கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன என மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையை எதிர்த்து அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன. எனவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்ட ஆலோசகரை நியமித்தால் என்ன? என்று நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மூலம் வழக்குககள் தேங்குவதையும், மேல்முறையீடு செய்வதையும் விரைவுபடுத்தலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.