கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTO அலுவலகம் செல்லாமல் Online மூலமாக Driving Learner License பெற விண்ணப்பிப்பது எவ்வாறு...?

 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களும் 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற நேரடியாக சென்று காத்திருக்க தேவையில்லை.


ஆன்லைன் மூலமாகவே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் காணலாம். தேவையான ஆவணங்கள் குறித்த விவரம், பிறந்த தேதி சான்று, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சுய அறிவிப்பு படிவம், புகைப்படம் ஆகியவை ஆகும்.


விண்ணப்பிக்கும் முறை:


தமிழக அரசின் www.parivahan.gov.in என்ற இணையதளத்தை open செய்ய வேண்டும்.


பின்னர் வலைத்தளத்தில் வலது பக்கம் மூலையில் “சாரதி” (Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்” (Driving Licence Related Service) கிளிக் செய்ய வேண்டும்.


அதில் உங்களது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஸ்கிரினின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்” (Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் கிளிக் செய்ய வேண்டும். அதில் நிறைய சேவைகள் இருக்கும்.


புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் வரும்.


அதில் (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுநர் உரிமம் இல்லை என்ற ஆப்ஷன் தேர்வு செய்து சப்மிட் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.


இப்பொழுது உங்கள் தனி நபர் விவரங்களை கற்றுநர் உரிமம் ஃபார்ம்  இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இதில் கியர் வாகனத்திற்கு கற்றுநர் உரிமம் அல்லது கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுநர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் உங்கள் ஸ்கேன் செய்த தனிப்பட்ட மூன்று அடையாள சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கடைசியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பிக்க வேண்டும்.


அதன் பின்னர் உங்களுக்கு ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதனை Print எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும், உங்களுக்கான குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் வந்துள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இதில் உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ், ஃபார்ம் 1 ஐ, ஃபார்ம் 1 எ ஆகியவற்றை பிரிண்ட் செய்து பின்னர் கட்டணத்தை செலுத்தி உங்கள் கற்றுநர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.


இதே முறையில் 30 நாட்களுக்கு பின்னர் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...