கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)...



ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிடக் கோரும் விண்ணப்பம் - மாதிரி (Model Application for Annual Increment)...


அனுப்புநர்:



பெறுநர்: 

வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள், 

வட்டாரக் கல்வி அலுவலகம்,

------------ ஒன்றியம்.


வழி : 

தலைமையாசிரியர் அவர்கள்,

         --------------------------------


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா, 


பொருள்: ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வினை வழங்கிட வேண்டுதல் - தொடர்பாக



வணக்கம். அரசாணை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021- ல் Creation of additional cells in Pay level என Pay matrix level நீட்டிப்பு செய்தும் Levels of pay திருத்தியமைக்கப்பட்டும் வெளிவந்த பின்னரும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு என சொல்லப்பட்டு வந்ததால், இதுபற்றி தெளிவுபெற பெறப்பட்ட RTI தகவலில், ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை எண். 90 நிதி(ஊ.பி)த்துறை நாள்: 26.2.21 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை 10 - ல் தளம் 40 - ஐ (ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



     அரசாணை எண்: 303 நிதித்துறை நாள்: 11.10.2017 - ன் schedule 1 மற்றும் III, அரசாணை எண். 90 நிதித்துறை, நாள்: 26.2.2021 ன் மூலம் மாற்றியமைக்கப்பட்டு ( substituted ) உள்ளதால், அதனைப் பரிசீலித்து அதனடிப்படையில் எனக்கு ஆண்டு ஊதிய உயர்வை ஆண்டுதோறும் வழங்கிட வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


       நன்றி. 


                       

                            தங்கள் உண்மையுள்ள

                ----------------------------

நாள்: 

இடம்: 


இணைப்பு:

1. RTI தகவல் கடித எண்.19861 / நிதி(சிஎம்பிசி)த்துறை, 2022 / நாள் : 05.05.2022

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...