பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு)...
பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...
9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்ற உத்தரவு.
50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தல்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசு.
மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.
அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை.
வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
>>> பள்ளிகள் திறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு...