கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்டில் தேர்வு - CBSE...



 பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தி இல்லாதவர்களுக்கு, ஆக., 15 - செப்., 15க்குள், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.



கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. 'வெயிட்டேஜ்'பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, 13 பேர் அடங்கிய குழுவை, சி.பி.எஸ்.இ., அமைத்தது.இந்த குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ் 1 இறுதி தேர்வு மற்றும் பிளஸ் 2வில் யூனிட் தேர்வு, பருவ தேர்வு, மாதிரி பொதுத் தேர்வுகளில், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், 30:30:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 'வெயிட்டேஜ்' முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பள்ளி முதல்வர்கள் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை உடைய கமிட்டியை உருவாக்கி, மதிப்பெண் மதிப்பீட்டு பணிகளை துவக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.பள்ளிகள் மதிப்பீடு செய்து வழங்கும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய, சி.பி.எஸ்.இ., உருவாக்கியுள்ள இணையதளம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மதிப்பெண்களை, அடுத்த மாதம் 31ல் சி.பி.எஸ்.இ., வெளியிடும்.



இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, இம்ப்ரூவ்மென்ட் எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்.கொரோனா தொற்று பரவலின் நிலையை பொறுத்து இத்தேர்வு நடத்தப்படும். தற்ேபாதைய நிலவரப்படி, ஆக., 15 - செப்., 15க்குள் இத்தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், cbse.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இறுதி மதிப்பெண்களாக கருதப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...