலத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

📕📘உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

-பள்ளிக்கல்வி துறை

📕📘7.5 % ஒதுக்கீட்டில் அதிக மாணவர்கள் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி" - நீதிபதி கலையரசன்

📕📘அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின்  11 பேரின் கல்விக்கட்டணத்தை ஏற்றார் - மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.       

 📕📘தேசிய திறனாய்வு தேர்வு -பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-11- 2020- அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

📕📘கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2 ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. படிப்பில் சேர நவ.30 வரை அவகாசம்

📕📘 அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பொருளாதார சூழலால் கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வலி மிகுந்தது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

📕📘அரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

📕📘மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 358 இடங்கள் நிரம்பின

📕📘பள்ளிக்கல்வி நீதிமன்ற வழக்குகள் - நிலுவை- உரிய காலத்தில் நீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்றி எதிர்வாதவுரை, மேல்முறையீடு, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தல் காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

📕📘சைனிக் பள்ளி: டிச.3 வரை விண்ணப்பிக்கலாம்

📕📘அமித்ஷா வருகையை கண்டு எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்.மத்திய அரசை கண்டு அதிமுக அரசுதான் பயப்படுகிறது  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.                                                  📕📘திருக்குவளையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார்

உதயநிதியுடன் கைதான திமுக தொண்டர்களும் விடுவிப்பு.

📕📘12, 500 கிராமங்களுக்கு அதிவேக இணையதள வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

ஏற்கனவே 1,871 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த அரசாணை மூலம் திட்டத்தின் மதிப்பு 2, 222 கோடி ரூபாயாக உயர்வு. 

📕📘வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் பொறுப்பில் இருந்து கோவை சத்யன் விடுவிப்பு

📕📘27.12.2020 அன்று நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர்.                                                     👉சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 👉விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 👉மதுரை, தேனி, விருதுநகர், மாவட்டங்களுக்கு சிஜிதாமஸ் வைத்யன் நியமனம்; 

👉நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சண்முகம், 

👉நாமக்கல், கரூருக்கு சிவசண்முகராஜா;

 👉கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

👉தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தி.மலை மாவட்டங்களுக்கு மா.வள்ளலார் நியமனம்;

 👉ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு ஆபிரகாம்; 

👉கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு கருணாகரன்

👉மேலும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சஜ்ஜன்சிங் ரா.சவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...